கர்நாடக மாநிலம் பெங்களூரு காயல் நல மன்றத்தின் 7ஆவது பொதுக்குழுக் கூட்டம் இம்மாதம் 28ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமையன்று நடைபெறவுள்ளது.
இக்கூட்டத்திற்கு அழைப்பு விடுத்து அம்மன்றத்தின் சார்பில் அதன் தலைவர் பி.எஸ்.ஏ.எஸ்.ஜெய்த் நூருத்தீன் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்பாளனுமாகிய எல்லாம்வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால்...
அன்பின் பெங்களூரு காயல் நல மன்ற உறுப்பினர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாதுஹ்... இறையருளால் இம்மடல் தங்கள் யாவரையும் பூரண உடல் நலமுடனும், தூய நகர்நலச் சிந்தனைகளுடனும் சந்திக்கட்டுமாக...
நம் மன்றத்தின் பொதுக்குழுக் கூட்டம் இன்ஷாஅல்லாஹ் எதிர்வரும் 28.04.2013 ஞாயிற்றுக்கிழமை மாலை சரியாக 05.00 மணி முதல் 06.00 மணி வரை, பெங்களூரு எம்.ஜி. ரோடு - மர்ஹூம் ஆடிட்டர் புகாரீ ஹாஜி அவர்களின் நிறுவன அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.
தாங்கள் யாவரும் இச்செய்தியையே அழைப்பாக ஏற்று, குறித்த நேரத்தில் அவசியம் வந்து கலந்துகொள்ளுமாறும், உங்களுக்கறிமுகமான இதர உறுப்பினர்களுக்கும் இத்தகவலைத் தெரிவித்து, அவர்களையும் கூட்டத்தில் பங்கேற்கச் செய்யுமாறும் அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
மேலதிக விபரங்களுக்கு, இக்கூட்டத்தின் ஒருங்கிணைப்பாளர்களான,
ஹாஃபிழ் மன்னர் பி.ஏ.செய்யித் அப்துர்ரஹ்மான்,
முஹம்மத் ஷிஹாபுத்தீன்,
வாவு முஹம்மத்,
கே.எம்.எஸ்.எல்.முஹம்மத் உமர்,
ஷேக்னா லெப்பை
ஆகியோரைத் தொடர்புகொண்டு கேட்டறியலாம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
பெங்களூரு காயல் நல மன்றம் சார்பாக,
K.K.S.ஸாலிஹ்,
பெங்களூரு, கர்நாடக மாநிலம். |