நடப்பு கோடை காலத்தை முன்னிட்டு, பொதுமக்களின் தாகம் தீர்ப்பதற்காக, தனியார் மேடை அலங்கார நிறுவனம் சார்பில் தண்ணீர் பந்தல், காயல்பட்டினம் எல்.கே.லெப்பைத்தம்பி சாலையில், பேருந்து நிறுத்தத்திற்கு எதிரிலுள்ள ஜாஃபர் ஸாதிக் வலிய்யுல்லாஹ் தர்ஹா அருகி திறந்து வைக்கப்பட்டது.
காயல்பட்டினம் கடற்கரை முஹ்யித்தீன் பள்ளியின் செயலாளர் ‘முத்துச்சுடர்’ ஹாஜி என்.டி.இஸ்ஹாக் லெப்பை தண்ணீர் பந்தலை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
தண்ணீர் பந்தல், திறப்பு நிகழ்ச்சி ஏற்பாடுகளை, அல்யவ்ம் டெக்கரேஷன் முஹம்மத் முஹ்யித்தீன் செய்திருந்தார்.
1. Re:...தாகத்துக்கு தண்ணீர் ஆனால் பந்தலை இடித்து விடாமல் பார்த்துக் கொள்ளுங்கள் posted bymackie noohuthambi (kayalpatnam)[21 April 2013] IP: 117.*.*.* India | Comment Reference Number: 26994
மனித நேயம் அருகி வரும் இந்த காலத்தில் அரசியல் கட்சிகள் அவர்கள் தலைவர்கள் பெயரால் தண்ணீர் பந்தல் வைத்து விளம்பரம் தேடுவதற்கு இப்போது தண்ணீர் பந்தலும் ஒரு காரணியாக அமைந்து விட்ட இந்த காலத்தில் பொது நலம் கருதி முத்துச்சுடர் மைந்தன் தண்ணீர் பந்தல் வைத்து தாகம் தீர்க்க முயற்சித்து இருப்பது வரவேற்கத்தக்கது.
ஆனால் ஹைவேய்ஸ் என்றும் என்க்ரோச்மென்ட் என்றும் கூறி தண்ணீர் பந்தலை அகற்றுவதற்கு அதிகாரிகள் வந்தாலும் வரலாம். கவனமாக பார்த்துக் கொள்ளுங்கள். இதுதான் "தர்ம சங்கடம்" என்று தமிழில் சொல்வார்கள். நாம் தர்மம் செய்யபோய் அது நமக்கு சங்கடமாக முடிந்து விடுகிறது.
அல்லாஹ் உங்களுக்கு இதற்கு கூலியாக நல்ல குடிநீரை சொர்க்கத்தில் தருவானாக.
2. Re:... posted byCnash (Makkah)[21 April 2013] IP: 46.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 27001
நன்மையை நாடி செய்யும் இந்த காரியத்திற்கு உங்களுக்கு அல்லாஹ் அருள்புரிவான்
அப்புறம் தர்ம சங்கடம் பற்றி மக்கி காக்கா கொடுத்திருக்கும் விளக்கம் இந்த நிகழ்வுக்கு பொருத்தமாக இருந்தாலும், அந்த தர்ம சங்கடம் வந்த உண்மையான கதை ஒரு *எ" கிளாஸ் .. பின்னணி புராண கதை...
தர்மரின் மனைவி பாஞ்சாலிக்கு, தர்மரோடு சேர்த்து ஐந்து கணவர்கள். . ஐந்து கணவர்கள் என்றாலும், கணவர்களுக்கு செய்தாகவேண்டிய ‘அந்தரங்க’ கடமைகளை நாளுக்கு ஒருவர் என்கிற அடிப்படையில் இந்த விஷயத்தை பிரித்துக் கொண்டார்கள். அதாவது அர்ஜூனன் உள்ளே இருந்தால், அறைவாசலில் அவனுடைய செருப்பு இருக்கும். நகுலனோ, சகாதேவனோ ‘அதற்காக’ வந்தால், வாசலில் செருப்பைப் பார்த்துவிட்டு, ‘அண்ணன் உள்ளே இருக்கிறார்’ என்பதை புரிந்துகொண்டு கிளம்பிவிடுவார்கள்.
அன்றைக்கு என்ன அவசரமோ தெரியவில்லை. தர்மர் செருப்பு போடாமல் வந்துவிட்டார். ரூமுக்குள்ளும் நுழைந்துவிட்டார். கொஞ்சநேரம் கழித்து ஆசையோடு பீமரும் வந்திருக்கிறார். வாசலில் செருப்பு எதுவும் இல்லாததால், அவரும் உள்ளே நுழைந்துவிட.. அங்கே தர்மரோடு பாஞ்சாலியை அந்தரங்க கோலத்தில் பார்த்துவிட்டாராம். ‘அம்மாதிரியான கோலத்தில் தம்பி நம்மை பார்த்துவிட்டானே’ என்று தர்மருக்கு ஏற்பட்ட சங்கடம்தான் ‘தர்ம சங்கடம்’ என்று ஆனதாம்.""
இனி தர்ம சங்கட வார்த்தையை உபயோகிக்கவே சங்கடமாய் இருக்குமே!!
3. Re:... posted byVilack SMA (HCM)[21 April 2013] IP: 14.*.*.* Vietnam | Comment Reference Number: 27002
தர்ம சங்கடம் ...... தம்பி Cnash இன் விளக்கம் ரசிக்கும்படியாக இருந்தது . அப்படியானால் " தர்ம அடி " ??? நானிருக்கும்போது நீ எதுக்குடா உள்ளே வந்தாய் என்று தர்மர் பீமருக்கு விளாசியதாய் இருக்குமோ ? தமிழ் பண்டிதர்கள் விளக்கம் சொல்லுங்களேன் !
எது எப்படியோ ... " தவிச்ச வாய்க்கு தண்ணீர் ஊற்றிய " இந்த புண்ணியவான்களுக்கு , அல்லாஹ் என்றென்றும் அருள் புரிவானாக .. ஆமீன்
7. Re:... posted byCnash (Makkah)[21 April 2013] IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 27010
செய்மாலி காக்கா , தர்ம சங்கடத்தை விட நீங்கள் கொடுத்த தர்ம அடி தர்ம பிரபு , விளக்கம் ரெம்ப அருமை ...ஒரு செருப்பு கதையை இப்படி ஒரு சிரிப்பு கதையாக மாற்றிடீங்க!! அப்படியே தர்மலிங்கம், தர்மபுரி, தர்மதுரை, அதுக்கும் எதாவது விளக்கம் சொல்லிடுங்க!!
8. Re:...தர்மத்துக்கு இவ்வளவு விளக்கமா? posted bymackie noohuthambi (kayalpatnam)[21 April 2013] IP: 117.*.*.* India | Comment Reference Number: 27012
அடேயப்பா! சிறிய ஒரு கோடு போட்டால் பெரிய ஹைவேய்ஸ் ரோடே போட்டு விடுகிறார்களே, நமது சிந்தனையாளர்கள். இப்படிதான் விமர்சனங்கள் சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்க வேண்டும். சிலர் சிரிக்கவே மாட்டார்கள் அப்படியே சிரித்தாலும் 6 பல் தெரிய மட்டும் சிரிப்பார்கள். எப்போதும் சீரியஸ் ஆகவே இருப்பார்கள். சிலர் கப்பலே கவிழ்ந்தாலும் கவலைப்பட மாட்டார்கள். சிரித்துக் கொண்டிருப்பார்கள், கேட்டால் நான் சம்பாத்தியம் பண்ணி வாங்கிய கப்பல் தானே, மீண்டும் சம்பாத்தியம் பண்ணினால் போச்சு, இதற்கு என்ன கவலை என்பார்கள்.
எப்படியோ முத்துச்சுடர் மைந்தன் வைத்த தண்ணீர் பந்தலுக்கு நல்ல வரவேற்பு.
அடுத்தாற்போல் வந்து விட்டது விளம்பர தண்ணீர் பந்தல். அண்ணா பந்தல், அம்மா பந்தல், கலைஞர் பந்தல், புரட்சி புயல் பந்தல் புரட்சி கலைஞர் பந்தல் இப்படி தெருவுக்கு தெரு தண்ணீர் பந்தல் வரும். யாராவது மோர் பந்தல் வைத்து எங்கள் தாகம் தணிக்க வருவார்களா..பொறுத்திருந்து பாப்போம்..
9. சிறிய திருத்தம்! posted byS.K.Salih (Kayalpatnam)[21 April 2013] IP: 117.*.*.* India | Comment Reference Number: 27013
இந்த தண்ணீர் பந்தலுக்கான முழு ஏற்பாட்டையும் செய்தவர், ‘அல்யவ்ம் டெக்கரேஷன்’ முஹம்மத் முகைதீன் அவர்கள். பந்தலைத் திறந்து வைத்தவர் ‘முத்துச்சுடர்’ என்.டி.இஸ்ஹாக் லெப்பை அவர்கள்.
மக்கீ நூஹுத்தம்பி மாமா அவர்கள் பார்வைக்காக இவ்விளக்கம்.
10. Re:... posted byZainul abdeen (Dubai)[22 April 2013] IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 27022
எனக்கு கிடைத்த விளக்கம். இணையத்தளத்தில் இருந்து சுட்டது.
மகாபாரதத்தில் கௌரவர்கள் மற்றும் பாண்டவர்கள் என்ற இரண்டு பிரிவினர்கள் இருந்தார்களாம். . இதில் பாண்டவர்கள் பிரிவில் மூத்தவரான தர்மர் ஒருநாள் தனிமையில் இருக்க வேண்டி காட்டுக்குள் தனியாகச் சென்றுகொண்டிருந்தார். கட்டுக்குள் நீண்ட தூரம் சென்று விட்டார். அப்போது அங்கு இரண்டு காட்டுவாசிகள் மிகவும் சிரமப்பட்டு தங்களின் உணவுக்காக சில ஆமையை நெருப்பில் போட்டு வேகவைக்க முயற்சி செய்து கொண்டிருதார்கள். இதை அருகில் சென்று கவனித்த தர்மருக்கு சங்கடமாக இருந்தது.
அந்த காட்டுவசிகளுக்கு கடுமையான பசி அதன் பொருட்டே அவர்கள் அந்த ஆமைகளை உணவாக்க நினைத்தார்கள். ஆனால் அந்த ஆமைகளை நெருப்பில் அவர்கள் போட்டவுடன் அந்த ஆமைகள் நெருப்பை விட்டு வெளியே வந்துவிடுகிறது. அவர்கள் மீண்டும் நெருப்பில் இடுவதும் அந்த ஆமைகள் நெருப்பை விட்டு வெளியே வருவதும் என மீண்டும்... மீண்டும்... அந்த சம்பவம் நடந்து கொண்டே இருந்தது.
அதை அங்கிருந்து கவனித்துக்கொண்டிருந்த தர்மர் எதுவும் கூறாமல் அங்கிருந்து கிளம்பி விட்டார். சரி இதில் தர்மருக்கு என்ன சங்கடம்? அந்த காட்டுவாசிகளுக்கு பயங்கரமான பசி அதை தீர்த்து வைக்கும் பொறுப்பு தர்மருக்கு இருக்கிறது. அதற்காக அவர் அந்த காட்டு வாசிகளுக்கு அந்த ஆமைகளை மல்லாக்க போட்டு வேகவையுங்கள் என்று கூறினால் போதும் அவர்கள் பசி ஆறிவிடும் (ஆமையை மல்லாக்க கவிழ்த்துப் போட்டால் அதனால் திரும்ப முடியாது. மேலும் ஆமையின் முதுகு ஓடு மிகவும் வலிமையானது. தீயில் வெந்தாலும் ஓடு எரியாது. ஆனால் மற்ற பாகங்கள் வெந்து உணவாக, அந்த ஓடே சட்டி போன்று பயன்படும்.)
இந்த சூச்சுமத்தை தர்மர் அந்த காட்டுவசிகளுக்கு கூறியிருந்தால் அவர்களின் பசி தீர்ந்து இருக்கும். ஆனால் அவர் சொல்லவில்லை காரணம் அந்த ஆமைகளின் உயிரை காக்கும் பொறுப்பும் தர்மருடையதுதான். ஏனென்றால் தர்மர் எமதர்மராஜாவின் அவதாரம் இந்த இரண்டு விசயத்தில் அவர் யாருக்கு உதவ முடியும். தர்மருக்கு நேர்ந்த இந்த இக்கட்டான சங்கடத்தையே தர்மர் சங்கடம் என்று கூறப்பட்டது. இதுவே பிற்காலத்தில் மருவி தர்மசங்கடம் என்ற சொல்லாகி விட்டதாம்
11. தர்ம சங்கட சாடல்! posted byமுஹம்மது ஆதம் சுல்தான் (yanbu)[22 April 2013] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 27023
நபிகளாரின் தண்ணீர் பந்தல் என்ற வார்த்தையை வாசிக்கும்போதே உள்ளம் பூரிப்படைந்து வந்ததாகம் தீர்ந்து தனியோனின் தவத் தாகம் தானாகவே ஏற்ப்படும் நிலையில் இருக்கும் நமக்கு,,
தர்ம சங்கடம் என்ற வார்த்தைக்கு அந்தரங்க உதாரணம் தான் கிடைத்ததா
தர்ம சங்கடம் என்பதற்கு ஆயிரம் ஆதாரங்களை அள்ளித் தெளிக்கலாம் தம்பி, குறைந்தது ஒன்றிரண்டு சம்பவங்களை கூட ஒவ்வொரு நாளும் உன்னை அறியாமலேயே நீ செய்து கொண்டிருப்பாய்!
உன் மேலுள்ள உரிமையில் எழுதுகிறேன் இந்த மாத்ரி உதாரணங்களை எல்லாம் உதறி விடுங்கள் உங்கள் எழுத்திலிருந்தும்,எண்ணத்திலிருந்தும்!.
இதுவும் ஒரு வகை தர்ம சங்ககட சாடலோ?
அல்லாஹ் அனைத்தும் அறிந்தவன்!
12. Re:... posted byCnash (Makkah)[22 April 2013] IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 27024
சகோதரர் ஜைனுலாப்தீன்! இந்த தர்ம சங்கட கதை நீண்டு போகிறது !! நீங்கள் சொல்லி இருக்கும் கதை .. தெரியவில்லை நான் படித்த கதை ..இதோ கலைஞர் கருணாநிதி அளித்த பேட்டியும் அதற்கு விளக்கம் என்ற பெயரில் விடுதலை நாளிதழ் சொல்லியதும் விமர்சனம் என்ற பெயரில் தினமலர் சொல்லியதும் உங்கள் பார்வைக்கு இதோ.
சமீபத்தில் கூட்டப்பட்ட திமுக உயர்நிலைக் கூட்டம் முடிந்ததும் கலைஞர் செய்தியாளர்களிடம் பேசினார்.
செய்தியாளர் : சி.பி.ஐ நடத்திவரும் ஸ்பெக்ட்ரம் வழக்கில் மத்திய அரசின் செயல்பாடுகள் உங்களுக்கு திருப்தியாக இருக்கிறதா, இந்தப் பிரச்சினை உங்களுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தி இருக்கிறதா?
கலைஞர் : தர்மருக்கு பாரதத்தில் ஏற்பட்ட தர்மசங்கடம் எங்களுக்கு ஏற்படாது. அது என்ன சங்கடம் என்பதை விவரிக்க விரும்பவில்லை.
கலைஞர் விவரிக்க விரும்பாத ‘சங்கடம்’ என்னவென்பதை விவரிப்பதில் நமக்கு தர்மசங்கடம் எதுவுமில்லை.
.................................................தர்மரோடு பாஞ்சாலியை பார்த்துவிட்டாராம். ‘அம்மாதிரியான கோலத்தில் தம்பி நம்மை பார்த்துவிட்டானே’ என்று தர்மருக்கு ஏற்பட்ட சங்கடம்தான் ‘தர்ம சங்கடம்’ என்று ஆனதாம். கலைஞர் விவரித்து சொல்ல விரும்பாத ‘தர்ம சங்கட’ கதை இதுதான்.
தினமலர்
"பாரதத்தில் தர்மருக்கு ஏற்பட்ட தர்மசங்கடம், எனக்கும் ஏற்பட்டிருக்கிறது' என, கருணாநிதி கூறுகிறார். தர்மருக்கு பல தர்மசங்கடங்கள் ஏற்பட்டன. கருணாநிதி எதைச் சொல்கிறார் என்பது புரியவில்லை. தர்மருக்கு ஏற்பட்ட சங்கடத்தில்,
இரண்டு: நச்சுப் பொய்கையில், யட்சன் கேட்ட கேள்விகளுக்கு, சரியான பதில்களைச் சொல்கிறார். அதனால் மகிழ்ந்த யட்சன், விஷ நீரை அருந்தி இறந்து கிடந்த தம்பிகளில் ஒருவரை உயிர்ப்பிக்கிறான். "இவர்களில் யார் உயிர் பிழைக்க வேண்டும்' என கேட்கிறான். இதுவும் தர்மரை தர்மசங்கடத்தில் ஆழ்த்துகிறது.
மூன்று: எப்போது பாஞ்சாலியின் அந்தப்புரத்திற்குப் போனாலும், வாசலில் ஒரு ஜோடி செருப்பு இருக்கும். இதனால், பாஞ்சாலிக்கும், பாண்டவர்களுக்கும் உறவே ஏற்படாமல், குழந்தையே பிறக்கவில்லை.
நான்கு: விராட தேச ராஜாவின் அரண்மனையில் தனித்து வாழ்ந்த போது, விராட தேச ராஜாவை, சொக்கட்டான் ஆட்டத்தில் தோற்கடிக்கவே, அவர் கோபத்துடன் காய்களை வீசி அடிக்க, அவை நெற்றியில் பட்டு ரத்தம் வடிந்தது. அப்போது, அவர் யார் என்ற உண்மை வெளிப்பட்டு விடுமோ என்ற பயம் ஏற்படுகிறது. இப்படி, தர்மருக்கு எத்தனையோ தர்ம சங்கடங்கள். . இதில் எந்த தர்மசங்கடத்தைச் சொல்கிறார் கருணாநிதி?
மாஷா அல்லாஹ்.இந்த தண்ணீர் பந்தல் நம் ஊர் பெண்கள்..../ வயதானவர்களுக்கும் ..... பேங்க் / கூலக்கடை பஜார் ...பகுதிகளுக்கு போக கூடிய யாவர்களுக்கு இது ஒரு வர பிரசாரம் .......
பல அரசியல் கட்சிகளுக்கிடையில் நம் ஊர் பொது மக்களால் திறக்க பட்டு உள்ள இந்த தண்ணீர் பந்தல் தான் மிகவும் சிறப்பு வாய்ந்தது ........திறக்கபட்டு உள்ள இடமும் பொருத்தமானதும் கூட................இதில் நம் மக்களின் .... பாசமும் / நேசமும் .... கூடவே ஒற்றுமையும் கலந்து இருக்கும் ..............
14. அவரால் இயன்ற உதவிகளையும் செய்ய நாம் ஊக்கபடுதுவோமாக ... பாராட்டுவோமாக posted byநட்புடன் - தமிழன் முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்.)[23 April 2013] IP: 117.*.*.* India | Comment Reference Number: 27034
கட்சிகளுக்கு அப்பாற்ப்பட்டு தனது சொந்த முயற்சியில் ஒரு நல்ல காரியத்தை செய்துள்ளார்..
தண்ணீர் பந்தலுக்கான முழு ஏற்பாட்டையும் செலவுகளையும் செய்த அல்யவ்ம் டெக்கரேஷன்’ முஹம்மத் முகைதீன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்... அல்லாஹ் இவரின் தொழிலை மேம்படுத்தி மேலும் நல்ல காரியங்களில் தனது நேரத்தையும் அவரால் இயன்ற உதவிகளையும் செய்ய நாம் ஊக்கபடுதுவோமாக ... பாராட்டுவோமாக...
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross