தமிழக அரசின் நடப்பு பட்ஜெட்டில் (2013-14) காயல்பட்டினம் நகராட்சிக்கு சில சலுகைகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழக முதல்வர் ஜெ. ஜெயலலிதா, ஏப்ரல் 10 அன்று காயல்பட்டினம் உட்பட தமிழகத்தில் உள்ள 24 நகராட்சிகளில் நவீன உயிரி எரிவாயு கூடங்கள் (BIO-GAS PLANT) அமைக்க சட்டசபையில் அறிவிப்பு வெளியிட்டார்.
மேலும் - பழுதடைந்துள்ள காயல்பட்டினம் நகர்மன்ற கட்டிடத்தை புதுப்பிக்க 1.5 கோடி ரூபாயும் நடப்பு பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
நகரில் இந்த அறிவிப்புகளுக்கு முதலமைச்சருக்கு நன்றி கூறி, தைக்கா தெரு, மக்தூம் தெரு, புதுக்கடை தெரு இளைஞர்கள் என்ற பெயரில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.
மேலும் நகர்மன்றத் தலைவர் ஐ. ஆபிதா சேக் பெயரில் துண்டு பிரசுரங்கள் - ஏப்ரல் 12, 2013 அன்று - ஜும்மாவிற்கு பின் விநியோகம் செய்யப்பட்டது.
1. Re:... posted byCnash (Makkah )[13 April 2013] IP: 87.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 26852
இது ஒரு அரசின் கடமை. திட்டகளை நிறைவேற்ற வேண்டிய பொறுப்பில் ஆளும் அரசு இருக்கிறது இதற்கு நகராட்சி சார்பில் அதன் தலைவி நன்றி தெரிவிப்பது சரி ..ஏன் தீர்மானம் நிறைவேற்றி கூட நன்றி தெரிவிக்கலாம் இதற்கு ஒரு நோட்டீஸ் போஸ்டரா? ... அது என்ன ...... இப்படி ஒவ்வொரு தெரு இளைஞர்கள் போஸ்டர் ஓட்ட ஆரம்பித்தால் ... இந்த பணத்தை வேறு நல்ல விதத்தில் பயன்படுத்தலாமே!!!
நமதூரிலும் வர வர போஸ்டர் மோகம் அதிகமாகி வருவதை அறிந்து கொள்ள முடிகிறது ..
2. RE..நன்றி நன்றி நன்றி! posted byOMER ANAS (doha qatar.boddi etharkku)[13 April 2013] IP: 78.*.*.* Qatar | Comment Reference Number: 26858
நகரில் இந்த அறிவிப்புகளுக்கு முதலமைச்சருக்கு நன்றி கூறி, தைக்கா தெரு, மக்தூம் தெரு, புதுக்கடை தெரு இளைஞர்கள் என்ற பெயரில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. ( C & P )
நமது ஊருக்கு வேண்டி யார் நல்லது செய்தாலும், அவர்களுக்கு நன்றி நன்றி நன்றி!
என்றும் நமதூருக்கு வேண்டி நன்மை செய்திட நமக்குள் போட்டி வேணும்!ஆனால் என்றும் நமக்குள்,வீணான
பொறாமை வேணாம்!
ஏட்டுச்சுரைக்காய் என்றும் கூட்டுக்கு உதவாது.
அதை புரிந்து கொள்வோர் மட்டுமே புத்திசாலிகள்!
வீணான துண்டு பிரசுரம் யார் விட்டாலும்,அதில் கூட நமது ஊர் ஒற்றுமையினை கருதி மட்டுமே இருக்குமேயானால் அதற்கும் எமது நன்றி!
3. Re:...அம்மா..அம்மா..சர்வமும் அம்மா மாயம் posted bymackie noohuthambi (kayalpatnam)[13 April 2013] IP: 117.*.*.* India | Comment Reference Number: 26862
நகரமன்ற உறுப்பினர்கள் அம்மா திமுகவில் இணைந்தார்கள், அவர்களுக்கு முன்னதாகவே அம்மாவுடன் இனைந்து செயல்படபோவாதாக நகரன்ற தலைவி அறிவித்தார்கள் . அனால் ஆமையும் முயலும் பந்தயம்போட்டு ஓடிய கதைபோல் முயல் தூங்க ஆமை ஓடி ஜெயித்த கதைபோல் ஆகிவிட்டது.
இப்போது எல்லோரும் அம்மா..அம்மா...அம்மா என்று ஒரே குரலில் புகழ்ந்து பேச ஆரம்பித்து விட்டார்கள். அம்மாவுக்கே ஆச்சரியமும் அதிர்ச்சியும் ஏற்பட்டிருக்கும்.அவர்கள் சதுரங்க ஆட்டத்தில் எந்த காய்கள் இழப்பை சந்திக்குமோ அந்த அம்மாவே அறிவார்.
ஊருக்கு நலத்திட்டங்களை அள்ளி வழங்கியுள்ள அம்ம்மாவை நகர மக்களும் பாராட்டவே வேண்டும். ஆனால் இந்த நலத்திட்டங்களை அமுல்படுத்தும் பொறுப்பு அதிகாரிகளிடமே விடப்படுமா அல்லது நமது நகரன்ற தலைவியிடம் உறுப்பினர்களிடம் ஒப்படைக்கப்படுமா என்று தெரியவில்லை. எது எவ்வாறாயினும் அம்மாக்கள் ஆட்சி முடியுமும் இந்த திட்டங்கள் செயல்வடிவம் பெற்றால் அவர்கள் பெயர் சொல்லும். இல்லை என்றால் ......IT IS A MILLION DOLLAR QUESTION.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross