வேலூர் - மேல்விஷாரம் அப்துல் ஹக்கீம் பொறியியல் கல்லூரியில், 13.04.2013 சனிக்கிழமையன்று நடைபெற்ற 11ஆவது பட்டமளிப்பு விழாவில், காயல்பட்டினத்தைச் சேர்ந்த 3 மாணவர்கள் உட்பட ஏராளமானோர் பட்டம் பெற்றனர்.
காயல்பட்டினம் அப்பா பள்ளித் தெருவைச் சேர்ந்த - மறைந்த ஆசிரியர் இப்றாஹீம் அவர்களின் பேரர்களும், கத்தர் காயல் நல மன்றத்தின் மூத்த உறுப்பினரான ஹாஜி சொளுக்கு எம்.இ.செய்யித் முஹம்மத் ஸாஹிப் என்பவரின் மக்களுமான ஹாஃபிழ் சொளுக்கு எஸ்.எம்.எஸ்.அஹ்மத் ஜமீல் (B.E. Elctronics & Communication), சொளுக்கு எஸ்.எம்.எஸ்.முஹம்மத் இப்றாஹீம் (B.E. Mechanical) ஆகியோரும், சதுக்கைத் தெருவைச் சேர்ந்த காதர் சாமுனா லெப்பை என்பவரின் மகன் கே.எஸ்.எல்.முஹம்மத் ஆதம் சுல்தான் (B.E. Mechanical) ஆகியோர், பட்டம் பெற்ற காயலர்களாவர்.
கல்லூரி தாளாளர் அப்துல் லத்தீஃப் தலைமையில், முதல்வர் டி.குமார் முன்னிலையில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பாஷா சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, மாணவர்களுக்கு பட்டச் சான்றிதழ்களை வழங்கினார்.
தகவல் & படங்கள்:
M.புகாரீ
[சிறு திருத்தம் செய்யப்பட்டுள்ளது @ 08:03 / 22.04.2013] |