காயல்பட்டினம் அல்அமீன் நர்சரி மற்றும் துவக்கப்பள்ளியின் 19ஆவது ஆண்டு விழா மற்றும் விளையாட்டு விழா, பள்ளி வளாகத்திலுள்ள மர்ஹூம் ஹாஜி ஏ.சி.செய்துல்லாஹ் நினைவு விளையாட்டரங்கத்தில், 28.03.2013 வியாழக்கிழமையன்று நடைபெற்றது.
பள்ளி நிர்வாகக் குழு உறுப்பினர்களான ஆசிரியர் எம்.ஏ.புகாரீ, எஸ்.அப்துல் காதிர் பாதுஷா, எல்.கே.மேனிலைப்பள்ளி துணைச் செயலாளர் ஹாஜி எஸ்.எம்.எம்.ஸதக்கத்துல்லாஹ் என்ற ஹாஜி காக்கா, அப்பள்ளியின் தலைமையாசிரியர் எம்.ஏ.முஹம்மத் ஹனீஃபா, காயல்பட்டினம் நகராட்சியின் 08ஆவது வார்டு உறுப்பினர் எம்.எம்.டி.பீவி ஃபாத்திமா என்ற பெத்தா தாய் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி ஆசிரியை ரமீஸா நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தினார். இறைமறை குர்ஆனிலிருந்து பள்ளி மாணவர்கள் தமிழாக்கத்துடன் ஓதிய கிராஅத்துடன் நிகழ்ச்சி துவங்கியது. பள்ளி அறக்கட்டளை தலைவர் ஏ.எஸ்.முஹம்மத் அஷ்ரஃப் அலீ அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.
பள்ளி முதல்வர் எம்.விஜயா - பள்ளி ஆண்டறிக்கையை சமர்ப்பித்தார். பள்ளி நிறுவனர் நினைவாக, பள்ளி ஆசிரியை யு.கதீஜா பீவி இரங்கல் கவிதை வாசித்தார்.
முன்னதாக, இவ்விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட - வாவு வஜீஹா வனிதையர் கல்லூரியின் முதல்வர் முனைவர் வி.சசிகலாவுக்கு, விழா நுழைவாயிலில் பள்ளி மாணவ-மாணவியர் வரவேற்பளித்து, அணிவகுப்பு மரியாதையளிக்க, அவர் அதனை ஏற்றுக்கொண்டார்.
பின்னர், கல்வி மற்றும் விளையாட்டுப் போட்டிகளில் சாதனை புரிந்த பள்ளி மாணவ-மாணவியருக்கு அவர் பரிசுகளை வழங்கினார். அவரைத் தொடர்ந்து, மேடையில் முன்னிலை வகித்தோரும் பரிசுகளை வழங்கினர்.
அதனைத் தொடர்ந்து, சிறப்பு விருந்தினருக்கும், மேடையில் முன்னிலை வகித்தோருக்கும் பள்ளி நிர்வாகத்தின் சார்பில் நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.
தொடர்ந்து, சிறப்பு விருந்தினர் முனைவர் வி.சசிகலா சிறப்புரையாற்றினார்.
இவ்விழாவில், பள்ளி மாணவ-மாணவியர் கூட்டு உடற்பயிற்சி, கலை நிகழ்ச்சிகள், உயிர் காப்பு விழிப்புணர்வூட்டும் நாடக நிகழ்ச்சிகளை அரங்க மேடையில் செய்து காண்பித்தனர்.
பள்ளி ஆசிரியை ஃபாத்திமா ஜேனட் நன்றி கூற, நாட்டுப்பண்ணுடன் விழா நிறைவுற்றது.
இவ்விழாவில், பள்ளி மாணவ-மாணவியரின் பெற்றோர் மற்றும் பொதுமக்கள் திரளாகக் கலந்துகொண்டனர். விழா ஏற்பாடுகளை பள்ளி நிர்வாகிகள், ஆசிரியையர் மற்றும் அலுவலர்கள் செய்திருந்தனர்.
படங்கள்:
வீனஸ் ஸ்டூடியோ |