காயல்பட்டினம் நகராட்சியில் திடக் கழிவிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் நவீன உயிரி எரிவாயு கூடம் (BIO-GAS PLANT) அமைக்க தமிழக முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா ஏப்ரல் 10, 2013 அன்று சட்டசபையில் அறிவிப்பு செய்தார்.
இதற்கு நன்றி கூறி - சமீபத்தில், தமிழக தொழிலாளர் நலத்துறை அமைச்சரும், அதிமுக தூத்துக்குடி மாவட்ட செயலாளருமான சி.த.செல்லப்பாண்டியன் முன்னிலையில், அ.இ.அ.தி.மு.க. வில் இணைந்த காயல்பட்டினம் நகர்மன்றம் உறுப்பினர்கள் சார்பாக நகரில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.
இந்த போஸ்டரில் - அவ்வேளையில் அ.இ.அ.தி.மு.க.வில் இணைந்ததாக கூறப்பட்ட வார்ட் 3 உறுப்பினர் பி.எம்.எஸ்.சாரா உம்மாள் பெயர் இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
1. Re:... posted byCnash (Makkah )[14 April 2013] IP: 87.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 26873
நன்றிகள் அனைத்தும் எங்கள் புரட்சி தலைவி அம்மா அவர்களுக்கே - மும்பை மொஹிதீன் - அதிமுக (!!) நகர்மன்ற துணை தலைவர் .. அதிமுக நகர்மன்றம ஆகி விட்டாதா? எப்போ?
2. Re:... posted bymohmedyounus (muscat)[14 April 2013] IP: 82.*.*.* Oman | Comment Reference Number: 26876
எப்ப கட்சியை விட்டு கல்தா அம்மா கொடுக்க போறாங்களோ தெரியவில்லை! ஆமா என்னங்க! "இதய தெய்வம்" "வணங்குகிறேன்" என்று வார்த்தை போஸ்டரில் இல்லை. வர வர கட்சியில் கட்டுப்பாடு குறைஞ்சிட்டே வருது.
3. appreciated one posted bysyedahmed (GZ, China)[14 April 2013] IP: 14.*.*.* China | Comment Reference Number: 26877
We extend our profound gratitude a core of thanks from our heart to our honourable CM for assigned beneficial agenda espceially for our native in the budgetory resolution . This shows the bond of affection with buoquent welfare gift given by her on behalf of ours. Moreover, some benefits will happened soon with miracally. Sure that our native will affirmed with splendid achievements in adequate manner during this revolutionery regime.
5. துணைத்தலைவர் விபரம்.. நேற்று - தி.மு.க, posted byநட்புடன் - தமிழன் முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்.)[15 April 2013] IP: 117.*.*.* India | Comment Reference Number: 26880
நகர்மன்ற தலைவரோ.. நகர்மன்ற துணைதலைவரோ.. நகர்மன்ற உறுப்பினர்களோ... அ.இ.அ.தி.மு.க-வில் இணைந்து விட்டால் அ.இ.அ.தி.மு.க நகர்மன்றம் ஆகிவிடாது..!அது "காக்கா" நகர்மன்றமாகவும் ஆகிவிடாது..! அது என்றைக்குமே காயல்பட்டினம் நகர்மன்றம் தான்.. அதை இந்த நகரில் போஸ்டர் ஒட்டியவர்கள் முதலில் புரிந்து கொள்ள வேண்டும்...
மேலும் காயல்பட்டினம்... அது என்றுமே.. காயல்பட்டினம் தான்.. அது ஒரு போதும் கலைஞ்ர் பட்டினமாகவோ..! அது "காக்கா" பட்டினமாகவோ யாராலும் ஆக்க முடியாது...
துணைத்தலைவர் விபரம்.. நேற்று - தி.மு.க,
இன்று - அ.இ.அ.தி.மு.க
நாளை - .......................?
நேற்று தி மு க கட்சியில் ஒரு சிறிய பதவியில் இருந்தார்... இன்று அ.இ.அ.தி.மு.க-வில் இணைந்து அக்கட்சியின் எந்த ஒரு பொறுப்பிலும் இல்லாது
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross