செய்தி: வெட்டுக் காயத்துடன் திருச்செந்தூர் மருத்துவமனையில் காயலர் அனுமதி! தாக்கப்பட்டதாக காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...சல்மான் மௌலவி பிரசங்கம் posted bymackie noohuthambi (kayalpatnam)[19 April 2013] IP: 117.*.*.* India | Comment Reference Number: 26942
என்ன கொடுமை இது!
இன்று மொகுதூம் ஜும்மா பள்ளிவாசலில் நடைபெற்ற குத்பா பேருரையில் இலங்கையிலிருந்து சிறப்பு அழைப்பாளராக வந்து இங்கு உரையாற்றிய சல்மான் மௌலவி அவர்கள் உறவுகளை பேணும் விஷயத்தை உணர்வு பூர்வமாக, குர் ஆன் ஹதீத் வெளிச்சத்தில் சஹாபாக்கள் வாழ்க்கைமுறையில் இருந்து மேற்கோள் காட்டி பேசினார்கள்.
வீடுவந்து சேர்ந்து இணையதளத்தை திறந்தபோது இதயம் கணக்கும் செய்தியை பார்த்தேன். எங்கே போய்க்கொண்டிருக்கிறோம். தினசரி திரு குர் ஆன் ஓதுகிறோம். ஐவேளை தொழுகிறோம், நபிகள் நாயகம் மீது சலவாத்து சொல்கிறோம். அவர்கள் புகழ் கூறும் பாடல்களை பாடுகிறோம். ஆனால் அவர்கள் வாழ்க்கை முறையை பின்பற்றமட்டும் நாம் தயாரில்லை.
ஒரு அறிஞர் சொன்னார். இந்தியாவில் அல்லாஹ்வின் புகழை பேச , நபியின் புகழை பாட பல லட்சங்களை செலவு செய்ய பல லட்சக்கணக்கான முஸ்லிம்கள் தயாராக இருக்கிறார்கள்.ஆனால் அல்லாஹ் சொன்னபடி நபிகள் நாயகம் வாழ்ந்து காட்டியபடி தங்கள் வாழ்க்கையை அமைத்துக்கொள்ள யாரும் தயாரில்லை. எவ்வளவு சத்தியமான செய்தி.
அல்லாஹ் சொல்கிறான். நபியே நீங்கள் சொல்லுங்கள். நீங்கள் அல்லாஹ்வை நேசிக்கிறவர்களாக இருந்தால் என்னை பின்பற்றுங்கள், அல்லாஹ் உங்களை நேசிப்பான். நாம் அல்லாஹ்வை நேசிப்பது ஒருபுறம் இருக்க, அல்லாஹ்வே நம்மை நேசித்தால் அதுவே நாம் பெறும் பெரிய பாக்கியம். அப்படி அவன் நம்மை நேசிக்க வேண்டுமானால் நாம் நபிகள் நாயகத்தின் வாழ்க்கை முறையை பின்பற்றவேண்டும் என்பதுதான் முக்கியம்.
உறவு முறைகளை பேணுவது நீண்ட ஆயுளுக்கு காரணமாக இருக்கிறது. உறவு முறைகளை முறித்தவன், எவ்வளவு நல அமல்கள் செய்தாலும் பயனில்லை. உறவு முறைகளை முறித்தவர்கள் யாரும் இருந்தால் இந்த மஜ்லிசை விட்டு எழுந்து சென்று விடுங்கள், அல்லாஹ் நாம் கேட்கும் து ஆ வை கபூல் செய்யமாட்டான் என்று நபிகள் நாயகம் சொன்னபோது, ஒரு சஹாபி எழுந்து சென்று தன உறவுமுறைகளுடன் சமாதானம் செய்து கொண்டு மீண்டும் அந்த மஜ்லிசுக்கு வந்து அமர்ந்து, ரசூலுல்லாஹ் அவர்களின் து ஆ வை பெற்றுக் கொண்டார்கள் என்ற செய்தி உலமாக்கள் நமக்கு சொல்லி காட்டுகிறார்கள்..
தாக்கப்பட்டவர் கூடிய விரைவில் நலம் பெற்று வீடு திரும்ப அல்லாஹ் அருள்புரிவானாக. இனிமேலும் இத்தகைய அசிங்கமான விஷயங்கள் நடக்காமல் அல்லாஹ் நம்மை பாதுகாப்பானாக.ஆமீன்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross