Re:... posted byசாளை S.I.ஜியாவுத்தீன் (அல்கோபார் )[10 April 2013] IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 26815
காயல் தமுமுக, மமக சார்பாக நடைபெறப்போகும் பொது மருத்துவ முகாமிற்கு அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
தங்களின் தீர்மானங்கள் அனைத்தும் பாராட்டத்தக்கது.
** கண்டிப்பாக கூலக்கடை பஜார்-பவ்ஸியா ஸ்டோர் கடை இருக்கும் வீதியில், நான்கு சக்கர வாகனங்களை அனுமதிக்கவே கூடாது. இடைஞ்சலான அந்த தெருவில் நடந்து செல்லவே கஷ்டமாக உள்ளது, இதில் ஆட்டோ காரர்களும், நான்கு சக்கர காரர்களும் தொல்லை.. அப்பப்பா.!
- இந்த விடுமுறையில் அந்த தெருவில், பைக்கை ஓரமாக நிறுத்தி வைத்து விட்டு, காய்கறி வாங்கிக்கொண்டு இருந்தேன், ஒரு பிக்கப் வண்டி, ஓடி வந்த குதிரை மாதிரி உறுமிக்கொண்டு, அடி பட்ட நாய் மாதிரி ஹாரன் அடித்து, என் வண்டியை எடுக்க சொன்னார், அதிகாரமாக, (அவர் வண்டியை அங்கு நிறுத்தி, சாமான்களை இறக்கனுமாம்).
நான் முடியாது என்று கூறி நடந்தே கோழிக்கறி, மளிகை சாமான்கள் வாங்கி மெதுவாக வந்து சேர்ந்தேன். ஒரு ரிக்வஸ்ட் பண்ணினால் நாமும் பணியலாம், ஹாரன் அடித்து வண்டியை எடுங்க என்று மிரட்டினால். எப்படியோ அன்று ஒருமணி நேரம் நடை பயிற்சி கிடைத்தது.
** தமுமுக-வின் ஆம்புலனஸ் சேவையை கண்டிப்பாக பாராட்டியே ஆகனும்.
நம் ஊரில் அழைத்த குரலுக்கு உடனடியாகவும், அனைத்து சமுதாய மக்களுக்கும், அன்பாகவும், அதிக சலுகை கட்டணத்தில் சேவை செய்யக்கூடிய இந்த ஆம்புலனஸ் வசதியை நடத்தி வரும் இந்த இயக்கத்திற்கும், உதவி புரிந்த அனைத்து மக்களுக்கும் வல்ல இறைவன் அருள் புரியட்டும்.
- இந்த சேவையில் அவர்கள் மிகவும் கட்டண சலுகை கொடுக்கின்றாகள். இந்த.. இந்த இடத்திற்கு செல்ல இவ்வளவு ரூபாய் என்று பிரிண்ட் அடித்து, ஓட்டுனரிடம் கொடுத்து வைத்துள்ளார்கள்.
மக்களின் பொருளாதார நிலைமையை நன்கு கவனித்து அவர்களுக்கு கட்டண சலுகைகளோ அல்லது இலவசமாகவோ நிறைவாக சேவை செய்து வருகிறார்கள். வாழ்த்துக்கள்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross