ஹாங்காங் காயிதேமில்லத் பேரவை நிர்வாகிகளாக காயலர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். விபரம் வருமாறு:-
ஹாங்காங் காயிதேமில்லத் பேரவை அமைப்பின் ஆலோசனை மற்றும் அமைப்புக்குழுவின் 4ஆவது கூட்டம், 27.03.2013 இரவு 07.30 மணியளவில், ஹாங்காங்கிலுள்ள அப்துல் வதூத் என்பவரின் இல்லத்தில், ஏ.ஜஃபருல்லாஹ் தலைமையில் நடைபெற்றது.
ஹாஃபிழ் ஏ.எல்.இர்ஷாத் அலீ கிராஅத் ஓதி கூட்டத்தைத் துவக்கி வைத்தார். அமைப்புக்குழு உறுப்பினர் ஹஸன் பாக்கர் வரவேற்றுப் பேசினார். ஹாஃபிழ் வி.எம்.டி.முஹம்மத் ஹஸன் கூட்ட அறிமுகவுரையாற்றினார்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் வெளிநாட்டு அமைப்பான காயிதேமில்லத் பேரவையில், வெளிநாடுகளில் வாழும் முஸ்லிம்கள் தங்களை இணைத்துக்கொள்ள வேண்டியதன் அவசியம் குறித்து அவர் தனதுரையில் விளக்கிப் பேசினார்.
பின்னர், இதுவரை செயல்பட்டு வந்த அமைப்புக்குழு கலைக்கப்படுவதாகவும்,
புதிய தலைவராக எம்.ஒய்.முஹம்மத் அஷ்ரஃப்,
செயலாளராக காயல்பட்டினம் ஹாஃபிழ் வி.எம்.டி.முஹம்மத் ஹஸன்,
பொருளாளராக காயல்பட்டினம் ஏ.டபிள்யு.கிழுறு முஹம்மத் ஹல்லாஜி
ஆகியோரைத் தேர்ந்தெடுப்பதாகவும் கூட்டத்தில் அறிவிக்கப்பட, அனைவரும் ஒருமித்த குரலில் தக்பீர் முழக்கத்துடன் அதனை அங்கீகரித்தனர்.
அடுத்து, இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தமிழ்நாடு மாநில பொதுச் செயலாளர் ஹாஜி கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர் ஏப்ரல் மாதத்தில் ஹாங்காங் வருவதையொட்டி, சிறப்புக் கூட்டம் நடத்தி அவருக்கு உற்சாக வரவேற்பளித்தல்,
அண்மையில் காலமான காயல்பட்டினம் மஹ்ழரா அரபிக்கல்லூரியின் முதல்வர் மவ்லவீ எஸ்.எஸ்.கலந்தர் மஸ்தான் ரஹ்மானீ, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில செயலாளர் கமுதி பஷீர், சீன நாட்டு பள்ளிவாசலில் நீண்டகாலம் இமாமாகப் பணியாற்றி, தனது 102ஆவது வயதில் காலமான மவ்லவீ இமாம் அஹ்மத் சுங் ஆகியோரின் பாவப்பிழை பொறுப்பிற்காக துஆ இறைஞ்சி இரங்கல் தெரிவித்தல்
உட்பட பல தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
பின்னர், இக்கூட்டத்தில் சிறப்பழைப்பாளராகக் கலந்துகொண்ட - இலங்கை காயல் நல மன்ற (காவாலங்கா) தலைவர் ஹாஜி எம்.எஸ்.ஷாஜஹான் வாழ்த்துரை வழங்கினார்.
பேரவையின் அமைப்புக் குழு உறுப்பினர் என்.அப்துர் ரஹ்மான் நன்றி கூற, காயல்பட்டினம் ஹாஃபிழ் பி.எஸ்.அஹ்மது சாலிஹ் பிராத்தனையைத் தொடர்ந்து ஸலவாத்துடன் கூட்டம் நிறைவுற்றது. இக்கூட்டத்தில், ஹாங்காங் காயிதேமில்லத் பேரவையின் அமைப்புக்குழு உறுப்பினர்களும், சிறப்பழைப்பாளர்களும் திரளாகக் கலந்துகொண்டனர்.
தகவல் & படங்கள்:
S.H.அபுல் ஹஸன்,
அமைப்புக்குழு உறுப்பினர்,
காயிதே மில்லத் பேரவை - ஹாங்காங். |