தூத்துக்குடி மாவட்ட பொது சுகாதாரத் துறை மற்றும் காயல்பட்டினம் நகராட்சி ஆகியவற்றின் சார்பில், பொது மருத்துவ இலவச முகாம் - காயல்பட்டினம் எல்.கே.மேனிலைப்பள்ளி வளாகத்தில், 13.04.2013 சனிக்கிழமை காலை 09.00 மணி முதல் மதியம் 02.00 மணி வரை நடைபெற்றது.
இம்முகாமில், தூத்துக்குடி மருத்துவமனையின் பல்துறை மருத்துவர்களான டாக்டர் சத்தீஷ், டாக்டர் ரஜினி, டாக்டர் சண்முகநாதன், டாக்டர் காந்திமதி, டாக்டர் நித்யா, டாக்டர் ப்ரார்த்தனா, டாக்டர் அருண் குமார், டாக்டர் ராணி, டாக்டர் அகல்யா, டாக்டர் ஜெயராணி ஆகியோரடங்கிய மருத்துவக் குழுவினர் கலந்துகொண்டு, பொதுமக்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்தனர்.
பொது மருத்துவம், இரத்த சோகை, காய்ச்சல், நீரிழிவு, பால்வினை நோய், இதயம், தோல், காது, மூக்கு, தொண்டை, கண், மகளிர் நலம், குழந்தைகள் நலம் உள்ளிட்ட நோய்களுக்கு இம்முகாமில் பரிசோதனைகள் செய்யப்பட்டு, தேவையான மருந்துகளும் வழங்கப்பட்டது..
காயல்பட்டினத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த சுமார் 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் இம்முகாமில் பங்கேற்று மருத்துவ ஆலோசனை பெற்றனர்.
காயல்பட்டினம் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலைய அலுவலர்கள் மற்றும் செவிலியர் துணைப்பணியாற்றினர்.
முகாமை, தூத்துக்குடி மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குநர் உமா துவக்கி வைத்தார். துவக்க நிகழ்ச்சியில், காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ஆர்.சுப்பிரமணியம், காயல்பட்டினம் நகராட்சி ஆணையர் ஜி.அஷோக் குமார். நகராட்சி சுகாதார ஆய்வாளர் எஸ்.பொன்வேல் ராஜ், முகாம் நிகழ்விடம் அமைந்துள்ள 13ஆவது வார்டு நகர்மன்ற உறுப்பினர் எம்.எஸ்.எம்.ஷம்சுத்தீன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
தகவல் & படங்கள்:
ஹிஜாஸ் மைந்தன்
செய்தியாளர் - காயல்பட்டணம்.காம் |