Re:... posted byAbu Huraira (Abu Dhabi)[18 April 2013] IP: 83.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 26928
மாஷா அல்லாஹ். தாங்கள் கூறும் கருத்து அனைத்தும் உண்மையானவை.
copy and paste
"நமதூரில், பொதுமக்களின் பணத்திலும் ஏராளமான மனித உழைப்பிலும் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்ட மருத்துவமனையானது இன்று முடங்கிப் போயுள்ளது. நம்மவர்கள் நடத்தும் பல மருத்துவமனைகள் சுறுசுறுப்பாக இயங்கத்தான் செய்கின்றன. ஆனால் கட்டணம் என வரும்போது கொள்ளை அடிக்கும் பிற மருத்துவமனைகளுக்கும், இவற்றுக்கும் பெரும்பாலும் எந்த வேறுபாடும் இருப்பதில்லை. அத்துடன் மருத்துவ சேவையிலும் கனிவும், பண்பும், அன்பும், ஆறுதலும் தென்படுவதில்லை."
கடந்த 13/04/2013 அன்று எனது குடும்பத்தில் ஒரு சிறுவனுக்கு ஜுரம் 104.5 டிகிரி. பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்ட மருத்துவமனைக்கு போனால் 1 வருடம் அனுபவமுள்ள மருத்துவர் (பெண்) இருக்கிறார். அடுத்த நாள் 14/04/2013 இரவு 10 மணிக்கு ஜுரம் 105 டிகிரி இருக்கும். அதே பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்ட மருத்துவமனைக்கு போனால் duty doctor கூட இல்லை.
இது சம்பந்தமாக நான் மேனேஜர் இடம் மறுநாள் டெலிபோன் மூலம் பேசினேன். மருத்துவர்கள் பார்த்து கொண்டு இருக்கிறோம் என்று சொல்லுகிறார்கள்.
எனது குழந்தைக்கு 6 days fever. 3 நாள் திருச்செந்தூர் சென்று காட்டிவிட்டு வருகிறார்கள். பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்ட மருத்துவமனைக்கு ஆதரவு கொடுங்கள் என்று கூறுகிறார்கள். நாம் ஆதரவு கொடுத்தால் மருத்துவர்கள் இல்லை.
" மருத்துவமனை நிர்வாகிகள் நமது ஊரில் கருத்து கணிப்பு முதலில் நடத்தட்டும். அப்போது மக்கள் மத்தியில் அந்த மருத்துவமனை மீது உள்ள அபிப்ராயம் என்ன என்று தெரிய வரும்.
என் மனதில் பட்டவை நான் எழுதி விட்டேன். யாரையும் குறை கூற வேண்டும் என்ற எண்ணம் எனக்கு இல்லை. வஸ்ஸலாம்
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross