Re:... posted byகே.எஸ் .முஹமத் ஷூஐப் (காயல்பட்டினம் )[12 April 2013] IP: 117.*.*.* India | Comment Reference Number: 26836
மாநாடு குறித்த எனது தனிப்பட்ட கருத்து இது. தப்லீக் இயக்கமே ஒரு பிரசார இயக்கம்தான். அவர்களின் முழு நேரப்பணியே கூட அதுதான். இரண்டு பேர் ,நான்கு பேராக அழைப்பு பணியில் ஈடுபடும் -அதையே தனது வாழ்நாள் நோக்கமாகக கொண்டிருக்கும் ஒரு இயக்கத்துக்கு ஏன் இது போன்ற பிரமாண்டமான மாநாடுகள்....?
பொதுவாக மாநாடுகள் என்பதே கூட்டத்தைக்கூட்டி தனது ஆள் வலிமையை பிறருக்கு உணர்த்தும் ஒன்றாக போய்விட்டது. மற்றபடி எல்லா இடங்களிலும் பேசுவதைத்தான் மாநாட்டிலும் பேசுகிறார்கள்.
இதை உணர்ந்துதான் முதல்வர் ஜெயலலிதா தனது கட்சி சார்பில் மாநாடு போடுவதையே நிறுத்திவிட்டார்.
அனாவசியமான பொருட்செலவும் வீணாகும் மனித சக்தியையும் தவிர இது போன்ற மாநாடுகளால் வேறு எந்த பலனும் இல்லை.
இது தப்லீக இயக்கத்துக்கு மட்டுமல்ல பிற எல்லா இஸ்லாமிய அமைப்புகளுக்கும் பொருந்தும்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross