தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா ஏப்ரல் 17 புதன் அன்று தலைமை செயலகத்தில், தமிழகத்தில் குடிநீர் நிலைமை குறித்து ஆய்வு செய்தார்.
இந்த கூட்டத்தில், நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி, சட்டம், நீதிமன்றங்கள் மற்றும் சிறைசாலைகள் துறை அமைச்சர் கே.பி. முனுசாமி, தலைமை செயலாளர், நிதித்துறை முதன்மைச் செயலாளர், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை முதன்மைச் செயலாளர், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறைச் செயலாளர், பொதுப் பணித் துறைச் செயலாளர் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்துக்கொண்டனர்.
|