காயல்பட்டினம் எல்.கே.மேனிலைப்பள்ளியில், மாநிலங்களவை உறுப்பினர் உள்ளூர் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் திருச்சி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி என்.சிவா பரிந்துரைத்ததன் பேரில், 2010-2011 நிதியாண்டில் நிதியொதுக்கீடு செய்யப்பட்டு, புதிய வகுப்பறை கட்டி முடிக்கப்பட்டுள்ளது.
இப்புதிய வகுப்பறை திறப்பு விழா, இம்மாதம் 07ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமையன்று நடைபெற்றது. பள்ளி தாளாளர் டாக்டர் முஹம்மத் லெப்பை, துணைத்தலைவர் ஹாஜி எஸ்.எம்.உஸைர், பொருளாளர் கே.செய்யித் அஹ்மத், தலைமையாசிரியர் எம்.ஏ.முஹம்மத் ஹனீஃபா, நிர்வாகக் குழு உறுப்பினர்களான ஹாஜி எஸ்.ஏ.அஹ்மத் முஸ்தஃபா, எம்.கனீ, ஹாஜி எல்.கே.லெப்பைத்தம்பி, பொதுக்குழு உறுப்பினர்களான ஹாஜி டி.ஏ.எஸ்.உவைஸ், எச்.எம்.கியாத், பி.எம்.எஸ்.ராஸீ ஆகியோர் முன்னிலையில், பள்ளி தலைவர் டாக்டர் எம்.எஸ்.அஷ்ரஃப் விழாவிற்குத் தலைமையேற்று, புதிய வகுப்பறையைத் திறந்து வைத்தார்.
இவ்விழாவில், பள்ளியின் நிர்வாகக் குழு - பொதுக்குழு உறுப்பினர்களும், பள்ளியின் நடப்பு மற்றும் ஓய்வுபெற்ற ஆசிரியர்களும், அலுவலர்களும், நகரப் பிரமுகர்களும் திளாகக் கலந்துகொண்டனர்.
தகவல்:
S.B.B.புகாரீ
ஆசிரியர், எல்.கே.மேனிலைப்பள்ளி |