காயல்பட்டினம் தீவுத்தெரு கீழ் முனையில், பெரிய முத்துவாப்பா வலிய்யுல்லாஹ் தர்காவையொட்டி அமைந்துள்ளது ஹாஜி வாவு அப்துல் கஃப்பார் வீடு.
17 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட இவ்வீட்டில், வீடு கட்டப்பட்ட 3ஆவது ஆண்டில் இயல்வாகை மரம் நட்டு வளர்க்கப்பட்டு வந்தது. அவ்வப்போது ஒரு சில பூக்கள் மட்டுமே பூத்த இம்மரத்தில், கடந்த 2009ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் முதன்முறையாக பூக்கள் கொத்து கொத்தாக பூத்துக் குலுங்கின. அதனைத் தொடர்ந்து, ஆண்டுதோறும் கோடைப் பருவமான மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் இம்மரம் முழுவதும் மஞ்சள் நிற இயல்வாகைப் பூக்கள் பூத்துப் படர்ந்து, அனைவரின் கண்களுக்கும் விருந்து படைத்து வருகிறது.
மரத்தின் மேற்புறத்தில், பூத்த பூக்கள் போர்வை போர்த்தியது போன்று காட்சியளிக்க, அதன் தரைப்பகுதியில், அம்மரத்திலிருந்து உதிர்ந்த பூக்கள் மஞ்சள் நிற விரிப்பு விரிக்கப்பட்டது போல காட்சியளித்துக் கொண்டிருக்கின்றன.
|