Re:..எத்தனை காலம் மனிதன் வாழ்ந்தான் ... posted bymackie noohuthambi (kayalpatnam)[20 April 2013] IP: 117.*.*.* India | Comment Reference Number: 26956
எத்தனை காலம் மனிதன் வாழ்ந்தான் எனபது கேள்வி இல்லை. அவன் எப்படி வாழ்ந்தான் என்பதை நாம் நினைத்து பார்க்க கடமைபட்டிருக்கிறோம்.
செல்வம் வந்து குவிந்தது ஒரு பக்கம், அந்த செல்வங்கள் ஏழைகள் கல்வி பெறவும் வாழ்வில் ஏற்றம் பெறவும் அவை பங்கிடப்பட்டது மறுபுறம் என்ற செய்திதான் அவரை பற்றிய முக்கியமான அம்சம். பணம் இருப்பவர்களா கொடுக்கிறார்கள் மனம் இருப்பவர்களே கொடுக்கிறார்கள். ஆனால் சிவந்தி ஆதித்தன் அவர்களுக்கு இறைவன் பணத்தையும் கொடுத்தான் அள்ளிக் கொடுக்கும் மனதையும் கொடுத்தான்.
மறைந்த மாமனிதரின் வாரிசுகள் அவர் ஏற்றி வைத்த விளக்கை தமிழ் மக்கள் வாழும் இடமெல்லாம் கொண்டு செல்வார்களாக. ஏழையின் சிரிப்பில் இறைவனை காண்போம் என்பது வெறும் அரசியல் சுலோகம் அல்ல,அது ஒரு உண்மை தத்துவம் என்பதை தன் வாழ்நாளில் வாழ்ந்து காட்டி, மற்றவர்களுக்கும் ஒரு கலங்கரை விளக்காக வழிகாட்டும் ஒளி விளக்காக நிற்கும் அய்யா அவர்கள் வாழ்க்கை தமிழக சரித்திரத்தில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்படவேண்டிய ஒரு வரலாற்று பெட்டகம்.
அய்யா அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எங்கள் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறோம்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross