Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
12:09:39 AM
வெள்ளி | 22 நவம்பர் 2024 | துல்ஹஜ் 1940, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5512:0815:3018:0019:14
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:13Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்---
மறைவு17:54மறைவு12:02
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5905:2505:51
உச்சி
12:04
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:1718:4219:08
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 10620
#KOTW10620
Increase Font Size Decrease Font Size
வெள்ளி, ஏப்ரல் 19, 2013
தினத்தந்தி அதிபர் சிவந்தி ஆதித்தனார் காலமானார்!
செய்திகாயல்பட்டணம்.காம்
இந்த பக்கம் 3820 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (11) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

தினத்தந்தி அதிபர் சிவந்தி ஆதித்தனார் சென்னையில் இன்று காலமானார். அவருக்கு வயது 76. கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி இன்று காலமானார்.

"தினத்தந்தி' நாளிதழின் நிறுவனர் மறைந்த சி.பா.ஆதித்தனார் மகன் சிவந்தி ஆதித்தனார். இவர் கல்வியாளர், தொழிலதிபர், பத்திரிகையாளர், விளையாட்டு நிர்வாகி என பன்முக திறமை கொண்டவராக இருந்தார். தினத்தந்தி நாளிதழின் அதிபராக இருந்து வந்த சிவந்தி ஆதித்தனார், பல்வேறு கல்லூரிகள், மாலைமலர், தந்தி டிவி, ஹலோ எப்.எம்., ஆகியவற்றையும் நிர்வகித்து வந்தார்.

1936 செப்., 24ம் தேதி பிறந்த சிவந்தி ஆதித்தனார், பிரசிடென்சி கல்லூரியில் பட்டப்படிப்பு முடித்தார். இவரது தந்தை 1942ல் மதுரையில் தொடங்கிய தினத்தந்தி நாளிதழை தனது சிறந்த சீர்மிகு தலைமையில் ஒவ்வொரு நாளும் புத்தம் புது மலராக மலர்ந்து மணம் வீச செய்திருக்கிறார். தினந்தந்தி நாளிதழ், சென்னை, மதுரை, திண்டுக்கல், திருச்சி, தஞ்சை, திருநெல்வேலி, நாகர்கோவில், கோவை, சேலம், ஈரோடு, வேலூர், கடலூர், புதுச்சேரி, பெங்களூரு, மும்பை என 15 பதிப்புகள் வெளியிடப்படுகிறது. இவரது சேவையை அங்கீகரிக்கும் விதமாக 2009ம் ஆண்டு மத்திய அரசின் உயரிய விருதுகளில் ஒன்றான "பத்ம ஸ்ரீ' விருது வழங்கப்பட்டது. மேலும் கவுரவ டாக்டர் பட்டமும் பெற்றுள்ளார்.

ஆதித்தனார் கல்வி நிறுவன அறக்கட்டளை திருச்செந்தூரில் இயங்கிவருகிறது. கிராமப்புற, பின்தங்கிய மக்களுக்கு சேவை செய்யும் நோக்கோடு ஏற்படுத்தப்பட்ட இக்கட்டளையில், தற்போது 7 கல்வி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.

1, ஆதித்தனார் கலை அறிவியல் கல்லூரி

2. கோவிந்தமாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரி

3. டாக்டர் சிவந்தி ஆதித்தனார் உடற்கல்வியியல் கல்லூரி

4. டாக்டர் சிவந்தி ஆதித்தனார் கல்வியியல் கல்லூரி

5. டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரி

6. டாக்டர் சிவந்தி ஆதித்தனார் ஆசிரியர் பயிற்சி நிறுவனம்

7. டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நர்சிங் கல்லூரி

இக்கல்வி நிறுவனங்களுக்கு டாக்டர். பா சிவந்தி ஆதித்தனார் தலைவராக இருந்தார். தனது பன்முகத்தன்மை மற்றும் ஆளுமை தன்மையால், கல்வித்துறையில் பல்வேறு சாதனைகளை படைத்தவர் சிவந்தி ஆதித்தனார். தமிழகத்தில் சிவந்தி ஆதித்தனாரின் கல்வி பங்களிப்பு போற்றத்தக்கது. இக்கல்வி நிறுவனங்களில் தற்போது ஆயிரக்கணக்கான மாணவர்கள் படித்து வருகின்றனர். கல்வித்துறையில் அவரது முன்உதாரணமான சேவையை பாராட்டி இந்திய அரசு அவருக்கு, பத்மஸ்ரீ விருது வழங்கியது. மேலும் இவரது கல்விச் சேவையை பாரட்டி 1993 ம் ஆண்டு மதுரை காமராசர் பல்கலை, 1994 ல் அண்ணாமலை பல்கலை, 2004 ல் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை, 2007 ல் சென்னை பல்கலை, கவுரவ டாக்டர் பட்டம் வழங்கியது.

மதுரை காமராஜ் பல்கலை, அண்ணாமலை பல்கலை, பாரதிதாசன் பல்லை, சென்னை பல்கலையில் சிண்டிக்கேட் உறுப்பினராகவும் இவர் இருந்துள்ளார். இவர் ஒரு சிறந்த விளையாட்டு வீரர். 10 ஆண்டுகள் இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவராக இருந்துள்ளார். தற்போது பல்வேறு சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் பொறுப்பாளராக உள்ளார். கல்வி மற்றும் விளையாட்டுத்துறையில் இவரது சேவையை பாரட்டி "ஒலிம்பிக் ஆர்டர் பார் மெரிட்' என்ற விருது வழங்கப்பட்டுள்ளது. தமிழக பள்ளி மாணவர்களை ஊக்கப்படுத்தும் பொருட்டு ஒவ்வொரு ஆண்டும் பத்தாம்வகுப்பு, பிளஸ் 2, பொதுத்தேர்வில் மாநில அளவில் முதலிடம் பெறும் மாணவருக்கு 10,000 ரூபாயும், இரண்டாவது மாணவருக்கு 7,000 ரூபாயும், மூன்றாவது மாணவருக்கு 5,000 ரூபாயும், வழங்கப்படுகிறது. மாவட்ட அளவில் முதலிடம் பெறும் மாணவருக்கு 5,000 ரூபாயும், இரண்டாவது மாணவருக்கு 3,000 ரூபாயும், மூன்றாவது மாணவருக்கு 2,000 ரூபாயும் வழங்கப்படுகிறது.

சிவந்தி ஆதித்தனார், சமூகப்பணிகளில் ஆர்வம் கொண்டவர். ஏழை மாணவர்கள் கல்வி பயில பல்வேறு உதவிகளை செய்து வருகிறார். பத்தாம் வகுப்பு, பிளஸ் 2வில் முதல் மூன்று இடங்களை பிடிக்கும் மாணவர்களுக்கு தினத்தந்தி சார்பில் பரிசுத்தொகை வழங்கப்படுகிறது. தற்போதைய கல்விமுறைகளை மாணவர்களுக்கு விளக்க "வெற்றி நிச்சயம்' என்ற நிகழ்ச்சியை ஆண்டுதோறும் நடத்துகிறார். பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 வினாவிடையும் தினத்தந்தி இதழில் வெளியாகிறது. ஒவ்வொரு ஆண்டும் சிவந்தி ஆதித்தனாரின் பிறந்த நாள் அன்று, தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழக அறிஞர்களுக்கு பரிசுத்தொகையும், பொற்கிளியும் கொடுத்து அவர்களை கவுரவிக்கிறார். ஏழை மாணவர்கள் கல்வி பயிலும் வண்ணம் பல உயர் கல்வி நிறுவனங்களை நடத்தி வருகிறார். மேலும் பல்வேறு சமூக பணிகளையும், நலத்திட்ட உதவிகளையும் சிறப்பாக செய்து வருகிறார்.

தகவல்:
தினமலர்


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Heartfelt Condolence
posted by K.V.M.A.C.Mohudoom Mohammed (Dubai - U.A.E.) [20 April 2013]
IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 26954

My Heartfelt condolence to the bereaved family on the sad demise of our Beloved College Chairman. My heart is with you in this time of sorrow. I was a student of his way back in 1985-1988. He was the Chairman of the College I ever had.

We are really proud to have such a sincere, dedicated, disciplined Philanthropist, Stalwarts in this era. Our Chairman gives much importance to the sports along with the Academic Studies.

Please know that my thoughts and prayers are with you during this tragic time.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:..எத்தனை காலம் மனிதன் வாழ்ந்தான் ...
posted by mackie noohuthambi (kayalpatnam) [20 April 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 26956

எத்தனை காலம் மனிதன் வாழ்ந்தான் எனபது கேள்வி இல்லை. அவன் எப்படி வாழ்ந்தான் என்பதை நாம் நினைத்து பார்க்க கடமைபட்டிருக்கிறோம்.

செல்வம் வந்து குவிந்தது ஒரு பக்கம், அந்த செல்வங்கள் ஏழைகள் கல்வி பெறவும் வாழ்வில் ஏற்றம் பெறவும் அவை பங்கிடப்பட்டது மறுபுறம் என்ற செய்திதான் அவரை பற்றிய முக்கியமான அம்சம். பணம் இருப்பவர்களா கொடுக்கிறார்கள் மனம் இருப்பவர்களே கொடுக்கிறார்கள். ஆனால் சிவந்தி ஆதித்தன் அவர்களுக்கு இறைவன் பணத்தையும் கொடுத்தான் அள்ளிக் கொடுக்கும் மனதையும் கொடுத்தான்.

மறைந்த மாமனிதரின் வாரிசுகள் அவர் ஏற்றி வைத்த விளக்கை தமிழ் மக்கள் வாழும் இடமெல்லாம் கொண்டு செல்வார்களாக. ஏழையின் சிரிப்பில் இறைவனை காண்போம் என்பது வெறும் அரசியல் சுலோகம் அல்ல,அது ஒரு உண்மை தத்துவம் என்பதை தன் வாழ்நாளில் வாழ்ந்து காட்டி, மற்றவர்களுக்கும் ஒரு கலங்கரை விளக்காக வழிகாட்டும் ஒளி விளக்காக நிற்கும் அய்யா அவர்கள் வாழ்க்கை தமிழக சரித்திரத்தில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்படவேண்டிய ஒரு வரலாற்று பெட்டகம்.

அய்யா அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எங்கள் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறோம்.

மக்கி நூஹுத்தம்பி அன் குடும்பத்தினர்.51 புதுக்கடை தெரு காயல்பட்டினம்..


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. condolence
posted by syedahmed (GZ, China) [20 April 2013]
IP: 14.*.*.* China | Comment Reference Number: 26957

It was with deep regret that we learnt the shocking news of the passing away of our college chairman and also profoundly distressed.

His sociable nature and cultural refinement would keep him alive in the hearts of his admirers. He was a source of strength and inspiration to many of his fellow beings, which cause the pioneering work will go to long way to benefit many future generation.

We express our most sincere sympathy to his breaved family. May his soul rest in peace.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. சிறந்த முன்னோடி!
posted by S.K.Salih (Kayalpatnam) [20 April 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 26958

மக்கள் நலப்பணிகளுக்கு சிறந்த முன்னோடி - “சின்னய்யா” என அனைவராலும் அன்பொழுக அழைக்கப்பட்ட சிவந்தி ஆதித்தனார் அவர்கள்.

வெறும் பணம் சேர்ப்பை மட்டுமே குறிக்கோளாய்க் கொண்டு கல்வி நிறுவனங்கள் பல துவக்கி நடத்தப்பட்டு வரும் இக்காலையில், தன் சமூகம் மேம்பட வேண்டும் என்ற தன்னலமற்ற நோக்கத்துடன் சின்னய்யா அவர்கள் துவக்கிய கல்வி நிறுவனங்கள் அனைத்தும் இன்று வேரூன்றி விருட்சமாகக் காட்சியளித்து வருகிறது.

(நானறிந்த வரை) இக்கல்வி நிறுவனங்களில் மதப்பாகுபாடு இல்லை. மிகவும் சாதாரண கட்டணம். கொள்ளையில்லை. தன் கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவ-மாணவியர் மேம்பாட்டிற்காக பல்வேறு ஊக்கத்திட்டங்கள் என, மனித சமுதாயத்திற்கு சிறந்ததொரு முன்னோடியாகத் திகழ்ந்தவர் சின்னய்யா அவர்கள்.

ஒரு சிறிய நிகழ்வு நினைவுக்கு வருகிறது...

சின்னய்யா அவர்களின் “கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரி”யில் இடம் பெறுவதற்காக காயல்பட்டினத்து மாணவியர் சென்றால் பெரும்பாலும் இடம் மறுக்கப்படுகிறது என்று சில ஆண்டுகளுக்கு முன் கூறப்பட்டு வந்தது. அதுகுறித்து விசாரிக்கையில் கிடைத்த தகவல்:

மூன்றாண்டு கால அளவு கொண்ட பட்டப்படிப்பில் சேரும் காயல்பட்டினத்தைச் சேர்ந்த மாணவியர், ஓராண்டிலோ அல்லது இரண்டாண்டுகளிலோ - இயலாமை, திருமணம் உள்ளிட்ட காரணங்களைக் காட்டி தமது கல்வியை இடைநிறுத்தம் செய்ததாகவும், (இன்றும் இந்த இடைநிறுத்தம் தொடர்கிறது...), இவர்களின் இந்த நடவடிக்கையைக் கருத்திற்கொண்டு, கல்லூரியில் இடம் கேட்டு வருவோரிடம் நீண்ட நேர நேர்காணல் செய்து, அவர்களின் ஆர்வத்தை முழுமையாக அறிந்துகொண்ட பின்னரே கல்லூரியில் இடமளிப்பதாக அறிய முடிந்தது.

நிர்ணயிக்கப்பட்ட அளவிலேயே ஒவ்வொரு பாடப்பிரிவிலும் மாணவியரை சேர்த்துக்கொள்ள முடியும் என்ற விதி இருக்க, பல சமுதாய மக்களையும் தாண்டி கல்லூரியில் இடம்பெற்ற பின்னர், பொறுப்பின்றி இவர்கள் தமது கல்வியை இடைநிறுத்தம் செய்வதால், இடம் மறுக்கப்பட்ட மாணவியருக்கும் பயனின்றி, இவர்களுக்கும் பயனின்றி, இனி யாரையும் அந்த இடத்தில் சேர்க்கவும் இயலாத நிலையில் அவர்கள் செய்யும் இந்த நீண்ட பரிசீலனையை குறை காண இயலாது.

சிறந்த தமிழ்ப் பற்றாளரான சின்னய்யா அவர்களிடம், தமிழ் மொழியைத் தாய்மொழியாகக் கொண்ட சிலர் சந்திக்கும்போது, தமது தரத்தைக் காண்பிப்பதற்காக ஆங்கிலத்தில் உரையாடுவார்களாம்... “எனக்கு தமிழ் நன்றாகப் புரியும்... எனவே தமிழிலேயே பேசுங்களேன்...” என்று கூறி, தன் தரம் இதுதான் என அனைவருக்கும் புரியச் செய்வாராம்...

“சின்னய்யா” அவர்களின் மறைவு ஈடுசெய்ய இயலாத பேரிழப்பு. அன்னாரின் மறைவால் துயருற்றிருக்கும் அவர்களது அன்பு குடும்பத்தார், உற்றார் - உறவினர், கல்வி நிறுவனங்களின் நிர்வாகிகள், பேராசிரியர்கள், மாணவ-மாணவியர், அவர் நடத்திய அனைத்து நிறுவனங்களின் அங்கத்தினர், அவர் சார்ந்த சமூகத்தினர் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. கல்வித்த்தந்தையின் மறைவு - நம் வட்டார மக்களுக்கு பேரிழப்பு.
posted by V D SADAK THAMBY (Guangzhou, China) [20 April 2013]
IP: 218.*.*.* China | Comment Reference Number: 26959

சிவந்தி ஆதித்தனார் அவர்களின் மறைவிற்கு எமது ஆழ்ந்த அனுதாபங்கள்.

சிவந்தி ஆதித்தனார் அவர்களின் மறைவு நம் தென் மாவட்ட மக்களுக்கு, குறிப்பாக நமது திருச்செந்தூர் வட்டார மக்களுக்கு ஒரு பேரிழப்புதான்.

ஒருகாலத்தில் தமிழ் நாளிதழ் வட்டத்தில் மேல்சாதியினரின் ஆதிக்கமே மேலோங்கி இருந்தது. அதை வெகுவாக குறைத்து, கீழ்ஜாதியினரின் அதீக்கமும் மேலோங்கிவர செய்த பெருமை சிவந்தி ஆதித்தனார் அவர்களையும் அவரது குடும்ம்பதினரையுமே சேரும் என்பது இந்த நேரம் நினைவுகூறத்தக்கது.

நம் திருச்செந்தூர் வட்டாரத்தில் பல கல்லூரிகளை உள்ளடக்கிய "ஆதித்தனார் கல்வி நிறுவன அறக்கட்டளை" ஒரு பல்கலைகழகமாக மாற்ற சிவந்தி ஆதித்தனார் அவர்கள் பெரும் முயற்சித்தார் என நாம் பரவலாக அறிந்திருக்கிறோம் ..

ஆதித்தனார் கல்வி நிறுவன அறக்கட்டளையின் கீழ் ஒரு மருத்துவ கல்லூரி மற்றும் ஒரு சட்டக்கல்லூரியையும் ஏற்படுத்தி இவை அனைத்தையும் உள்ளடக்கிய "ஆதீத்தனார் பல்கலை கழகம்" உருவாக அவரது குடும்ம்பதினர் முயற்சிக்க வேண்டும். அவர் விட்டுசென்ற பணியை அவரது குடும்ம்பதினர் நிறைவேற்ற முன்வரவேண்டும். அதன்மூலம் நம் வட்டார மக்கள் கல்வியில் பெரும் பயன் அடைவர்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. சமுதாய பேரிழப்பு
posted by W.S.S.முஹம்மது முஹிய்யத்தீன் (சென்னை) [20 April 2013]
IP: 1.*.*.* India | Comment Reference Number: 26963

பெருந்தகையாளர் சிவந்தி ஆதித்தனார் அவர்களின் சீர்மிகு நிர்வாகத் திறமையினால் கல்வித்தரத்தில் சிறப்பிடம் பெற்றுத் திகழும் ஆதித்தனார் கல்லூரியின் முன்னாள் மாணவன் (1994-1997) என்ற முறையில் அவரது மறைவிற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கிறேன்.

எப்பொழுதும் புன்னகை சிந்தும் முகம், தெளிவான பேச்சு, கம்பீர நடை, தொலைநோக்குப் பார்வை, தயாள குணம் ஆகியவற்றிக்கு சொந்தக்காரர். கல்வி நகரமாக திருச்செந்தூரை மாற்றி அமைத்தவர். நான் பயிலும் காலத்தில் நடைபெற்ற கல்லூரி ஆண்டு விழாவில் அவர் ஆற்றிய உரையில் "நிச்சயமாக திருச்செந்தூரில் ஆதித்தனார் பல்கலைக்கழகம் அமைத்தே தீருவேன்" என்று பலத்த கரவொலிக்கிடையில் முழங்கியது, பட்டமளிப்பு விழாவில் என் முதுகை தட்டிக் கொடுத்து வாழ்த்தியது இன்றும், என்றும் பசுமை மாறா நினைவலைகள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Owner of Good Colleges
posted by Jahir Hussain VENA (Bahrain) [20 April 2013]
IP: 89.*.*.* Bahrain | Comment Reference Number: 26970

ஆழ்ந்த அனுதாபம்.. ..

Our Aditanar Colleges.........

Affordable fees with high infrastructure….
There is no phrase called “Donations” in their colleges..

The Great man.. convert his vision into reality....

Jahir Hussain VENA
Sualman MBS
B.Com.. Aca Yr 1989-1992


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. Re:...
posted by P.S.ABDUL KADER (JEDDAH,SAUDIA.) [20 April 2013]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 26984

டாக்டர் பா.சிவந்தி ஆதித்தன் அவர்களின் மறைவை அறிந்து முகுந்த துயரமும் மன வேதனையும் அடைந்தேன்.

தமிழ்ப் பத்திரிகை உலகின் முடிசூடா மன்னர், தமிழ்நாட்டில் மாலைப் பத்திரிகைகள் தோன்றுவதற்கு முன்னோடி, இந்தியாவிலேயே அதிக வாசகர்களைக் கொண்ட‘‘நம்பர் 1’’ நாளிதழாகத் திகழும் ‘‘தினத்தந்தி’’யின் அதிபர்; விளையாட்டுத் துறையில், இந்தியாவின் பெருமையை சர்வதேச அரங்கில் உயர்த்தியவர். – இப்படி பல பெருமைகளுக்கு உரியவராகத் திகழ்ந்தவர் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தன். இந்திய துணைக்கண்டத்தில், பத்திரிகை, விளையாட்டு, கல்வி, தொழில் முதலான பல்வேறு துறைகளிலும் பெரும் சாதனையாளராகத் திகழ்ந்த டாக்டர் பா.சிவந்தி ஆதித்தன்

பத்திரிகை, விளையாட்டு, கல்வி ஆகிய துறைகளில் செய்த சேவையை பாராட்டி இவருக்கு மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் 1994 நவம்பர் 23–ந்தேதி ‘டாக்டர்‘ பட்டம் வழங்கி கவுரவித்தது. அண்ணாமலை பல்கலைக் கழகம் 1995–ம்ஆண்டிலும், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் 2004–ம் ஆண்டி லும், சென்னை பல்கலைக்கழகம் 2007–ம் ஆண்டிலும் டாக்டர் பட்டம் வழங்கின. 1982–ம் ஆண்டும், 1983–ம் ஆண்டும் தொடர்ந்து இரண்டு முறை சென்னை மாநகர ஷெரீப் ஆக நியமிக்கப்பட்டார்.

இலக்கியம் மற்றும் கல்வித்துறையில் சிறந்த சேவை புரிந்ததற்காக, ‘தினத்தந்தி’ அதிபர் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனுக்கு கடந்த 2008–ம் ஆண்டில் மத்திய அரசு பத்மஸ்ரீ விருது வழங்கி கவுரவித்தது. 1994-ம் ஆண்டில் என்னை டாக்டர் பா.சிவந்தி ஆதிதான் நற்பணி மன்றத்தில் ஆயுள் உறுபினராக இணைத்துக்கொண்டார்.

அவரை இழந்து வாழும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்வதுடன் அவரது ஆண்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. Re:...
posted by Shaik Dawood (Maldives) [21 April 2013]
IP: 124.*.*.* Maldives | Comment Reference Number: 26988

சிவந்தி ஆதித்தனார் அவர்களின் மறைவிற்கு எமது ஆழ்ந்த அனுதாபங்கள்.

சிவந்தி ஆதித்தனார் அவர்களின் மறைவு நம் தென் மாவட்ட மக்களுக்கு, குறிப்பாக நமது திருச்செந்தூர் வட்டார மக்களுக்கு ஒரு பேரிழப்புதான்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. Re:...
posted by mohmedyounus (Muscat) [21 April 2013]
IP: 82.*.*.* Oman | Comment Reference Number: 26992

தென் தமிழகத்தில் கல்வி புரட்சிக்கு வித்திட்ட பெரும் சாதனையாளர். கல்வி வியாபாரமாகிவிட்ட இந்நாளில் எந்தவித எதிர்பலனையும் எதிர்பாராமல் பல லட்சக்கணக்கான கிராம மக்கள் உயர் கல்வி பெற்றிட வழி அமைத்துகொடுத்தவர்.

நகரத்தில் அமைந்த கல்லூரிகளில் கூட இல்லாத வசதிகளை தான் அமைத்த அத்தனை கல்லூரிகளிலும் ஏற்படுத்தி ஒரு சாதனையை ஏற்படுத்தியவர். சாதி மோதல்களுக்கு பெயர் போன இந்த வட்டாரத்தில் எந்தவித சாதி மத பாகுபாட்டிற்கும் இடம் கொடுக்காமல் அனைத்து தரப்பு மாணவர்களும் கல்வி பெற்றிட வழிவகுத்தவர். அன்னார் "சின்னையா" அவர்களின் மறைவால் வாடும் குடும்பத்தார்க்கு ஆழ்ந்த அனுதாபங்கள்

கே.எஸ். முஹம்மது யூனுஸ்
பி பி. ஏ -1989-1992


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. Re:...
posted by salai s nawas (singapore) [21 April 2013]
IP: 116.*.*.* Singapore | Comment Reference Number: 26995

சின்ன ஐயா அவர்களால் பெரும் பலன் அடைந்தவர்களுள் நானும் ஒருவன். அதை நன்றியுடன் நினைத்து பார்க்கிறேன்.

அன்று கணிப்பொறியியல் எனக்கு எட்டாக்கனியாக இருந்த தருணத்தில், அவ்வளவு எளிதாக எனக்கு கிடைக்க செய்தவர். நீங்கள் மறைந்தாலும் உங்கள் பெரும் புகழும் நிலைத்திருக்கும். அவர்கள் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.

ஆதித்தனார் கல்லூரி முன்னாள் மாணவன் ( 1989 - 1992)


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved