ஐக்கிய ராஜ்ஜிய காயல் நல மன்றத்தின் 4ஆம் ஆண்டு துவக்க விழா, 2ஆம் அமர்விற்கான நிர்வாகிகள் தெரிவு, 7ஆவது பொதுக்குழு மற்றும் குடும்ப ஒன்றுகூடல் விழா நிகழ்வுகள் இம்மாதம் 27ஆம் தேதியன்று நடைபெறவுள்ளது. இதில் கலந்துகொள்ள அழைப்பு விடுத்து, அம்மன்றத்தின் சார்பில் அதன் செயலாளர் ஷாஹுல் ஜிஃப்ரீ கரீம் வெளியிட்டுள்ள அழைப்பறிக்கை வருமாறு:-
அன்பின் ஐக்கிய ராஜ்ஜியம் வாழ் காயலர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
நமது ஐக்கிய ராஜ்ஜிய காயல் நல மன்றத்தின் ஏழாவது பொதுக்குழுக்கூட்டம் மற்றும் மூன்றாம் ஆண்டு தொடக்கவிழா, இன்ஷா அல்லாஹ் இம்மாதம் 27ஆம் தேதி, மில்டன் கெய்ன்ஸ் மாநகரில் அமைந்துள்ள பென்ட்க்ராப் சந்திப்பு அரங்கில், காலை 10.45 மணி முதல் மாலை 05.45 மணி வரை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது அல்ஹம்துலில்லாஹ்.
இடம்:
Bancroft Meeting Place
29, Hadrians Drive
Bancroft
Milton Keynes
MK13 0QB
மன்றம் துவக்கபட்டது முதல் இன்று வரையுள்ள மன்ற செயல்பாடுகள் குறித்து இக்கூட்டத்தில் விளக்கப்படவுள்ளதோடு, மன்றத்தின் புதிய நிர்வாகக் குழு தேர்ந்தெடுக்கப்படவுள்ளது.
இன்ஷாஅல்லாஹ் நடைபெறவிருக்கும் இக்கூட்டத்தை மேலும் மெருகூட்டும் வகையில், நமது மன்ற உறுப்பினர்கள் பங்கேற்கும் பல்வேறு அணிகளுக்கான வினாடி-வினா போட்டி, நம் தாயகமாம் காயல்பட்டினம் நகரின் மரபுச் சொல் போட்டி, குழந்தைகளுக்கான விளையாட்டுப் போட்டிகள், ஆண்கள் - பெண்களுக்கான ‘120 வினாடி தொடர் பேச்சுப்போட்டி, மருத்துவர்களின் கேள்வி - பதில் நிகழ்ச்சி மற்றும் வெளிப்புற விளையாட்டுப் போட்டிகளுக்கும் (outdoor games) ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இயந்திரத்தனமான நகர வாழ்க்கையின் பரபரப்பை மறந்து மகிழ்வுற்றிருப்பதற்காக, இந்த அரிய வாய்ப்பை மன்ற உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் பயன்படுத்திக்கொள்ளும் பொருட்டு அத்தேதியில் உங்களின் அனைத்து சொந்த வேலைகளுக்கும் மாற்று ஏற்பாடுகள் செய்துவிட்டு, கூட்டத்தில் முழுமையாகக் கலந்து மகிழவும், மகிழ்விக்கவும் அன்புடன் அழைக்கிறோம்.
இப்பொதுக்குழுவின் உள்ளூர் பிரதிநிதியாக மன்றத்தின் ஒருங்கிணைப்பாளர் / செயற்குழு உறுப்பினர் ஹாஃபிழ் அப்துல் மதீன் லபீப் அவர்கள் செயல்படுவார்கள் என்பதை தெரிவித்து கொள்கின்றோம்.
உங்கள் யாவருக்கும் கருணையுள்ள அல்லாஹ் நல்லருள் புரிவானாக ஆமீன்....
மேலதிக விபரங்களுக்கு, uk@kayalpatnam.org.uk என்ற - மன்றத்தின் மின்னஞ்சல் முகவரியைத் தொடர்புகொண்டு கேட்டறியலாம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |