பெருமையாகவும் அதே நேரம் பொறாமையாகவும் உள்ளது. posted byM.N.L.முஹம்மது ரபீக், (காயல்பட்டினம்.)[20 April 2013] IP: 117.*.*.* India | Comment Reference Number: 26975
A.L.S. மாமா அவர்கள் பழம்பெரும் எழுத்தாளர்களுள் ஒருவர். இந்த தள்ளாத வயதிலும் தளராமல் நடை போடுகின்ற இளைஞர். அண்மையில் திருச்செதூரில் நடை பெற்ற அரசு பொது நூலகத்துறை நடத்திய கட்டுரைப் போட்டியை படமெடுப்பதற்காக சென்றிருந்தேன். அங்கேயும் அவர் கலந்து கொண்டு எழுத்தாற்றலில் தான் இளவயதினருக்கு முன் இளைத்தவரில்லை என்பது போல் அள்ளித் தெளித்துக் கொண்டிருந்தார். பார்த்ததும் அசந்து போனேன். அல்லாஹ் அவரது ஆயுளை நீடித்து வைப்பானாக! ஆமீன்.
பல்வேறு புத்தகங்களை தேடி எடுத்து அதன் குறிப்புகளை பதிவு செய்து கட்டுரையாக வடிவமைத்து இதற்காக நேரத்தை ஒதுக்கி ஓய்வின்றி இபாதத்திலும் குறை வைக்காமல் ஐவேளை ஜமாஅத்தோடு தொழுது நூலகப்பணி, உருவமில்லா ஓவிய வகுப்பு, பொது சேவை, இலக்கிய ஆய்வாளர்கள் சங்கமம், பொது நிகழ்ச்சி இப்படி பம்பரம் போல் சுழன்று வருவதைப் பார்த்து வியக்காமல் இருக்க முடிவதில்லை!
இக்கட்டுரை 1,2, பாகங்களை தாமதமாகத்தான் படித்தேன். மாஷா அல்லாஹ்! ஒரு டிஸ்கவரி சேனலின் முன் கண்கொட்டமல் இருந்ததைப் போன்று உணர்ந்தேன். ஒரு சிறந்த எழுத்தாளரின் எழுத்தின் மூலம் எண்ணங்களின் மன ஓட்டத்தில் யதார்த்தங்களைப் படம் பிடித்துக்காட்டலாம் என்பதை உணர்ந்தேன். தாங்கள் இன்னும் எழுத வேண்டும் என் போன்ற தளிர்கள் தழைக்க வேண்டுமெனில் தரமான உரமாக உங்கள் எழுத்துக்களை நாங்கள் உட் கொள்வோம்! உயர்வோம்!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross