தமிழகத்தில் இருந்து இந்திய ஹஜ் குழு மூலம் இவ்வாண்டு ஹஜ் பயணம் மேற்கொள்ள உள்ள யாத்திரிகர்களை தேர்வு செய்ய குலுக்கல் ஏப்ரல் 23 அன்று நடைபெறவுள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அரசு செய்தி குறிப்பு வருமாறு:
ஹஜ் 2013-ல் ஹஜ் பயணம் மேற்கொள்வதற்காக தமிழ்நாட்டைச் சேர்ந்த 11,000-க்கும் மேற்பட்டவர்களிடமிருந்து விண்ணப்பங்கள், தமிழ்நாடு மாநில ஹஜ் குழுவால் பெறப்பட்டுள்ளன. ஆனால், தமிழ்நாட்டிற்கான ஓதுக்கீடு சுமார் 3000 மட்டுமே. எனவே, மும்பை, இந்திய ஹஜ் குழுவின் அறிவுரைப்படி, ஹஜ் 2013-ற்கான புனிதப் பயணிகளைத் தெரிவு செய்ய, குலுக்கலை (குறா) நடத்த தமிழ்நாடு மாநில ஹஜ் குழு முடிவு செய்துள்ளது. இந்நிகழ்ச்சி 23.04.2013 (செவ்வாய்க்கிழமை) அன்று மாலை 4.00 மணியளவில், சென்னை, இராயப்பேட்டை, புதுக்கல்லூரி வளாகத்திலுள்ள ஆனைக்கார் அப்துல் ஷுக்கூர் கலையரங்கத்தில் நடைபெறவுள்ளது.
2. தமிழ்நாடு மாநில ஹஜ் குழு மூலமாக ஹஜ் 2013-ல் பயணத்திற்காக விண்ணப்பித்துள்ள புனிதப் பயணிகள், இக்குலுக்கலில் (குறாவில்) கலந்து கொண்டு நிகழ்ச்சியினை அமைதியாகவும், சிறப்பாகவும் நடத்துவதற்கு ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
க.அருள்மொழி
அரசு முதன்மைச் செயலாளர்
இவ்வாறு அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
இயக்குநர், செய்தி – மக்கள் தொடர்புத் துறை,
சென்னை - 9.
|