தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்துள்ளது. ஆனால் இந்த தீர்ப்பு தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியம் விதித்த தடை உத்தரவை கட்டுப்பாடுத்தாது என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறினார்.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட 2010ஆம் ஆண்டு சென்னை ஐகோர்ட் விதித்திருந்த தடையை எதிர்த்து ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் பசுமை தீர்ப்பாயத்திடம் மனு கொடுத்தது. இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டிலும் மேல்முறையீடு மனு தாக்கல் செய்திருந்தது.
இது தொடர்பாக நேற்று நடைபெற்ற விசாரணையின்போது, தமிழக மாசுக் கட்டுப்பாடு வாரியம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ராஜிவ் தவன், ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து வெளியேறிய நச்சு வாயுவால், பொதுமக்கள் பாதிக்கப்பட்டதாக கூறினார். இதனால், மாவட்ட ஆட்சியரின் பரிந்துரையை ஏற்று, அந்த நிறுவனத்தை மூட உத்தரவிட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதே போன்று, மனுதாரர் தரப்பில் ஆஜரான ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, பொதுமக்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகளை எடுத்துரைத்தார். இதனை தொடர்ந்து, கடந்த 30ஆம் தேதி தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் மூலம் ஸ்டெரிலைட் ஆலையை தமிழக அரசு மூடிவிட்டதாகவும் வைகோ தெரிவித்தார், இதனை கேட்ட நீதிபதிகள், சுற்றுச்சூழலை கண்காணிப்பதற்கும், இதுதொடர்பாக உத்தரவு பிறப்பிப்பதற்கும் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திற்கு உரிமை உண்டு என்றனர்.
தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு வைகோ அறிவிப்பு
இந்த மனு இன்று விசாரிக்கப்பட்டு, இறுதி தீர்ப்பு வழங்கப்பட்டது. இதில் ஆலையை திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி அளித்து உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. சுற்றுச்சூழல் பாதுகாப்பு வைப்பு நிதியாக ரூ.100கோடி ஸடெர்லைட் ஆலை மாவட்ட நிர்வாக்திடம் அளிக்க உத்தரவிட்டது. அதிலிருந்து கிடைக்கும் வட்டியிலிருந்து நீர், நிலம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடாக வழங்கவேண்டும்.
உச்சநீதிமன்ற தீர்ப்பு குறித்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறுகையில், 2010ம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றம் தடைவிதித்து உத்தரவிட்ட ஆணைக்குத்தான் தற்போது தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இது தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் விதித்த தடை உத்தரவை கட்டுப்படுத்தாது. இந்த தீர்ப்ப்பு மிகவும் வருத்தமளிக்கிறது. இதனை எதிர்த்து மேல் முறையீடு செய்துள்ளேன் என்றார்.
நன்றி:
தூத்துக்குடி ஆன்லைன் |