சிங்கப்பூர் காயல் நல மன்றத்தின் வருடாந்திர பொதுக்குழுக் கூட்டம், இம்மாதம் 13ஆம் தேதி நடைபெறுகிறது. இக்கூட்டத்திற்கான நிகழ்ச்சி நிரல் அம்மன்றத்தின் சார்பில் பின்வருமாறு வெளியிடப்பட்டுள்ளது:-
இக்கூட்டத்திற்கு அழைப்பு விடுத்து, அம்மன்றத்தின் சார்பில் அதன் செயலாளர் மொகுதூம் முஹம்மத் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-
அன்பார்ந்த சிங்கப்பூர் காயல் நல மன்ற உறுப்பினர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காதுஹ்...
இறையருளால் நம் மன்றத்தின் வருடாந்திர பொதுக்குழுக் கூட்டம் இம்மாதம் 13ஆம் தேதி சனிக்கிழமை (நாளை) மாலை 04.00 மணிக்கு, சிங்கப்பூரிலுள்ள Fairy Point Sea View Chalet 3 என்ற இடத்தில் நடைபெறுகிறது. அன்றிரவு 19.45 மணிக்கு கூட்ட நிகழ்வுகள் முறைப்படி துவங்கவுள்ளன.
இக்கூட்டத்தில், ஹாஜி கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர், ஹாஜி எம்.எஸ்.ஷாஜஹான், ஜனாப் இஸ்மத் ஷாஜஹான் ஆகியோர் சிறப்பழைப்பாளர்களாகக் கலந்துகொள்ளவுள்ளனர்.
மேற்கண்ட நிகழ்முறைப்படி நடைபெறவுள்ள இக்கூட்டத்தில், நம் மன்றத்தின் அனைத்து உறுப்பினர்களும் தவறாமல் குறித்த காலத்தில் பங்கேற்க வருமாறு அனைவரையும் அன்புடன் அழைப்பதில், நம் மன்றத்தின் செயற்குழு பெருமகிழ்ச்சியடைகிறது.
இவ்வாறு, சிங்கப்பூர் காயல் நல மன்ற செயலாளர் எம்.எம்.மொகுதூம் முஹம்மத் தனதறிக்கையில் தெரிவித்துள்ளார். |