சிங்கப்பூர் காயல் நல மன்றத்தின் வருடாந்திர பொதுக்குழுக் கூட்டத்தை முன்னிட்டு, முன்னோடி விளையாட்டுப் போட்டிகள் பல நடத்தி முடிக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து, அம்மன்றத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை வருமாறு:-
எல்லாம் வல்ல அல்லாஹ்வின் பேரருளால், சிங்கை காயல் நல மன்றத்தின் வருடாந்திர பொதுக்குழு ஒன்று கூடல் எதிர் வரும் ஏப்ரல் 13ம் தேதி அன்று ஏற்பாடு செய்யபட்டுள்ளது.
இதனை முன்னிட்டு பற்பல போட்டிகள் நடாத்தப்பட்டன.
குறுந்தொலை ஓட்டம் (Mini Marathon):
2.2 KM கொண்ட குருந்தொலை ஓட்டம் 29, மார்ச் 2013 அன்று சரியாக 05:30 மணி அளவில் பெடோக் ரெசெர்வைர் மைதானத்தில் நடத்தப்பட்டது. இந்த போட்டியில் 40 உறுப்பினர்கள் உற்சாகத்துடன் கலந்து கொண்டனர். இந்த நிகழ்விற்காக Rs. 25,000 மன்றத்திருக்கு வழங்கப்பட்டது.
இந்த நிகழ்வின் மூலம் திரட்டப்பட்ட உதவித்தொகையை அவசர மருத்துவ உதவிக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. ஏரளாமான உறுப்பினர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்ட இப்போட்டி, மன்ற உறுப்பினர் சாளை நவாஸ் ஒருங்கிணைப்பில் நடைபெற்றது.
முதல் மூற்று இடத்தை தட்டி சென்ற போட்டியாளர்களின் பெயர்கள் வருமாறு:
முதல் இடம் : சோனா மஹ்மூத் மானாதம்பி
இரண்டாவது இடம் : செய்யத் அப்துர் ரஹ்மான்
மூன்றாவது இடம் : முஹம்மத் லெப்பை அஹ்னாப்
கைப்பந்து போட்டி (Volley Ball):
கைப்பந்து போட்டி 16 மார்ச், 2013 அன்று சரியாக மாலை 05:00 மணி அளவில் நடத்தப்பட்டது. இப்போட்டி மன்ற உறுப்பினர் M.A.C செய்யத் இஸ்மாயீல் அவர்களால் ஒருங்கிணைக்கப்பட்டது. மூன்று அணிகளை கொண்டு மிக சிறப்பாகவும் விறுவிறுப்பாகவும் சென்ற இப்போட்டியின் இறுதியில் M.J செய்யத் அப்துர் ரஹ்மான் அவர்களின் தலைமையில் விளையாடிய அணி வெற்றி பெற்றது.
கால்பந்து போட்டி (Foot Ball):
கால்பந்து போட்டி 23 மார்ச்,2013 அன்று சரியாக மாலை 05:00 மணி அளவில் கல்சா கால்பந்து கழகம் என்ற மைதானத்தில் நடத்தப்பட்டது. இப்போட்டி மன்ற உறுப்பினர் M.J செய்யத் அப்துர் ரஹ்மான் அவர்களால் ஒருங்கிணைக்கப்பட்டது. உறுப்பினர்கள் மூன்று அணிகளாக பிரிக்கப்பட்டனர். மிக வேகமாகவும் உற்சாகமாகவும் சென்ற போட்டி சுமார் 2 மணி நேரம் நீடித்தது. இப்போட்டியின் இறுதியில் M.J செய்யத் அப்துர் ரஹ்மான் அவர்களின் தலைமையில் விளையாடிய அணி வெற்றி பெற்றது.
35 வயதிற்கு மேற்பட்ட மூத்த உறுப்பினர்களுக்கான TIE BREAKER போட்டி கால்பந்து ஆட்டத்தின் இறுதியில் நடத்தப்பட்டது. பங்கேற்ற போட்டியாளர்கள்:
1. அல்-ஹாஜ் PMA முஹம்மத் ஹஸன்
2. VNS முஹம்மத் முஹ்ஸின்
3. சாலை முஹம்மத் நவாஸ்
4. KMT ஷேய்க்னா லெப்பை
5. ST ஸூஃபி ஹுசைன்
அல்-ஹாஜ் PMA முஹம்மத் ஹஸன் இப்போட்டியை வென்றார். வெற்றியாளர்களுக்கு வருடாந்திர பொதுக்குழு அன்று பரிசுகள் வழங்கப்படும் இன்ஷா அல்லாஹ்...
இவ்வாறு, அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல் & படங்கள்:
சிங்கை கா.ந.மன்றம் சார்பாக,
ஹாஃபிழ் M.A.C.செய்யித் இஸ்மாஈல்
சிங்கப்பூர் |