ஐக்கிய அரபு அமீரகம் - அபூதபீ காயல் நல மன்றத்தின் செயற்குழுக் கூட்டத்தில், அண்மையில் அம்மன்றத்தால் நடத்தப்பட்ட மருத்துவ முகாமின் பரிசோதனை அறிக்கை வெளியிடப்பட்டதோடு, மருத்துவ உதவித் துறையில் உலக காயல் நல மன்றங்களை ஒருங்கிணைப்பதற்காக விவாதிக்கப்பட்டு வரும் ‘ஷிஃபா’ செயல்திட்டத்தில் இணைய இசைவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூட்ட நிகழ்வுகள் குறித்து அம்மன்றத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை வருமாறு:-
இறையருளால் எமது அபூதபீ காயல் நல மன்றத்தின் 13ஆவது செயற்குழுக் கூட்டம், இம்மாதம் 12ஆம் தேதி வெள்ளிக்கிழமை மாலையில், மன்றத்தின் செயற்குழு உறுப்பினர் டாக்டர் செய்யித் அஹ்மத் இல்லத்தில், செயற்குழு உறுப்பினர் ஹாஃபிழ் எஃப்.ஷாஹுல் ஹமீத் தலைமையில் நடைபெற்றது. மவ்லவீ ஹாஃபிழ் நஹ்வீ எஸ்.ஏ.இஸ்ஹாக் லெப்பை மஹ்ழரீ கிராஅத் ஓதி கூட்டத்தைத் துவக்கி வைத்தார்.
‘ஷிஃபா’விற்கு ஆதரவு:
நமது காயல் மாநகரத்தில் மருத்துவ உதவி மற்றும் சேவைகளுக்காக உருவாக்கப்படவிருக்கும் ‘ஷிஃபா’விற்கு ஆதரவு கொடுப்பதுடன், அந்த அமைப்பில் இணைந்து பணியாற்ற நமது மன்றத்தின் பிரதிநிதியை விரைவில் தேர்ந்தெடுத்து அறிவிக்க கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
அடுத்த செயற்குழுக் கூட்டம்:
மன்றத்தின் அடுத்த செயற்குழுக் கூட்டம், இன்ஷா அல்லாஹ் வரும் மே மாதம் 10ஆம் தேதி நடைபெறும் என்று மன்றத்தின் தலைவர் மவ்லவீ ஹாபிஃழ் எம்.ஏ.ஹபீபுர் ரஹ்மான் மஹ்ழரீ அறிவித்தார்.
மருத்துவ முகாமின் பரிசோதனை அறிக்கை:
மன்றத்தின் சார்பில், 10.02.2013 ஞாயிற்றுக்கிழமையன்று, காயல்பட்டினம் கே.எம்.டி. மருத்துவமனையில் வைத்து நடைபெற்ற - பல் மற்றும் பொது மருத்துவ இலவச முகாமின் புள்ளி விவரங்கள் அடங்கிய முழு மருத்துவ பரிசோதனை அறிக்கையை, மருத்துவ முகாமை நடத்திய எம் மன்றத்தின் செயற்குழு உறுப்பினர் டாக்டர் ஹமீத் யாஸிர் பி.டி.எஸ். சமர்ப்பித்தார்.
அறிக்கை விபரம் வருமாறு:-
பல் மருத்துவ பரிசோதனை:
முகாமில் கலந்துகொண்டோர் : 78 பேர்
ஆண்கள் - 24 பேர்
பெண்கள் - 54 பேர்
பல் சுத்தம் செய்யப்பட வேண்டியோர் - 45 பேர் (58%)
(ஈறுகளில் பிரச்சனை அல்லது படிமங்கள்)
பற்சொத்தை உள்ளோர் - 70 பேர் (90%)
பற்சொத்தை உள்ள 70 பேருக்கு செய்யப்பட வேண்டிய மருத்துவம்:
பல் சொத்தை அடைக்க வேண்டியது - 40 பேர் (57%)
பல் பிடுங்க வேண்டியது - 11 பேர் (16%)
பல் அடைத்தல் மற்றும் பிடுங்க வேண்டியது - 19 பேர் (27%)
மொத்தத்தில் பல் சொத்தை அடைக்கப்பட வேண்டியது - 59 பேருக்கும், பல் பிடுங்க வேண்டியது - 30 பேருக்கும் செய்யப்பட வேண்டும்.
மேற்சொன்ன 59 பேரில் ஒருவருக்கு சராசரியாக 2.9 பற்கள் அடைக்கப்பட வேண்டியுள்ளது. 30 பேரில் ஒருவருக்கு சராசரியாக 2.3 பற்கள் பிடுங்கப்பட வேண்டியுள்ளது.
பல் பரிசோதனை முடிவுகள்:
முகாமில் கலந்துக்கொண்ட 78 பேரில்,
1. 10இல் 6 பேருக்கு பற்கள் சுத்தம் செய்ய வேண்டி உள்ளது- 58 சதவிகிதம்.
2. 10இல் 9 பேருக்கு பற்சொத்தை உள்ளது - 90 சதவிகிதம்.
இவர்களில் ஒவ்வொருவருக்கும் சராசரியாக 3 பற்கள் அடைக்க வேண்டியும் 2 பற்களுக்கு அதிகமாக பிடுங்கவும் வேண்டி உள்ளது .
பொது மருத்துவ பரிசோதனை:
பொது மருத்துவ முகாமில் கலந்துகொண்டோர் : 77 பேர்
ஆண்கள் - 31 பேர்
பெண்கள் - 46 பேர்
உடல் பருமன் (BMI) பரிசோதனை:
பரிசோதனை செய்துகொண்டவர்கள் - 77பேர்
18.5 - எடை குறைவு உள்ளவர்கள் - 6 - 8%
18.5 - 24.9 - சரியான எடை உள்ளவர்கள் - 25 - 33%
25 - 29.9 - அதிக எடை உள்ளவர்கள் - 31 - 40%
30 - 39.9 - உடல் பருமன் உள்ளவர்கள் - 14 - 18%
40 - அதிக பருமன் உள்ளவர்கள் - 1 - 1%
59 சதவிகிதத்தினர் அதிக எடை உடையவராகவோ அல்லது பருமன் உள்ளவராகவோ உள்ளனர். (இது 5 பேருக்கு 3 பேர் என்ற விகிதமாகும்).
இரத்த அழுத்த (BP) பரிசோதனை:
பரிசோதனை செய்துகொண்டவர்கள் - 70 பேர்
<90; <60 - குறைந்த அழுத்தம் - 0 - 0%
90-119; 60-79 - சரியான அழுத்தம் - 24 - 34%
120-139; 80-89 - உயர் அழுத்தத்திற்கு முந்திய நிலை - 35 - 50%
>139; >89 - உயர் அழுத்தம் உள்ளோர் - 11 - 16%
16 சதவிகிதத்தினருக்கு உயர் இரத்த அழுத்தம் உள்ளது - அதாவது ஆறில் ஒருவருக்கு.
உயர் இரத்த அழுத்தம் உள்ளதாக கண்டறியப்பட்ட 11 பேரைப்பற்றி மேலும் ஆய்ந்தபோது கண்டறியப்பட்ட புள்ளி விவரங்கள்:
வயதின் அடிப்படையில் செய்யப்பட ஆய்வின் முடிவு:
40 வயதிற்கு கீழ் - 1 - 9%
40 இலிருந்து 50 க்குள் - 1 - 9%
50 வயதிற்கு மேல் - 9 - 82%
மொத்தத்தில் உயர் இரத்த அழுத்தம் உள்ளோரில் 40 வயதிற்கு மேற்ப்பட்டவர்கள் 91 சதவிகிதத்தினர்.
உடற்பருமன் அடிப்படையில் செய்யப்பட ஆய்வின் முடிவு:
எடை குறைவு உள்ளவர்கள் - 4 - 37%
சரியான எடை உள்ளவர்கள் - 1 - 9%
அதிக எடை உள்ளவர்கள் - 3 - 27%
உடல் பருமன் உள்ளவர்கள் - 3 - 27%
அதிக பருமன் உள்ளவர்கள் - 0 - 0%
மொத்தத்தில் உயர் இரத்த அழுத்தம் உள்ளோரில் உடற்பருமன் உள்ளவர்கள் 54 சதவிகிதத்தினர்.
இரத்த சர்க்கரை அளவு (Blood Sugar) பரிசோதனை:
பரிசோதனை செய்துக்கொண்டவர்கள் - 70 பேர்
<140 - சரியான அளவு - 47 - 67%
140-199 - நீரிழிவு நோய்க்கு முந்திய நிலை - 9 - 13%
>200 - நீரிழிவு நோய் உள்ளோர் - 14 - 20%
20 சதவிகிதத்தினருக்கு நீரிழிவு நோய் உள்ளது - அதாவது ஐந்தில் ஒருவருக்கு.
நீரிழிவு நோய் கண்டறியப்பட்ட 14 பேரைப்பற்றி மேலும் ஆய்ந்தபோது கண்டறியப்பட்ட புள்ளி விவரங்கள்:
வயதின் அடிப்படையில் செய்யப்பட்ட ஆய்வின் முடிவு:
40 வயதிற்கு கீழ் - 1 - 7%
40 இலிருந்து 50 க்குள் - 6 - 43%
50 வயதிற்கு மேல் - 7 - 50%
மொத்தத்தில் 40 வயதிற்கு மேற்ப்பட்டவர்கள் 93 சதவிகிதத்தினர்.
உடற்பருமன் அடிப்படையில் செய்யப்பட்ட ஆய்வின் முடிவு:
எடை குறைவு உள்ளவர்கள் - 1 - 7%
சரியான எடை உள்ளவர்கள் - 1 - 7%
அதிக எடை உள்ளவர்கள் - 7 - 50%
உடல் பருமன் உள்ளவர்கள் - 4 - 29%
அதிக பருமன் உள்ளவர்கள் - 1 - 7%
மொத்தத்தில் உடற்பருமன் உள்ளவர்கள் 86 சதவிகிதத்தினர்.
இரத்த அழுத்தத்தின் அடிப்படையில் செய்யப்பட்ட ஆய்வின் முடிவு:
சரியான அழுத்தம் - 1 - 7%
உயர் அழுத்தத்திற்கு முந்திய நிலை - 11 - 79%
உயர் அழுத்தம் உள்ளோர் - 2 - 14%
மொத்தத்தில் உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் 14 சதவிகிதத்தினர்.
பொது பரிசோதனை முடிவுகள்:
1. ஐந்தில் மூன்று பேர் அதிக உடல் பருமன் உள்ளவராக இருக்கிறார்
2. ஆறில் ஒருவருக்கு உயர் இரத்த அழுத்தம் உள்ளது
3. உடற் பருமன் உள்ளவர் மற்றும் வயதில் மூத்தோருக்கு நீரிழிவு நோய் மற்றும் உயர் இரத்த அழுத்தம் உள்ளது பட்டவர்த்தனமாக தெரிகிறது.
நீரிழிவு நோய் உள்ளோரில் 93 சதவிகிதத்தினரும், உயர் இரத்த அழுத்தம் உள்ளோரில் 91 சதவிகிதத்தினரும் 40 வயதுக்கு மேற்ப்பட்டவராக இருக்கின்றனர். எனவே 40 வயதை கடந்தோர் அடிக்கடி இரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை அளவை பரிசோதிக்க அறிவுறுத்தப்பட வேண்டும்.
நீரிழிவு நோய் உள்ளோரில் 86 சதவிகிதத்தினரும், உயர் இரத்த அழுத்தம் உள்ளோரில் 54 சதவிகிதத்தினரும் அதிக உடல் எடை உள்ளவராக இருக்கின்றனர். எனவே இவ்விரண்டு நிலைகளுக்கும் அவர்களின் இந்த அதிகப்படியான உடல் எடையே காரணமாக இருக்கலாம். ஆதலால் இந்நிலை உள்ளோர் சரியான உணவு பழக்கத்தை கை கொண்டு தங்கள் எடையை கட்டுக்குள் வைப்பதோடு வழமையாக உடற்பயிற்சி செய்து வருவதன் மூலம் இவற்றை தவிர்த்துக்கொள்ளலாம்.
மேற்ச்சொன்ன முடிவுகளை எமது மன்றம் சென்ற ஆண்டு பொதுக்குழு கூட்டத்தின் போது நடத்திய மருத்துவ ஆய்வோடு ஒப்பிட்டு பார்த்த போது, வெளி நாட்டில் வாழ்வோருக்கு நீரிழிவு மற்றும் உயர் இரத்த அழுத்த நிலைகள் 40 வயதிற்கு கீழுள்ளோருக்கு அதிக சதவிகிதத்தில் இருப்பது கண்டறியப்பட்டது. வெளிநாட்டில் உள்ளோர் அவர்களின் பணி அழுத்தம் , தங்களின் குடும்பத்தை பிரிந்து இருப்பதினாலும் அனுபவிக்கும் மன உளைச்சல், முறையற்ற உணவு பழக்கங்கள் மற்றும் சரியான அளவு உடற்பயிற்சி இல்லாமை ஆகியவை காரணமாக இருக்கலாம் என்று கருதப் படுகின்றது. வல்ல ரஹ்மான் நம் யாவருக்கும் நோயற்ற சுகமான வாழ்க்கையை தருவானாக ஆமீன்.
இவ்வாறாக, மருத்துவ பரிசோதனை அறிக்கை அமைந்திருந்தது. நன்றியுரைக்குப் பின், மன்றத் தலைவரின் துஆவைத் தொடர்ந்து, கஃப்பாராவுடன் கூட்டம் இனிதே நிறைவுபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்.
இக்கூட்டத்தில், மன்றத்தின் செயற்குழு உறுப்பினர்கள் திரளாகக் கலந்துகொண்டனர். அனைவருக்கும் சிற்றுண்டியுபசரிப்பு செய்யப்பட்டது.
இவ்வாறு, அபூதபீ காயல் நல மன்றத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அபூதபீ கா.ந.மன்றம் சார்பாக
தகவல்:
M.E.முஹ்யித்தீன் அப்துல் காதிர்
(செய்தித் துறை பொறுப்பாளர்)
படங்கள்:
சுப்ஹான் N.M.பீர் முஹம்மத்
[விடுபட்ட கூடுதல் தகவல் இணைக்கப்பட்டுள்ளது @ 11:55 / 20.04.2013] |