இணையதள வாசகர்களுக்கு, அஸ்ஸலாமு அலைக்கும்.
முதலாம் தொடரில் ஒரு மாதம் தேடிய 13 புத்தகங்கள், பத்திரிகைகளில் சேகரித்து குறிப்புகள் கடைசியில் தரப்படுகிறது. முதல் பாகம் 25.02.2013ல் வெளியாகி உள்ளது.
முதல் பகுதியில் பூனையை பற்றி குறிப்பிட மறந்த சில தகவல்கள். மனிதனுக்கு 206 எலும்புகள், பூனைக்கு 230 எலும்புகள் உண்டு.
மனித இதயம் 72 தடவை ஒரு நிமிடத்தில் துடிக்கும், பூனையின் இதயம் 140 முறை ஒரு நிமிடத்தில் துடிக்கும். பூனை 16 மணி நேரம் தூங்கும். மனிதன் 8 மணி நேரம் தூங்கினால் ஆரோக்கியமாக வாழ்வான். கூடினால் ஆரோக்கிய குறைவு ஏற்படும். குறைந்தால் நோய் ஏற்படும்.
பூனை கண் என்பது ஒரு வகை ஆங்கிலத்தில் Cat's Eye என்பார்கள். இது தான் வைடூரியக்கல் (GEM) ஆகும். பூனையின் பாதம் பஞ்சுபொல் இருப்பதால் எவ்வளவு உயரத்தில் இருந்து குதித்தாலும் காலுக்கு பழுதுவராது.
முயல்
ரஷ்ய முயல் ஐந்து ரகம் உண்டு. அரக்கண் முயல் சாதாரண முயலை விட சற்று நீளாமாக காணப்படும். ஏழு கிலோ எடை கொண்டது. முயலுக்கு நான்கு இதயம் இருக்கும். இரத்தம் ஆக்ஸிஜன் நிறைந்திருப்பதால் இறைச்சி சத்தாகவும், ருசியாகவும், இருக்கும். எல்லா நாட்டு முயல்களை இறைச்சிக்காகவும் அதன் ரோமத்திற்காகவும் வேட்டையாடுகிறார்கள். முயல் பண்ணை அமைத்து சம்பாதிக்கலாம். இதன் இரத்தம் வாத நோயிக்கு பூசுவார்கள். 12 ஆண்டுகள் வாழும், ஐந்து முதல் 8 குட்டிகள் போடும். வீடுகளில் செல்ல பிராணியாக வளர்க்கலாம். கீரி, நரிகளால் இதற்கு ஆபத்து உண்டு (முயலும் குதிரையும் வேகமாக வளரும்)
குரங்கு
உலகலெங்கும் வாழுகிறது. மலைகளிலும் மரங்களிலும் மக்களுடனும் பகலில் வாழும் இரவில் மரங்களில் போய் தங்கிவிடும். மரங்களில் கூடுகட்டியுள்ள பறவைகளின் முட்டைகளை சாப்பிட்டு பறவை கூட்டை பிரித்து வீசும். மரத்துக்கு மரம் தாவி குரங்கு சேட்டை சதா பண்ணும். ஆபிரிக்காவில் கொரிலா என்ற மனித குரங்கு உள்ளது பார்க்க சாதுவாக காணப்படும் ஆனால் மகா பொல்லாத மிருகம். சுமித்திரா போர்னியாவிலுள்ள மனிதக்குரங்குக்கு ஊராங் ஊடான் (காட்டு மனிதன்) என்று மலேசியா வார்த்தையில் சொல்லப்படும்.
இந்திய குரங்கு வகைகளில் சிங்கவால் குரங்கு, கருமந்தி, கட்டைவால் குரங்கு, குல்லாகுரங்கு, லக்கூர், அனுமான் குரங்கு, சிம்பான்சி குரங்கு என உள்ளது. உலகில் சிம்பான்சி குரங்குகள் 35 ஆயிரம் வாழுகிறது. 6முதல் 14 குரங்குகள் கூட்டம் கூட்டமாக வாழும். இந்துக்களின் புனித மிருகமாக அனுமான் குரங்கு போற்றப்படுகிறது. வடநாட்டில் பல இடங்களில் குரங்குகள் கோவில்களில் கூட்டம் கூட்டமாக வாழுகிறது.
எல்லாரக குரங்குகளிலும் 20ஆண்டுகள் வாழும். சாதாரண குரங்கு 187 நாளிலும், கொரிலா குரங்கு 257 நாட்களிலும், சிம்பான்ஸி குரங்கு 231 நாட்களிலும் குட்டி போடும். சிம்பான்ஸி குரங்கு இந்தியாவில் தமிழகத்திலும் ஆபிரிக்க காடுகளிலும் காணப்படுகிறது. 2013 பிப்ரவரி 09.10.11ல் நடந்த மிருகங்களின் கணக்கெடுப்பில்களக்காடு (தமிழ்நாடு) புலிகள் காப்பகத்தில் புலி, செந்நாய், கரடி, கருமந்தி, சிங்கவால் குரங்க, மிளா, யானை, காட்டுமாடு, காட்டெருமை இருப்பதாக கண்டறிந்து உள்ளனர்.
கங்காரு
கங்காரு நாடு என்று அழைப்பது ஆஸ்திரேலியாவை. இங்கு கங்காரு எங்கும் குட்டிகளோடு துள்ளி துள்ளிச் செல்லும்இதேசிய விலங்காகும். கங்காரு என்று பெயர் எப்படி வந்தது தெரியுமா? ஐரோப்பியர்கள் இந்நாட்டுக்கு வந்தபோது துள்ளிச்செல்லும் இந்த மிருகத்தின் பெயர் என்ன என்று கேட்டபோது. ஆதிவாசி எனக்கு தெரியாது என்ற வார்த்தையால் கங்காரு என்றார். அதுதான் இந்த மிருகத்திற்கு பெயராகி விட்டதாம். சாது மிருகம் உயரம் 2 மீட்டர் இருக்கும் .ஒரேதாவில் 15 அடி தாண்டி போய் விடும் 7ஆண்டுகள் வாழும் 42 நாட்களில் குட்டிபோடும். எலி கங்காரு வாழ்நாள் முழுவதும் தண்ணீர் சாப்பிடாமல் வாழும் முன்னங்கால் சிறியவை பின்கால்கள் பெரியவை.
நாய்
நன்றியுள்ள ஜீவனுக்கு ஜப்பானில் கல்லரை வைத்துள்ளார்கள். நாய் சதா நேரமும் நாக்கை தொங்க விட்டு இருப்பது ஏன் தெரியுமா? நாக்கு வழியாக வேர்வைகள் சதா வெளியேறிக் கொண்டு இருக்கும். பெங்களுர் (கெங்கேரி) யில் செல்ல பிராணிகளுக்கு கல்லரை உண்டு. திப்புசுல்தான் கால்நடைகளுக்கு பண்ணை அமைந்திருந்தார். ஜப்பானில் அகீதா என்ற கருப்பு நிற நாய் 1931-ல் தேசிய விலங்காக தேர்வு செய்தனர். நடிகைகள் நாயின் மீது பாசம் கொண்டிருப்பது குறித்து கிசு கிசு வெளியாகும் வெளிநாடுகளில் உடல் முழுவதும் ரோமம் உள்ள நாய் சதை கொழு கொழுத்து தொங்கும்.
நாய் மூக்கு பகுதியில் கருப்பபு நிறமாகவும் இபேட்டரி நாய் ஒரு ஜான் அளவு உள்ளவை குள்ளமானரகம் அதிகம் ராணுவம் காவல் துறையில் திருட்டையும் போதை பொருட்களை பிடிக்கவும் அதிக மோப்பா சக்தியுள்ள உயரமான கம்பீர நடை கொண்ட நாயை பயன்படுத்துகிறார்கள். வெள்ளையில் கருப்பு புள்ளி தனி கருப்பு, செந்நிற நாய்களும் அவர்கள் வைத்துள்ளார்கள். ராஜபாளையத்தில் அல்சீசன் என்ற காவல்துறைக்கு தேவையான மோப்ப நாய்கள் உண்டு நாய் 12 ஆண்டுகள் வாழும் 61 நாளில் நான்கு குட்டி போடும். புது ஏறியாவுக்குல் நாம் போனால் அங்குள்ள நாய்குலைக்கும் அடிக்கடி போய் வந்தால் நம்மை புரிந்து மோப்ப சக்தியால் அறிந்து குலைக்காது. ஜின்கள் நாய் கண்களுக்கு தெரிவதால் நள்ளிரவில் நாய் வீதியில் அதைக்கண்டு குலைத்து கொண்ட செல்லும்.
அணில்
இந்திய அணிக்கு முதுகில் மூன்று கோடு இருப்பது போல் ரஷ்ய அணிலுக்கு இருப்பதில்லை. மரஅணில் பறக்கும் அணிகள் உண்டு. ஸ்ரீவில்லிபுத்தூரில் மரஅணில் காப்பகம் உள்ளது. குற்றாள மலைப்பகுதியில் மரஅணி செந்நிறமாக சற்றுகணமாக காணப்படுகிறது. அணில் முடியில் ஆர்ட் பிரஸ்தயாரிக்கிறார்கள் பத்து ஆண்டுகள் வாழும் 44 நாட்கள் குட்டி போடும்.
கீரிப்பிள்ளை
பிள்ளை பேல பழகக்கூடியது. கீரிப்பிள்ளை புணுகு பூனை ரகத்தை சார்ந்தது. புணுகு மருத்துவ பொருள் அதனால் இந்த பூனை விலை அதிகம் இந்தியாவிலும் ஜமைக்கா காடுகளிலும் கீரிப்பிள்ளை வாழுகிறது. சிறுபறவை, கோழிகளை வேடைடையாடும் பகலில் தூங்கி இரவில் வேட்டைக்கு கிளம்பும். பாம்பை கண்டால் துண்டு துண்டாக வெட்டி போடும். கீரி உள்ள இடத்தில் பாம்பு வராது என்பார்கள்.
காண்டாமிருகம்
15ஆண்டுகள் வாழும் 450 நாட்களில் குட்டிபோடும். கருப்பு நிற சதுப்பு நிலங்களில் வாழும் இதன் ஒற்றை கொம்புக்காகவும், தோலுக்காகவும் வேட்டையாடி அழிக்கின்றனர். ஒருநாள் உணவு காய்கறிதழை 50 முதல் 100 கிலோ, எடை வேகமாக ஒடும். கோபம் வந்தால் கொம்பால் முட்டி தாக்கும். ஆனால் சாது மிருகம்.
ஒட்டகச்சிவிங்கி
இதன் உயரம் 16 முதல் 20 அடி இருக்கும் காலும் கழுத்தும் உயரமாக காணப்படும்.அழகான சாதுமிருகம். பத்து ஆண்டுகள் வாழும் 405 நாளில் குட்டி போடும்.
நீர்யானை
கிழக்கு ஆப்பிரிக்கா நைஜர் நதிகளில் அதிகம் வாழுகிறது. தனது குட்டிகளை பிடித்து சாப்பிட வரும் முதலைகளை துரத்தி அடிக்கும். கோபம் கொண்டால் வாயை பிளந்து கொண்டே ஒடும். சதா நீரில் கிடக்க விரும்பும். தனது குட்டிகளை வேட்டையாட படகில் வருவரை தெரிந்து படகை முட்டி ஆற்றில் கவிழ்த்து விடும். ஒரு நாளைக்கு காய்கறி தழைகள் 200 முதல் 400 கிலோ எடையை சாப்பிடும். 25 ஆண்டுகள் வாழும் 238 நாட்களில் குட்டி போடும்.
கழுதை 12 ஆண்டுகள் வாழும் ஆண்டுக்கு ஒரு குட்டி போடும் வண்ணார்களின் அழுக்கு துணி மூட்டைகளை சுமந்து செல்லும். நான்கு கால்களும் குண்டக்க மண்டக்க மாதிரி வளைந்து இருக்கும் காலில் வலிமை சக்தியானது. அடிகள் இடி மாதிரி விழும்.
ஓநாய் குள்ள நரி நாய் குடும்பத்தைச்சார்ந்தவை. கழுதை புலி அழுக்கேறிய சாம்பல் நிறத்தில் காணப்படும். பிற மிருகங்கள் வேட்டையாடி போட்ட மிருகங்களை சதை முதல் எலும்பு வரை சக்கை போல் சாப்பிட்டு விடும். எதிரிகள் தாக்கவந்தால் கழுதைப்புலி வாலில் சிறுநீர் பெய்து அதை சிதறடித்து எதிரி மிருகங்களின் கண்ணில் வீசி விட்டு மறைந்து ஓடி விடும். நரியும் ஓநாயும் கூட்டம் கூட்டமாக காட்டை இரவில் சுற்றிவந்து ஊலையிடும் மிருகங்கள் பற்றி இன்னும் ஏராளமானதகவல் தர முடியும் ஓவ்வொரு முறையும் எனது கைகாசு செலவு ஆகிறது. தகவல் சுவையான வேண்டுமானால் நான் அதிகமாக நூல்படிக்க வேண்டும் என்பதை கீழே அறியுங்கள்.
மேலும் தகவல்கள்:
குதிரை லாயத்தின் மேற்பார்வையாளரின் மகன்தான் இங்கிலாந்து நாட்டின் நாடக ஆசிரியான புகழ் பெற்ற ஷேக்ஸ்பியர் ஆவார்.உலகம் முழுவதும் 75 கோடி குதிரைகள் உள்ளதாம். நாய் கடியால் ஏற்படும நோயின் பெயர் ராபீஸ், நாய் கடித்தால் மூளை காய்ச்சல் ஏற்பட்டு உடல் கடுமையாக பாதிக்கும். பொதுவாக மிருகங்களின் இரத்தம் உறைய காரணம் கால்சியம் ஆகும் முரா என்பது எருமை மாடு பரி என்றால் குதிரை என்பதாகும்.அதனால் தான் குதிரை வியாபாரம் செய்த இடத்திற்கு பரிமார் தெரு என்ற பெயர் காரணமாக விளங்குகிறது. குதிரை கட்டப்பட்ட இடத்திற்கு லாயம் அதாவது குதிரை லாயம் என்பார்கள். குதிரையை கவனிப்பவர் தான் ராவுத்தர் என்று கூறப்பட்டனர். இதுபோல இந்திய ராணுவத்தில் இருந்த முஸ்லீம் பணியாளர்கள், சிலரை ராணுவத்தார் என்பதை குறித்து ராவுத்தர் என்றும் கூறப்பட்டதாக அறிகிறோம்.
மொகலாய மன்னர் காலத்தில் வாசனை மிக்க மிருக இறைச்சியை சாப்பிட்டு வந்தார்கள். மான் கிடா, மாடு இவைகளுக்கு உணவு பொருட்களாக குங்குமப்பூ, சந்தனபவுடர், பாதம், பிஸ்தா, அக்ரோட் இவைகளை அவைகள் சாப்பிடும் உணவு பொருட்களுடன் கலந்து கொடுத்து அவைகளின் இறைச்சியை சுவையூட்டும் வாசனை இறைச்சியாக மாற்றி மொகலாய மன்னர்கள் அவர்கள் குடும்பத்தினர்கள், அரமணையைச் சார்ந்த மந்திரி சபையினர்களும் சாப்பிடுவார்கள் என்ற செய்தியை 2012 டிஸ்காவரி சானல் அல்லது நேஷனல் ஜாக்ரபி சானலில் இந்திய விசேஷ உணவு தயாரிப்பளரான ஒரு பெண் குறிப்பிட்டு இருந்தார்கள்.
ஆதார நூல்களுக்க நன்றி
1. பூனை இனம் 1971
2. மிருகக்காட்சிசாலை 1974
3. கருவூலம் மாத இதழ் பிப்ரவரி 1989
4. திருக்குர்ஆன் தர்ஜமா
5. மானாமக்கின் எழுதிய முஸ்லீம் டை ஜஸ்ட் 1996
6. விலங்கியல் ரஷ்யா 1979
7. தமிழ் நாடு முழு தகவல் 2005
8. லியோவின் பொதுஅறிவு களஞ்சியம் 2005
9. நம்மை சுற்றி காட்டுயிர் 2012
10. பொதுஅறியு வினா விடை 1996
11. முத்தாரம் வார இதழ் ஜூன் 1992
12. ஆனந்த விகடன் (புலியின் கட்டுரை) 30.1.2013
13. அஷ்ஷரி அத்துல் இஸ்லாமியா மாத இதழ் பிப்ரவரி 2013.
(தகவல் சேகரிக்க ஒரு மாதம் இந்த நூல்களை படித்து சேகரித்தேன்)
|