காயல்பட்டினம் நகராட்சியில் - பொது நிதி, IUDM திட்ட நிதி மற்றும் சட்டமன்ற உறுப்பினர் திட்ட நிதி ஆகியவை மூலம் 18 பணிகள், 161 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் நடைபெற்று வருகின்றன.
பணிகளின் தரம் குறித்து புகார்கள் பெறப்பட்டதை அடுத்து, இது குறித்து விசாரிக்க நகர்மன்றத் தலைவர் ஐ. ஆபிதா சேக், மாவட்ட ஆட்சியரிடம் கடிதம் ஒன்றையும் வழங்கினார்.
மேலும் சாலைப்பணிகள் முறைப்படி நடைபெறவில்லை என்றும், இதுகுறித்து தாசில்தார், லஞ்ச ஒழிப்புத் துறை, உயர்மட்ட அதிகாரிகள் குழுவைக் கொண்டு விசாரிக்க வேண்டும் என்றும், ஊழல் எதிர்ப்பு இயக்கம் - சென்னை அமைப்பின் காயல்பட்டினம் நகர கிளை சார்பில், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரகத்தில் 04.02.2013 திங்கட்கிழமையன்று நடைபெற்ற மக்கள் குறைகேட்புக் கூட்டத்தின்போது முறையிடப்பட்டது.
இதனை அடுத்து, மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் காயல்பட்டினம் சாலைப் பணிகளை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
ஆய்வு செய்த குழு தனது அறிக்கையை மாவட்ட ஆட்சியர் ஆஷிஷ் குமார் IAS - யிடம் சமீபத்தில் சமர்ப்பித்தது. அந்த அறிக்கையில் காயல்பட்டினம் நகராட்சியில் சாலைகள் முறையாக போடப்படவில்லை என்றும், அதனால் நகராட்சிக்கு இழப்பு ஏற்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
நிபுணர் குழுவின் இந்த அறிக்கையை - மாவட்ட ஆட்சியர், சென்னையில் உள்ள நகராட்சி நிர்வாகத்துறை அதிகாரிக்கு அனுப்பியுள்ளதாக தெரிகிறது. அதனை தொடர்ந்து - திருநெல்வேலியில் உள்ள மண்டல நகராட்சி நிர்வாகத்துறையின் இயக்குனர் டி.மோகன் - காயல்பட்டினம் நகராட்சிக்கு, ஏப்ரல் 18 அன்று வந்ததாகவும் கூறப்படுகிறது.
பிப்ரவரி 26 அன்று மண்டல நகராட்சி நிர்வாகத்துறையின் இயக்குனர் டி.மோகன் சாலைப் பணிகளைப் பார்வையிட்ட காட்சி...
ஏப்ரல் 18 அன்று அன்று மண்டல நகராட்சி நிர்வாகத்துறையின் இயக்குனர் டி.மோகன் காயல்பட்டினம் வந்தபோது எடுக்கப்பட்ட படம்...
படங்களில் உதவி:
சேனா, பாங்காக். |