காயல்பட்டினம் கே.டி.எம். தெருவிலுள்ள - எழுத்தாளரும், ஓவியருமான ஏ.லெப்பை ஸாஹிப் என்ற ஏ.எல்.எஸ். மாமா நடத்தும், ஏ.எல்.எஸ். ஸ்கூல் ஆஃப் ஆர்ட்ஸ் ஓவியப் பள்ளியின் சார்பில், 9ஆம் ஆண்டாக, நடப்பாண்டு கோடை விடுமுறையை முன்னிட்டு, 02ஆம் வகுப்பு முதல் 06ஆம் வகுப்பு வரை பயிலும் பள்ளி மாணவ-மாணவியருக்கான உயிரற்ற ஓவியங்கள் வரையும் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படவுள்ளது.
27.04.2013 சனிக்கிழமை காலை 11.00 மணிக்கு, காயல்பட்டினம் ரஹ்மானிய்யா மழலையர் பள்ளியில் துவங்கி, ஒவ்வொரு நாளும் காலை 11.00 மணி முதல் 12.00 மணி வரை ஒரு மாதம் பயிற்சி வகுப்புகள் நடைபெறவுள்ளது.
அதுபோல, 28.04.2013 ஞாயிற்றுக்கிழமையன்று மதியம் 02.00 மணிக்கு, காயல்பட்டினம் 229ஏ, பஞ்சாயத்து ரோடு என்ற முகவரியிலுள்ள அல்மர்ஹமா இல்லத்தில் துவங்கி, ஒவ்வொரு நாளும் மதியம் 02.00 மணி முதல் 03.00 மணி வரை ஒரு மாதம் பயிற்சி வகுப்புகள் நடைபெறும்.
விண்ணப்பப் படிவங்களை, பெண்கள் 25.04.2013 முதல், காயல்பட்டினம் கே.டி.எம். தெருவிலுள்ள தனது இல்லத்திலும், ஆண்கள் அன்று இரவு 08.00 மணி முதல் 09.00 மணி வரை, காயல்பட்டினம் மாஸ்டர் கம்ப்யூட்டர் அகடமி எதிரிலுள்ள மாடியில் அமைந்துள்ள ‘முத்துச்சுடர்’ மாத இதழ் அலுவலகத்திலும் பெற்றுக்கொள்ளலாம் என ஏ.லெப்பை ஸாஹிப் என்ற ஏ.எல்.எஸ். மாமா தெரிவித்துள்ளார். |