பெற்றோர்களே இதற்கு முழு பொறுப்பு...! posted byM.N.L.முஹம்மது ரபீக், (காயல்பட்டினம்.)[16 April 2013] IP: 59.*.*.* India | Comment Reference Number: 26905
ஓட்டுநர் உரிமம் பெற அரசு வயது வரம்பை நிர்ணயித்துள்ள நிலையில் பால்குடி மாறாத பாலகர்கள் பைக்கை அதுவும் முன்று பேருக்கு குறையாமல் ஓட்டிச் செல்வதை பரவலாக காணமுடிகின்றது.
இவர்களுக்கு சாலை விதிகளோ சட்டதிட்டங்களோ தெரிந்திருக்க வாய்ப்பில்லை! காக்காமாமாமார்களின் பைக்கை லாவகமாக எடுத்துச் சென்று ஊர் சுற்றுவதை வழக்கமாக்கி வைத்துள்ளனர்.
தாயாருக்கு தன் பிள்ளை ரோட்டில் போடும் ஆட்டம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அதே நேரம் தந்தையின் கண்டிப்பும் கண்காணிப்பும் இருந்தாலே ஒழிய இதுபோன்ற நிகழ்வுகளைத் தவிர்க்க வாய்ப்பில்லை.
வளரும் பருவம். வாழ வேண்டிய வயசு. படிப்பு பட்டம் உயர்வு என கனவு கண்டு வரும் பெற்றோர்கள் இது போன்ற அலட்சியங்களுக்கு துணை போகாமல் தம் பிள்ளைகளைப் பேணி காப்பது அவர்களின் கடமை. அல்லாஹ் நம் சிறார்களைப் பாதுகாப்பானாக! ஆமீன்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross