கையில் வெட்டுக் காயத்துடன், திருச்செந்தூரிலுள்ள அரசு மருத்துவமனையில் காயலர் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், தான் தாக்கப்பட்டதாக காவல்துறையிடம் அவர் புகார் அளித்துள்ளதாகவும், காயல்பட்டணம்.காம் செய்தி வெளியிட்டிருந்தது.
இது தொடர்பாக, காயல்பட்டினம் தைக்கா தெருவைச் சேர்ந்த எஸ்.எம்.அஹ்மத் ஃபரீத், கே.டி.எம். தெருவைச் சேர்ந்த என்.எம்.முஹம்மத் இக்பால் ஆகியோர் விளக்கமளித்துள்ளனர். அதில்,
காயல்பட்டினம் தைக்கா தெருவைச் சேர்ந்த எஸ்.எம்.அகமது பரீத், கடந்த 01.05.2012இல் காயல்பட்டினம் கூலக்கடை பஜாரில், N.M.டிரேடர்ஸ் பம்புசெட் ஹார்டுவேர் கடையை தன் சொந்தப் பணத்தில் துவக்கியதாகவும்,
19.09.2012 அன்று, அமெரிக்க நாட்டிலிருக்கும் தன் மகளைப் பார்ப்பதற்காக புறப்பட்டுச் சென்று, 05.03.2013 அன்று திரும்பியதாகவும்,
அதுவரை கடையை நடத்த, சதுக்கைத் தெருவைச் சேர்ந்த தங்க தம்பி காதர் சாகிபு என்பவரை கடை ஊழியராக நியமித்துச் சென்றதாகவும்,
அமெரிக்காவிலிருந்து திரும்பி வருவதற்குள், கடைக்குரிய ஆவணங்களை சட்ட விரோதமாக மாற்றி மோசடி செய்து, கடை ஊழியராக இருந்த அவர் தன்னை கடை உரிமையாளராக்கிக் கொண்டதாகவும், தனது கையெழுத்தைப் போலவே கையெழுத்திட்டு நம்பிக்கை மோசடி செய்தது குறித்து ஆறுமுகநேரி காவல் நிலையத்தில் கடந்த மார்ச் மாதத்தில் புகார் செய்துள்ளதாகவும்,
அதன் பின்னர், தான் செய்த குற்றங்களுக்கு அஞ்சி, கடையை அவராகவே தங்களிடம் ஒப்படைத்ததாகவும், எஸ்.எம்.அகமது பரீத் கூறியுள்ளார்.
தற்போது, வீரபாண்டியன்பட்டினம் - காயல்பட்டினம் இடையில் நடந்த நிகழ்வில் தனக்கோ - தனது மகளின் மாமனார் என்.எம்.முஹம்மத் இக்பாலுக்கோ துளியளவும் தொடர்பில்லை என அல்லாஹ்வின் மீது ஆணையிட்டுக் கூறுவதாகவும், இது உண்மைக்குப் புறம்பாக தங்க தம்பி காதர் சாகிப் திட்டமிட்டு சித்தரித்ததே என்றும் அவர் மேலும் கூறியுள்ளனர்.
[செய்தி திருத்தப்பட்டுள்ளது @ 13:52 / 20.04.2013] |