காயல்பட்டினம் - சென்னை வழிகாட்டு மையம் (KCGC) அமைப்பிற்கு, இம்மாதம் 04ஆம் தேதியன்று புதிய நிர்வாகம் தேர்ந்தெடுக்கப்பட்டமைக்கு அதற்கு, கத்தர் காயல் நல மன்றம் சார்பில் வாழ்த்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, அம்மன்றத்தின் செய்தி தொடர்பாளர் கவிமகன் காதர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-
சென்னை வாழ் காயலர்களை ஒருங்கிணைத்து, இறையருளால் வெற்றிகரமாக மூன்றாமாண்டாக செயல்பட்டு வரும் “காயல்பட்டினம் - சென்னை வழிகாட்டு மையம் (KCGC)” அமைப்பிற்கு, புதிய நிர்வாகிகள் உள்ளிட்ட செயற்குழு, செயல்வீரர் ஜனாப் ஆடிட்டர் ரிஃபாய் தலைமையில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதையறிந்து எம் மன்றம் மட்டற்ற மகிழ்ச்சியடைகிறது.
புதிய நிர்வாகம், சிறப்புற செயல்பட்டு, நகர்நலப் பணிகளை வலிமையுடன் ஆற்றிட, எங்கள் கத்தர் காயல் நல மன்றத்தின் நிர்வாகிகளும், அனைத்து உறுப்பினர்களும் மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
நகர்நலப் பணிகளுக்காக KCGC அமைப்பு முன்னெடுத்துச் செல்லும் பணிகளில், தேவையான அனைத்து ஒத்துழைப்புகளையும் நிறைவாக வழங்கிட எம் மன்றம் ஆயத்தமாக உள்ளது என்பதையும் மகிழ்வுடன் அறியத் தருகிறோம்.
இவ்வாறு, கத்தர் காயல் நல மன்ற செய்தி தொடர்பாளர் கவிமகன் காதர் தனதறிக்கையில் தெரிவித்துள்ளார்.
தகவல்:
S.K.ஸாலிஹ்
உள்ளூர் பிரதிநிதி
கத்தர் காயல் நல மன்றம் |