B.E. மற்றும் B.Tech. படிப்புகளுக்காக தமிழகத்தில் உள்ள அரசு பொறியியல் கல்லூரிகளில் சேரவும், தனியார் பொறியியல் கல்லூரிகளில் அரசு இடஒதுக்கீடு மூலம் சேரவும் விண்ணப்பங்கள் மே 4 முதல் விநியோகிக்கப்படும் (TNEA 2013) என அண்ணாபல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
விண்ணப்பங்கள் மே 20 வரை விநியோகிக்கப்படும் என்றும், விண்ணப்பங்களை சமர்பிக்க கடைசி தினம் மே 20 என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ரேண்டம் எண் (Random Number Allocation) ஜூன் 5 அன்றும், தர வரிசை பட்டியல் (Rank List) ஜூன் 12 அன்றும் வெளியிடப்படும்.
ஜூன் 21ம் தேதி முதல் ஜூலை 30ம் தேதி வரை கலந்தாய்வு நடைபெறுகிறது.
நேரடியாக விண்ணப்பங்களை பெற விரும்புவோர் ரூபாய் 500 செலுத்தி, குறிப்பிட்ட இடங்களில் பெற்றுக்கொள்ளலாம்.
தூத்துக்குடியில் விண்ணப்பங்கள் கிடைக்கும் இடங்கள்
(1) University VOC College of Engineering,
Thoothukudi – 628 008.
(2) B.C.M. Government Polytechnic for Women,
Ettayapuram - 627 902.
திருநெல்வேலியில் கிடைக்கும் இடங்கள்
(1) Regional Centre, Anna University, Perumalpuram,
Tirunelveli - 627 007.
(2) Rani Anna Government College for Women,
Tirunelveli - 627 008.
தபால் மூலம் விண்ணப்பத்தை பெற விரும்புவோர் - விண்ணப்ப கடிதம் ஒன்று எழுதி, ரூபாய் 700க்கு - The Secretary, Tamil Nadu Engineering Admissions என்ற பெயரிலான Demand Draft எடுத்து - The Secretary, Tamil Nadu Engineering Admissions
(TNEA), Anna University, Chennai - 600 025 என்ற முகவரிக்கு அனுப்பி பெறலாம். Draft க்கு பின்னால் தவறாது பெயரையும், முகவரியையும் எழுதவேண்டும். மேலும் Draft - மே 4 க்கு பின்னர் எடுக்கப்பட்டதாக இருக்கவேண்டும். விண்ணப்ப கடிதத்துடன், விண்ணப்பதாரர் முகவரியையும் தனியாக இணைத்து அனுப்பவேண்டும்.
www.annauniv.edu/tnea2013 என்ற முகவரியில் இணையதளம் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம்.
|