காயல்பட்டினம் சதுக்கைத் தெருவில், இம்மாதம் 13ஆம் தேதியன்று காலை 07.00 மணியளவில் காணக்கிடைத்த காட்சிகள்தான் இவை. காயல்பட்டினத்தில் பகுதி வேறுபாடின்றி அனைத்து தெருக்களிலும் இக்காட்சி அன்றாட நிகழ்வாகி வருகிறது.
கட்டிடங்களைக் கட்டும் வீட்டு உரிமையாளர்களின் கவனத்திற்கு வராமல், கல் - மணல் - ஜல்லி உள்ளிட்ட கட்டுமானப் பொருட்களை வாகனங்களில் கொண்டு வருவோரால் செய்யப்படும் இதுபோன்ற அலட்சியமான நடவடிக்கைகளால், அப்பகுதிகளின் வழியே செல்லும் பாதசாரிகள் மற்றும் வாகன ஓட்டிகளின் ஒட்டுமொத்த வசவுகளையும் கட்டிட உரிமையாளர்களே தாங்கிக் கொள்ள வேண்டிய நிலை உள்ளது.
கடந்த சில காலமாக, இதே தெருவில் சாலை நடுவில் கொட்டப்பட்ட மணல் காரணமாக அப்பகுதி வழியே சென்ற வாகனங்கள் சிக்கித் திணறிய காட்சிகள் வருமாறு:-
1. Re:... posted byசாளை S.I.ஜியாவுத்தீன் (அல்கோபார்)[16 April 2013] IP: 37.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 26888
முன்பு இது மாதிரியான நிகழ்வுகளை எல்லாம் காணும் போது அதிர்ச்சியாகவும், கோபமாகவும் வரும்.
இப்போது, அப்படி வருவது இல்லை. காரணம்.. பழகிவிட்டது. ஒரு தவறை திரும்பத்திரும்ப செய்யும்போது அது தவறாக தெரிவது இல்லை.
இதில் முக்கிய காரணம், லாரி ஓட்டுனர் தான். இரவு நேரத்தில் இப்படி கொட்டிவிட்டு சென்று விடுகிறார்.
இது மாதிரி ஒரு நிகழ்வு இதே இடத்தில் நடந்தது. வீட்டின் உரிமையாளரிடம் புகார் கூறியதும், அவர் பட படத்து, இரவில் ஒரு வேளை ஆட்களும் கிடைக்காமல், பலருக்கு ( மேஸ்திரி) தொலைபேசி அழைப்பு கொடுத்து உதவி கேட்டும், ஒன்றும் பிரயோசனம் இல்லாமல், பலரும் அவரிடம் கோபப்பட... அவர் அழுதே விட்டார். கூடுதலாக பலரும் மொபைலில் படம் எடுக்க.. அவர் படம் எடுத்த பாம்பை கண்டு நடுங்குவது போல நடுங்கியது, படமாக மனதில் ஓடுகிறது. !..!
** அதிகாலையில் ஆட்களை கெஞ்சி அழைத்து வந்து அப்புறப்படுத்தியதும் தான் அவர் முகத்தில் ஒரு மலர்ச்சி வந்தது.. **
2. Re:... posted byVilack SMA (HCM)[16 April 2013] IP: 14.*.*.* Vietnam | Comment Reference Number: 26893
வழக்கமாக நடைபெறும் காட்சிகள்தான் . பழகி விட்டது .
இப்போது , நமதூர் மக்கள்தான் இந்த கல் , மண் வியாபாரம் செய்கின்றனர் . சம்பத்தப்பட்ட நபர் யாரென்று தெரிந்துகொண்டு , நகராட்சி அவர்களுக்கு அபராதம் விதிப்பதுதான் சரி .
இந்த காட்சியை காணும் வாகன ஓட்டிகள் , ஏதோ ரோட்டில் தடை உள்ளது என்று நினைத்து தன் பாதையை மாற்றிகொள்வார் . ஆனால் , வேலையாட்கள் இந்த கற்களை சரிவர அள்ளாமல் , இறுதியில் அந்த பகுதி முழுக்க சிறு கற்கள் சிதறி கிடக்கும் . இந்த கற்கள்தான் இரு சக்கர வாகனங்களை பதம் பார்க்கும் .
3. Re:...பயமுறுத்தாதீங்கப்பா! posted byOMER ANAS (doha qatar.)[16 April 2013] IP: 78.*.*.* Qatar | Comment Reference Number: 26895
அம்மாடி,,,,யோ... இப்பதான் தோஹா கத்தரிலே நில அதிர்வு மதியம் 12.46க்கு (16.4.13) ஏற்ப்பட்டு துண்டைக் காணோம் துணியைக்காணோம் என்று வீட்டை விட்டு ரோட்டுக்கு ஓடிவந்து மூஞ்சி எல்லாம் பேய் அறைந்த மாதிரி கொஞ்ச நேரம் நின்று விட்டு ஹாய் தப்பித்தோம் பிழைத்தோம் என்று வீட்டுக்கு வந்து அப்பாடா.... என்று நெட்டை திறந்தால்,,, ரோட்டைக் காணோம் ஊட்டைக் காணோம் என்ற உங்கள் செய்தியை பார்த்ததும் உண்மையில், கொஞ்ச நேரத்துக்கு முன்பு நாங்கள் தப்பித்து ஓடிவந்த ரோட்டைத்தான் காணோம் போல் இருக்குதுன்னு பயந்து விட்டேன்பா!
4. Re:...சுற்றுப்புற சூழல் posted bymackie noohuthambi (kayalpatnam)[17 April 2013] IP: 117.*.*.* India | Comment Reference Number: 26909
இன்று குத்துக்கள் தெருவிலும் இப்படி ஒரு மண் குவியலை காண முடிகிறது. இதை தடுத்து நிறுத்துவது ஒன்றும் கஷ்டமான வேலை இல்லை. ஆங்காங்கே உள்ள சங்கத்து உறுப்பினர்கள் உடனடியாக வீடு கட்டும் உரிமையாளர்களை சந்தித்து, அவர்களுக்கு தெரியாமல் இரவில் மண்ணை கொட்டிவிட்டு சென்ற அவர்கள் லாரி காரர்களை கூப்பிட்டு எச்சரிக்கை செய்யலாம். மீறினால் காவல் துறைக்கு அறிவித்து அவர்கள் லைசென்சை பிடுங்கிவைத்து கொள்ளலாம்.
இந்த இணையதளத்தின் ஆசிரியரும் காயல்பட்டினம் சுற்றுசூழல் அமைப்பின் முக்கிய தலைவர். அவர் ஒரு போன் அழைப்பு மூலம் அதை நிவர்த்தி செய்யும் செல்வாக்கு படைத்தவர். அல்லது நகரமன்ற வார்டு உறுப்பினரே அதை செய்யலாம். ஒரு முறை இதை செய்தால் போதும். நிலைமை கட்டுக்குள் வந்து விடும். ஆவன செய்யும்படி வீட்டு உரிமையாளர்களை பணிவுடன் வேண்டிக் கொள்வோம். இந்த செய்தியை மக்கள் பார்வைக்கு கொண்டு வந்ததற்கு நன்றி.
5. Re:... posted byK.D.N.MOHAMED LEBBAI (JEDDAH)[18 April 2013] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 26929
அஸ்ஸலாமு அலைக்கும்.
ஏன் இப்படி நம் ஊர் மக்களின் செயல் பாடுகள் இருக்கிறது.இவர்கள் இப்படி செயல் படுவதால்.அப்பகுதி வழியாக ரொம்பவும் அவசரமாக போக கூடிய '''' வாகனகளுக்கு '''' எவ்வளவு கஸ்டம் தெரியுமா ......இதை ஏன் நம் மக்கள் கொஞ்சமும் யோசிப்பதும் இல்லை .....புரிவதும் இல்லை ......இதே பகுதியில் 2 மாதங்களுக்கு முன்பும் நடந்தது .....பொது மக்கள் நிறைய பேர்கள் '' முனங்கியும் '' / திட்டியும் / மனவருத்த பட்டு போனார்கள் .......தெரியுமா ....அதையும் நான் கண்ணால் கண்டேன் ............
தயவு செய்து யாராக இருந்தாலும்.சரி ,, தாங்கள் சிறப்பாக வீடு கட்டுங்கள் .நல்ல செயல் பாடுதான்.....ஆனால் பொது மக்களுக்கு எந்த ஒரு இடைஞ்சலும் இல்லாமல் செயல் படுவது தான் .....நல்லதும் கூட.மற்றவர்களின் '' துவாவும் '' தங்களுக்கு கிடைக்கும்.
ஒரு நல்ல காரியங்கள் நாம் செய்யும் போது ...... பிற நபர்களுக்கு இடஞ்சல் இல்லாமல் இருப்பது தான் நல்ல செயல் ........
ஆமா இப்படி பட்ட பொது மக்களுக்கு இடைஞ்சலாக தேவைகற்ற செயல்கள் செய்யும் போது நம் நகர் மன்றதின் அனுமதியை ய்ர்ருமே பெறுவதில்லையா?? என்ன ....... ஒன்றுமே நமக்கு புரிவது இல்லை ......பொதுவாகவே ஒருவன் பொது மக்களின் உணர்ச்சிகளையும் / அவர்களின் எண்ணங்களையும் உணர்ந்து நடப்பவன்தான் உண்மையில் சிறந்தவன் ..................
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross