காயல்பட்டினம் கடற்கரை நுழைவாயிலுக்கு முன்பாக சுமார் 50 அடி தொலைவிலுள்ள தனியார் நிலத்தின் வேலிக்குள் கொட்டப்பட்டுள்ள குப்பைகளின் காட்சிகள்தான் இவை.
நகராட்சியின் குப்பை சேகரிக்கும் வாகனம் குறித்த கால வரையறைப்படி வருவதில்லை என்பதைக் காரணங்காட்டி, பொது சுகாதாரத்தை மதியாத சில பொதுமக்கள் ஆங்காங்கே இதுபோன்று அமைந்துள்ள ஆள் அரவமற்ற தனியார் நிலங்களிலும், பள்ளிவாசல்கள் மற்றும் பள்ளிக்கூடங்களின் வளாகங்களிலும், ப்ளாஸ்டிக் உறைகளில் குப்பைகளைக் கொட்டி, உறையை முடிச்சு போட்டு, வாகனத்தில் சென்றவாறே வீசியெறிந்துவிட்டுச் செல்கின்றனர்.
இவ்வாறு வீசப்படும் குப்பைப் பொதிகளில் சில அங்குள்ள மரங்களிலேயே தங்கி, ‘கடற்கரைக்கு வருவோரை வரவேற்கும் தோரணம்’ போல காட்சியளிக்கிறது.
|