இந்திய ஹஜ் குழு மூலம் இவ்வாண்டு ஹஜ் பயணம் மேற்கொள்ள, பிப்ரவரி 6 முதல் மார்ச் 30 வரை விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அவைகள் தற்போது கணினியில் ஏற்றப்பட்டு வருகின்றன.
நாடு முழுவதும் சுமார் 3,04,000 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன என அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து 3 ஆண்டுகளாக விண்ணப்பம் செய்துள்ளவர்கள், 70 வயதை தாண்டிய விண்ணப்பதாரர்கள் எண்ணிக்கை போன்ற விபரங்கள் - கணினியில் ஏற்றும் பணி நிறைவுற்றதும் தெரியவரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெறப்பட்ட விண்ணப்பங்கள் கொண்டு பயணியரை தேர்வு செய்ய குலுக்கல் (Qurrah) - சென்னையில் ஏப்ரல் 22, 2013 அன்று நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முக்கிய மாநிலங்கள் வாரியாக பெறப்பட்டுள்ள விண்ணப்பங்கள் (சுமார்) எண்ணிக்கை விபரம் வருமாறு:
குஜராத் - 44,000
கேரளா - 44,000
மகாராஷ்டிரா - 41,000
உத்தர் பிரதேஷ் - 35,000
ஜம்மு காஷ்மீர் - 22,000
ஆந்திரா பிரதேஷ் - 17,000
கர்நாடகா - 15,500
ராஜஸ்தான் - 14,000
மத்திய பிரதேஷ் - 13,500
தமிழ்நாடு - 11,500
மேற்கு வங்காளம் - 11,000 |