தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் ஆறுமுகநேரி கிளை சார்பில், வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான NRE சேமிப்புக் கணக்கு துவங்குவதற்கான சிறப்பு முகாம், இம்மாதம் 11ஆம் தேதி வியாழக்கிழமை காலை 10.00 மணி முதல் மதியம் 02.00 மணி வரை, காயல்பட்டினம் பெரிய தெருவில், ஜஃபர் ஸாதிக் வலிய்யுல்லாஹ் தர்ஹா அருகில் நடைபெற்றது.
அவ்வங்கியின் ஆறுமுகநேரி கிளை தலைமை அதிகாரி ஆர்.ரமேஷ் பெண்ஸிலால் தலைமையில் நடைபெற்ற இம்முகாமில், காயல்பட்டினத்தைச் சேர்ந்த 9 வாடிக்கையாளர்கள் என்.ஆர்.இ. கணக்கும், 3 பேர் வைப்பு நிதி (Current account) கணக்கும், 28 பேர் சேமிப்பு (Savings) கணக்கும் துவக்கினர்.
முகாம் துணைப்பணிகளை, தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியின் ஆறுமுகநேரி கிளை அலுவலர்கள் செய்தனர். |