தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் ஆறுமுகநேரி கிளை சார்பில், வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான NRE சேமிப்புக் கணக்கு துவங்குவதற்கான சிறப்பு முகாம், இம்மாதம் 11ஆம் தேதி வியாழக்கிழமை காலை 10.00 மணி முதல் மதியம் 02.00 மணி வரை, காயல்பட்டினம் வள்ளல் சீதக்காதி திடலில் நடத்தப்படவுள்ளது.
இம்முகாமைப் பயன்படுத்தி, NRE சேமிப்புக் கணக்கு துவக்க விரும்பும் வெளிநாடு வாழ் இந்தியர்கள்,
பாஸ்போர்ட்
விசா அல்லது சி.டி.சி.
பாஸ்போர்ட் அளவு கலர் ஃபோட்டோ 2
அக்ரிமென்ட் காப்பி (Salary)
உள்ளூர் இருப்பிடச் சான்று / அடையாளச் சான்று
ஆகியவற்றைக் கொண்டு வருமாறு வங்கியின் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. |