புதிதாகத் துவக்கப்படவுள்ள விஸ்டம் பப்ளிக் ஸ்கூல் பள்ளிக்கு, இலச்சினை மற்றும் முழக்கம் உருவாக்குவதற்கான போட்டியில் வெற்றிபெற்றோர் விபரம் வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்து, அப்பள்ளியை நிர்வகிக்கும் VISION EDUCATIONAL TRUST சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை வருமாறு:-
வரும் கல்வியாண்டில், CBSE பாடத்திட்டத்தின் கீழ் புதிதாகத் துவக்கப்படவுள்ள WISDOM PUBLIC SCHOOL பள்ளிக்கு, இலச்சினை (Logo) மற்றும் முழக்கம் (Slogan) உருவாக்கப்படவுள்ளதாகவும், ஐந்தாயிரம் ரூபாய் பரிசளிக்கப்படும் என்றும், பள்ளியை நிர்வகிக்கும் VISION EDUCATIONAL TRUST சார்பில் போட்டி அறிவிக்கப்பட்டிருந்தது.
தற்பொழுது இலச்சினை மற்றும் முழக்கம் போட்டிகளின் முடிவுகளை வெளியிடுகிறோம். எங்கள் விஸன் டிரஸ்டின் அறங்காவலர்கள் ஜனநாயக முறைப்படி வாக்களித்து தேர்ந்தெடுத்த வெற்றி இலச்சினை மற்றும் முழக்கம் பின்வருமாறு:-
இலச்சினை
வெற்றி பெற்றவர்:
முஹம்மது ஹசன்
Professional Designer
சென்னை
முழக்கம்
Empowering Generation Next
வெற்றி பெற்றவர்:
சகோதரி ஃபஹ்மியா
காயல்பட்டினம்
வெற்றி பெற்ற மற்றும் வெற்றிக்கு முனைந்த அனைவருக்கும் பாரட்டுக்கள், ஜஸாக்குமுல்லாஹு ஹைரன். வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் நம் பள்ளியின் திறப்பு விழாவின் போது இன்ஷா அல்லாஹ் வழங்கப்படும்.
அல்ஹம்துலில்லாஹ், நம் பள்ளியின் மாணவர் சேர்க்கை தொடர்ந்து கொண்டு இருக்கிறது.
குறிப்பு: LKG: No Vacancy UKG: Very Few Seats 1st:std No Vacancy 2nd-std 5th std : Few Seats
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
ஹசன் |