மருத்துவத் துறையில் உலக காயல் நல மன்றங்களை ஒருங்கிணைப்பதற்காக விவாதிக்கப்பட்டு வரும் செயல்திட்டமான ‘ஷிஃபா’ அமைப்பிற்கு அலுவலக பொறுப்பாளர் தேவைப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, ‘ஷிஃபா’ செயல்திட்ட ஒருங்கிணைப்பாளர் சாளை முஹம்மத் முஹ்யித்தீன் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-
பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்
அன்பார்ந்த காயல் வாசிகளுக்கு அஸ்ஸலாமு அலைக்கும்.
வெளியூர் & வெளிநாடு காயல் நலமன்றங்களின் கூட்டமைப்பாக மருத்துவ உதவிக்கான 'ஷிஃபா' என்ற பெயரில் புதியதோர் அமைப்பை - இன்ஷாஅல்லாஹ் கூடிய விரைவில் துவக்கி அதற்கான அலுவலகத்தையும் நமதூரில் திறக்க உள்ளோம்.
நமது மக்களுக்கு மருத்துவ உதவி, மருத்துவ வழிகாட்டுதல்கள், அரசின் நல திட்டங்களை நமதூர் மக்களுக்கு எடுத்துரைத்து அவைகளை பெறுவதற்கான வழிவைகைகளை ஏற்படுத்தி கொடுத்தல், நகர் மக்களின் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் முயற்சிகளை முன்னெடுத்து செல்லுதல் போன்ற முக்கிய பணிகள் உட்பட பல்வேறு மக்கள் நல சேவைகளை இவ்வமைப்பு ஆற்றவுள்ளது. இதற்காக முழுநேர ஊதிய அடிப்படையில் பணியாற்ற அர்ப்பணிப்பு உணர்வும் திறமையும் வாய்ந்த அலுவலக நிர்வாக பொறுப்பாளர் (Adminsitrative Officer) ஒருவர் தேவைப்படுகின்றார். தகுதியுடையவராக தேர்ந்தெடுக்க படும் நபருக்கு கண்ணியமான ஊதியம் வழங்கப்படும்.
தகுதிகள்:
1. பொதுநல ஆர்வமுடையவராக, சமுதாய சிந்தனை மிக்கவராக இருத்தல் வேண்டும்.
2. ஏதாவது ஒரு இளங்கலை பட்டப்படிப்பை நிறைவு செய்தவராக இருக்க வேண்டும்.
3. ஆங்கிலத்திலும் தமிழிலும் சரளமாக அல்லது ஓரளவுக்காவது தொடர்பு கொள்ளக்கூடியவராக இருத்தல் வேண்டும்.
4. கணினியில் அலுவலகம் தொடர்பான கோப்புகளையும் , தகவல் தொடர்புகளையும் கையாளத் தெரிந்தவராக இருக்க வேண்டும்.
5. அரசின் மக்கள் நலத்திட்டங்கள் குறித்தும் அதனை மக்களுக்கு கிடைக்க செய்யும் வழிமுறைகளை ஏற்கனவே அறிந்திருத்தல், கூடுதல் தகுதியாக கருதப்படும்.
தொடர்புக்கு:
தகுதி வாய்ந்த ஆட்கள் தங்களது ஆவணங்கள் (Bio-data), நிழற்படத்துடன் (Photo) தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் முகவரி: kayalshifa@gmail.com
அல்லது
நிர்வாகி,
இக்ராஃ கல்விச் சங்கம்,
133/27 K.T.M Street
காயல்பட்டினம்
விண்ணப்பங்களை வந்து சேர வேண்டிய கடைசி நாள்: 28.04.2013
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
[செய்தி திருத்தப்பட்டுள்ளது @ 13:55 / 16.04.2013] |