அனைத்து கிராமங்களிலும், அடித்தட்டு மக்களுக்கு அதிக சேவை வழங்குவதற்காக தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ள அம்மா (Assured Maximum Service to Marginal People in All Villages) திட்டத்தின் கீழ், தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள இடங்களில் 23.04.2013 அன்று, வட்டாட்சியர்கள் தலைமையில் முகாம் நடைபெறவுள்ளது. காயல்பட்டினத்திலும் இம்முகாம் நடைபெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, தூத்துக்குடி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு:-
அனைத்து கிராமங்களிலும், அடித்தட்டு மக்களுக்கு அதிக சேவை வழங்குவதற்காக தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ள அம்மா திட்டத்தின் கீழ், தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள இடங்களில் 23.04.2013 அன்று, வட்டாட்சியர்கள் தலைமையில் முகாம் நடைபெறவுள்ளது.
மேற்படி முகாம்களில், மக்களின் குறைகளைத் தீர்க்கும் வண்ணம் முதியோர் ஓய்வூதியம் உள்ளிட்ட சமூக பாதுகாப்புத் திட்டங்கள், பட்டா மாறுதல், இலவச வீட்டு மனை பட்டாக்கள், உழவர் பாதுகாப்பு அட்டை, பிறப்பு - இறப்பு சான்றுகள், சாதிச்சான்றுகள், வருவாய்த் துறையினரால் நிறைவேற்றப்பட வேண்டிய கோரிக்கைகள் குறித்த விண்ணப்பங்கள் ஆய்வு செய்யப்பட்டு, உடனடியாக பொதுமக்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட உள்ளது.
மேற்படி முகாம்,
தூத்துக்குடி வட்டத்தில் - வடக்கு சிலுக்கன்பட்டி கிராமத்திலும்,
ஸ்ரீவைகுண்டம் வட்டத்தில் - வாழவல்லான் திருப்பணிசெட்டியாபத்து, சிங்கத்தாகுறிச்சி கிராமங்களிலும்,
திருச்செந்தூர் வட்டத்தில் - நல்லூர், காயல்பட்டினம் தென்பாகம் கிராமங்களிலும்,
சாத்தான்குளம் வட்டத்தில் - நெடுங்குளம் கிராமத்திலும்,
கோவில்பட்டி வட்டத்தில் - கங்கன்குளம், இனாம் மணியாச்சி, முடுக்கு மீண்டான்பட்டி, தெற்கு இலந்தைகுளம் கிராமங்களிலும்,
ஒட்டப்பிடாரம் வட்டத்தில் - தெற்கு வீரபாண்டியாபுரம், சித்தலக்கட்டை கிராமங்களிலும்,
எட்டயபுரம் வட்டத்தில் - சிங்கிலிபட்டி, சோழபுரம் கிராமங்களிலும்,
விளாத்திகுளம் வட்டத்தில் - த.சுப்பையாபுரம், மல்லீஸ்வரபுரம், ஜமீன் கரிசல்குளம் கிராமங்களிலும்
நடைபெறவுள்ளது. இந்த முகாம்களில் பொதுமக்கள் தங்கள் கோரிக்கை மனுக்களை அளித்து, பயனடைய கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |