கல்வித்த்தந்தையின் மறைவு - நம் வட்டார மக்களுக்கு பேரிழப்பு. posted byV D SADAK THAMBY (Guangzhou, China)[20 April 2013] IP: 218.*.*.* China | Comment Reference Number: 26959
சிவந்தி ஆதித்தனார் அவர்களின் மறைவிற்கு எமது ஆழ்ந்த அனுதாபங்கள்.
சிவந்தி ஆதித்தனார் அவர்களின் மறைவு நம் தென் மாவட்ட மக்களுக்கு, குறிப்பாக நமது திருச்செந்தூர் வட்டார மக்களுக்கு ஒரு பேரிழப்புதான்.
ஒருகாலத்தில் தமிழ் நாளிதழ் வட்டத்தில் மேல்சாதியினரின் ஆதிக்கமே மேலோங்கி இருந்தது. அதை வெகுவாக குறைத்து, கீழ்ஜாதியினரின் அதீக்கமும் மேலோங்கிவர செய்த பெருமை சிவந்தி ஆதித்தனார் அவர்களையும் அவரது குடும்ம்பதினரையுமே சேரும் என்பது இந்த நேரம் நினைவுகூறத்தக்கது.
நம் திருச்செந்தூர் வட்டாரத்தில் பல கல்லூரிகளை உள்ளடக்கிய "ஆதித்தனார் கல்வி நிறுவன அறக்கட்டளை" ஒரு பல்கலைகழகமாக மாற்ற சிவந்தி ஆதித்தனார் அவர்கள் பெரும் முயற்சித்தார் என நாம் பரவலாக அறிந்திருக்கிறோம் ..
ஆதித்தனார் கல்வி நிறுவன அறக்கட்டளையின் கீழ் ஒரு மருத்துவ கல்லூரி மற்றும் ஒரு சட்டக்கல்லூரியையும் ஏற்படுத்தி இவை அனைத்தையும் உள்ளடக்கிய "ஆதீத்தனார் பல்கலை கழகம்" உருவாக அவரது குடும்ம்பதினர் முயற்சிக்க வேண்டும். அவர் விட்டுசென்ற பணியை அவரது குடும்ம்பதினர் நிறைவேற்ற முன்வரவேண்டும். அதன்மூலம் நம் வட்டார மக்கள் கல்வியில் பெரும் பயன் அடைவர்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross