கண்ணியத்திற்குரிய மக்கி நூஹு தம்பி ஹாஜியார் அவர்களுக்கு, posted byMuhammad Abubacker (Chennai)[09 April 2013] IP: 122.*.*.* India | Comment Reference Number: 26773
@ மக்கி நூஹு தம்பி.
"நோட்டிஸ் விநியோகித்தவர்கள் இவ்வளவு செலவு செய்திருக்க தேவை இல்லை. 7ம் திகதி கூடிய சுமார் 300 பேர் கொண்ட உலமாக்கள் சபைக்கு சென்று அவர்கள் கோரிக்கைகளை வைத்திருந்தால் விடை கிடைத்திருக்கும். கை புண்ணை பார்க்க கண்ணாடி தேடி இருக்கிறார்கள். ஒரு நிபந்தனை, இந்த கேள்விகளுடன் உலமாக்கள் சென்று உலமாக்களை சந்தித்திருக்கவேண்டும்."
காக்கா நல்லா எழுதி இருக்கீங்க. இந்த கேள்வியெல்லாம் அவங்க மார்கஸ்கு சென்று தப்லீக்கில் மிக முக்கியிமான ஒரு நபரிடம் சொன்னோம். அவங்களும் மஹ்லரா, இரட்டை குளத்து பள்ளிக்கு வந்து இதை பற்றி எல்லாம் தெளிவு படுத்துறதாகவும், உலமாக்களை வைத்து பேச செய்வதாகவும் சொன்னார்கள்.
பாவம் அவங்களுக்கு முகவரி தெரியாது என்று நினைகிறேன். நீங்க முடிஞ்சா அவங்களுக்கு முகவரி கொடுங்கள். அவங்க பெயர நீங்க கேட்டா நா சொல்றேன்.
நீங்களே ஒரு விவாதத்திற்கு, நாகரீகமா சொன்ன ஒரு கலந்துரையாடல் அல்லது கருத்து பரிமாற்றத்திற்கு ஏற்பாடு செய்யலாமே? செய்வீங்களா ஹாஜியார்?
உங்களின் இந்த முயற்சிக்கு எனது மனதார பாராட்டுக்கள்.
குறிப்பு:- அந்த சுவரொட்டிகளுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஆனால் எனக்கும் அந்த சந்தேகங்கள் எல்லாம் இருக்கிறது. 300 உலமாக்கள் தமிழ்நாட்டில் ஆதரிக்கும் போது ஒரு உலமா கூட ஆதரிப்பதற்கு நமதூரில் இல்லையா என்ன? அவர்கள் விடை சொன்னாலே போதும்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross