இந்திய ஹஜ் குழு மூலம் இவ்வாண்டு ஹஜ் பயணம் மேற்கொள்ள விண்ணப்பங்கள் பிப்ரவரி 6 முதல் மார்ச் 30 வரை பெறப்பட்டன. நாடு முழுவதும் 2,98,325 விண்ணப்பங்கள் பெறப்பட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய ஹஜ் குழு வசம் உள்ள 1,19,000 இடங்கள் - மக்கள் தொகை எண்ணிக்கை அடிப்படையில் ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒதுக்கப்பட உள்ளன.
இதற்காக 2001 ஆம் ஆண்டு இந்திய ஜன தொகை கணக்கு (சென்சஸ்) பயன்படுத்தப்படவுள்ளது.
2001 ஆம் ஆண்டு கணக்குப்படி இந்தியாவில் மொத்த முஸ்லிம்களின் எண்ணிக்கை 138,188,240 ஆகும். இதில் தமிழகத்தில் உள்ள முஸ்லிம்களின்
எண்ணிக்கை 3,470,647. இந்திய முஸ்லிம்களில் 2.5115 சதவீத முஸ்லிம்கள் தமிழகத்தில் வாழ்கின்றனர். அதன் அடிப்படையில் மொத்த இடமான
1,19,000 இடங்களில் - 2989 இடங்கள் (2.5115 %) தமிழகத்திற்கு ஒதுக்கப்படுகிறது. ஆனால் தமிழகத்தில் இருந்து மட்டும் 11,765
விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது.
ஒதுக்கப்பட்ட இடங்களை விட குறைவான விண்ணப்பங்கள் ஐந்து மாநிலங்களில் பெறப்பட்டுள்ளன. அவை - அஸ்ஸாம் (-4,480), பீகார்
(-5284), ஒரிசா (-13), திரிபுரா (-165) மற்றும் மேற்கு வங்காளம் (-7319).
ஆக, மீதமிருந்த 17,261 இடங்கள் - மீண்டும், கூடுதல் விண்ணப்பங்கள் பெற்ற மாநிலங்களுக்கு ஒதுக்கப்பட்டது. அதில் தமிழகத்திற்கு 632 இடங்கள் கூடுதலாக கிடைத்தது.
ஜார்கந்த் மாநிலத்திற்கு கூடுதலாக 679 இடங்கள் ஒதுக்கப்பட்டன. இருப்பினும் - இம்மாநிலத்தில் கூடுதல் விண்ணப்பங்கள் - 248 மட்டுமே பெறப்பட்டிருந்ததால், எஞ்சிய 431 இடங்களும், இதர மாநிலங்களுக்கு ஒதுக்கப்பட்டது. அதன் மூலம் தமிழகத்திற்கு கூடுதலாக 16 இடங்கள் கிடைத்தது. ஆக மொத்தம் - 648 இடங்கள் கூடுதலாக தமிழகத்திற்கு கிடைத்துள்ளது.
அதன்படி - எதிர்வரும் ஏப்ரல் 23 அன்று நடைபெறும் குலுக்கலில், பெறப்பட்ட 11,765 விண்ணப்பங்களில் இருந்து 3,637 பேர் (2989 + 648) தேர்வு செய்யப்படுவர். விண்ணப்பம் செய்தவர்களில் 8,128 பேருக்கு இடம் கிடைக்காது என்பது குறிப்பிடத்தக்கது. |