Re:...கொஞ்சம் மாற்றி யோசியுங்கள். posted bymackie noohuthambi (kayalpatnam)[05 April 2013] IP: 117.*.*.* India | Comment Reference Number: 26714
இரத்தப்பரிசோதனை முகாம் , கண் சிகிச்சை முகாம், பல் மருத்துவ முகாம் என்று பல காயல் நல மன்றங்களும் பல் வேறான முகாம்களை நடத்தி மக்கள் நல்வாழ்வு பணியாற்றிக் கொண்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
ஆனால், நமதூரில், பல பெண்கள் மன அழுத்த நோயால் அவதிப்பட்டுக் கொண்டு மன நல மருத்துவர்களை தேடி திருசெந்தூர், தூத்துக்குடி, திருநெல்வேலி என்று அலைகிறார்கள்.
தங்கள் குடும்ப பிரச்சினைகளை மனம் திறந்து சொல்வதற்கு தகுதியான பெண் மருத்துவர்களை அணுக முடியாமல் திணறிக் கொண்டிருக்கிறார்கள். இதனால் பலவிதமான பக்க விளைவுகள். வாழ்கையில் விரக்தி. கணவன் மனைவி உறவில் விரிசல் இப்படி பல இன்னல்களுக்கு ஆளாகி இரவு பகல் தூக்கம் இல்லாமல் பித்தம் பிடித்தது பிரமை பிடித்தது போல் மாத்திரைகளை போட்டுக் கொண்டு இருக்கிற தாய்மார்கள் எத்தனைபேர்?
இவர்களுக்கு கவுன்செல்லிங் கொடுக்க சரியான முயற்சிகள் மேற்கொள்ளப்படவில்லை. அதை நீங்கள் ஆரம்பித்தால் மக்களிடையே நல்ல வரவேற்பு இருக்கும். இப்போது இருக்கும் நோய்கள் 60 சத வீதம் குறையும்
கொஞ்சம் மாற்றி யோசியுங்கள் என்று வேண்டிக்கொள்கிறேன். அல்லாஹ் ரஹ்மத் செய்வான்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross