மார்ச் 2013 முடிய, 2012 - 2013 நிதியாண்டில் காயல்பட்டினம் நகராட்சிக்கு, பிடித்தங்கள் போக, தமிழக அரசு மூலமாக 3 கோடியே , 13 லட்சத்து, 58 ஆயிரத்து, 772 ரூபாய் அனுப்பப்பட்டுள்ளது. அதில் பென்ஷன் வகை, சிறப்பு சாலை அமைப்பு திட்டங்களுக்காக TUFIDCO
நிறுவனத்திற்கு செலுத்தப்பட்ட கடன், குடிநீர் விநியோக கடன் வகைக்கு HUDCO நிறுவனத்திற்கு செலுத்தப்படும் தொகை - ஆகிய வகைக்களுக்கு 95
லட்சத்து , 61 ஆயிரத்து 339 ரூபாய் பிடித்தம் (deductions) போக மீதி தொகை மொத்தம் 2 கோடியே , 17 லட்சத்து , 97 ஆயிரத்து 433 ரூபாய் -
நகராட்சிக்கு வழங்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு - மாநிலத்தில் உள்ள ஒவ்வொரு உள்ளாட்சி மன்றத்திற்கும், அதன் தகுதி - மற்றும் மக்கள் தொகை அடிப்படையில் - ஒவ்வொரு
மாதமும் மானியம் வழங்கிவருகிறது. இம்மானியமே - உள்ளாட்சி மன்றங்களின் வருவாயில் பெரும்
பங்கினை வகிக்கிறது.
இவ்வாண்டு பிப்ரவரி - மார்ச் மாதங்களில் வழங்கப்பட்ட மானியத் தொகை விபரம் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
பிப்ரவரி - மார்ச் 2013
அரசு உதவி தொகை (A) - 52,26,462
பிடித்தங்கள்:
(a) Pension Demand (February - March) - 3,44,697
(b) TUFIDCO (TIFS) - 56,097
Repayment of Water Supply Loan to TUFIDCO
(c) Principal - ---
(d) Interest - ---
பிடித்தம் (Deductions) (a+b+c+d = B) - 4,00,794
பிடித்தம் போக நகராட்சிக்கு வழங்கப்பட்ட தொகை (A-B) - 48,25,668
ஏப்ரல் 2012 - மார்ச் 2013
அரசு உதவி தொகை (A) - 3,13,58,772
பிடித்தம் (Deductions) (B) - 95,61,339
பிடித்தம் போக நகராட்சிக்கு வழங்கப்பட்ட தொகை (A-B) - 2,17,97,433
2011 - 2012 நிதியாண்டில் - காயல்பட்டினம் நகராட்சிக்கு, தமிழக அரசு
மூலமாக 3 கோடியே , 27 ஆயிரத்து 208 ரூபாய் அனுப்பப்பட்டுள்ளது. அதில் பென்ஷன் வகை, சிறப்பு சாலை அமைப்பு திட்டங்களுக்காக TUFIDCO
நிறுவனத்திற்கு செலுத்தப்பட்ட கடன், குடிநீர் விநியோக கடன் வகைக்கு HUDCO நிறுவனத்திற்கு செலுத்தப்படும் தொகை - ஆகிய வகைக்களுக்கு 58
லட்சத்து , 67 ஆயிரத்து 380 ரூபாய் பிடித்தம் (deductions) போக மீதி தொகை மொத்தம் 2 கோடியே , 41 லட்சத்து , 59 ஆயிரத்து 828 ரூபாய் -
நகராட்சிக்கு வழங்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் 2011 - மார்ச் 2012
அரசு உதவி தொகை (A) - 3,00,27,208
பிடித்தம் (Deductions) (B) - 58,67,380
பிடித்தம் போக நகராட்சிக்கு வழங்கப்பட்ட தொகை (A-B) - 2,41,59,828
தகவல்:
நகராட்சி நிர்வாகத்துறை, சென்னை.
|