| |
ஆக்கம் எண் (ID #) 83 | | | திங்கள், ஏப்ரல் 1, 2013 | | மாணவக்கண்மணிகளே, நீங்களும் வெல்லலாம்! சமூகப் பார்வையாளர்
|
| இந்த பக்கம் 2256 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (1) <> கருத்து பதிவு செய்ய | |
“ப்ளஸ் 2 மாணவர்கள் தேர்வெழுதச் செல்லும் காட்சிகள்” என்று 14-03-2013 அன்று வெளியான செய்தியில் உதித்த சிந்தனைகளை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்!!!
இது பலருக்கு இன்பமான காலம். சிலருக்கு (தவிர்க்க முடியாத) துன்பமான காலம்.
நல்ல முறையில் படித்தவர்கள், ஓரளவுக்கு தேர்ச்சி மதிப்பெண் பெறுபவர்கள், எதைப் பற்றியும் கவலையில்லாதவர்கள் ஆகியோருக்கு இது இன்பமான காலம். நன்றாகப் படித்தவர்களும் ஓரளவு படித்தவர்களும் அவரவர் கனவை நனவாக்கும் நாள் வெகுதூரத்தில் இல்லை.
ஒன்றுமே படிக்காத இன்பசாலிகள், படிப்பை வைத்து என்ன செய்யப்போகிறோம் என வேறு வகையான தேடல்களுக்கு ஆளாகியிருப்பார்கள். இவ்வகையினருக்கு படிப்பை விட்டதால் ஏற்படும் நஷ்டம் இப்போது விளங்காது. காலம் தான் அவர்களுக்கு இச்சிந்தனையை உணர்த்தும். தாம்பெற்ற கஷ்டத்தை தமது வாரிசுகள் பெறக்கூடாது என அப்போது அவர்கள் புரிந்து கொள்வார்கள்.
(பரீட்சை எழுதிவரும் மாணவக்கண்மணிகள் கோடிப் புன்னியங்கள் பெற்று ஈருலகிலும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்களும் பிரார்த்தனைகளும்)
ஆனால் விளிம்பில் தேர்ச்சி பெறத் தவறியவர்கள், தாம் செய்த தவற்றை உடனடியாக உணர்ந்தவர்களுக்கு நமது அறிவுரை யாதெனில் நீங்கள் கவலைப்பட ஒன்றுமே இல்லை.
எத்தனையோ பட்டயப்படிப்புகள் (Diploma) உள்ளன. இத்தகையவர்கள் இனிமேலாவது காலத்தின் அவசியத்தை உணர்ந்து இருக்கும் மாணவப் பருவத்தை முறையாக கழிக்க முற்பட்டால் அவர்களுக்கும் சுபிட்சமே.
என்னென்ன படிப்புகளைப் படித்தால் எத்தகைய வேலை வாய்ப்புகளைப் பெறலாம் என்பதற்கு, மேற்சொன்ன அனைத்து வகையினருக்கும் உதவ இன்ஷா அல்லாஹ் காயல்பட்டணம் சென்னை வழிகாட்டு மையம் (KCGC) தயாராக உள்ளது.
அருமை மாணவர்களே, தேர்வு என்பது வெறும் விளையாட்டல்ல.
உங்கள் குடும்பத்திலுள்ள படித்த நபர்களையும் படிக்காத நபர்களையும் (ஆண்களை மட்டும்) கணக்கெடுத்துப் பாருங்கள்.
படித்தவர்களின் மகிழ்ச்சியையும் படிக்காதவர்களின் கஷ்டத்தையும் சற்று சிந்திதுப் பாருங்கள்.
இப்போது நீங்கள் எவ்வகையினராக ஆக விரும்புகின்றீர்கள் என சற்று ஆற அமர சிந்தியுங்கள். அதற்கு முன் இரண்டு ரக்அத்கள் இஸ்திஃகாரா (நாட்டங்கள் நிறைவேறத் தொழும் தொழுகை) தொழுது கொள்ளுங்கள்.
தேவைப்பட்டால் உங்கள் குடும்பத்தில் உள்ள நீங்கள் நெறுங்கிப் பழகும் படித்தவர்களுடன் கலந்தாலோசனை செய்யுங்கள்.
இதுகாலம் வரை உங்களுக்காக உங்கள் பெற்றோரும் உறவினர்களும் ஏகப்பட்ட ஆலோசனைகளை வழங்கியிருப்பர். உங்களது ஆசிரியர்களும் பள்ளி நிர்வாகமும் உங்களுக்காக உங்களுடனேயே காலைப்பொழுதுகளை (ஏன் மாலைப் பொழுதுகளையும் கூட)க் கழித்திருப்பார்கள். உங்களோடு அவர்களும் சேர்ந்து நற்பெயர் பெறவேண்டும் என்பதற்காக. ஆயினும் நீங்கள் தேர்ச்சி பெறவில்லை என்பது (அல்லாஹ் அத்தகைய சூழ்நிலைகளை விட்டும் உங்கள் அனைவரையும் பாதுகாப்பானாக ஆமீன்!!!) அவர்களின் தற்காலிக கவலையாக மட்டுமே அமையும்.
ஆனால் உங்களின் படிப்பில் உங்களது எதிர்காலமும் உங்கள் தலைமுறைகளின் எதிர்காலமும் உள்ளன.
கொஞ்சம் சிந்தியுங்கள். உங்களின் தற்போதைய வயதுடன் ஒரு 45-ஐ சேர்த்துக் கொண்டு அப்போது படிக்காத நீங்கள் எப்படியெல்லாம் உங்களின் வாரிசுகளால் நடத்தப்படுவீர்கள் என்பதை சற்று எண்ணிப்பாருங்கள்.
அவ்வளவு ஏன், அப்பருவத்தில் (முதுமை) இப்போதுள்ள படிக்காத பலரையும் நீங்களே சென்று பாருங்கள்.
இதில் வெற்றிவாகை சூடிவருபவர்களை உங்களுக்கு முன்மாதிரியாகக் கொள்ளுங்கள்.
எல்லாவற்றிற்கும் மேலாக படைத்த உங்களின் இரட்சகனுடன் என்றென்றைக்குமே தொடர்பாய் இருங்கள். தொழுகையையும் பொறுமையையும் கொண்டு அவனிடம் உதவி தேடுங்கள்.
நல்லிரவுகளில் நீங்கள் படிப்பதற்காக எழுந்திருக்கும் போது ஒரு சிறிது நேரம் அல்லாஹ்வை (தஹஜ்ஜுத் மூலம்) வணங்குங்கள். அப்போது உங்களைவிட்டும் கடந்து சென்ற காலங்களிம் முற்படுத்திய பாவங்களுக்காக அவனிடம் இஸ்திஃக்ஃபார் செய்யுங்கள்.
படைத்தோன் அல்லாஹ் இவ்வுலகிலும் மறுவுலகிலும் ஒளிமயமான எதிர்காலத்தைஉங்கள் அனைவருக்கும் மற்றுமுல்லோர் யாவருக்கும் வழங்குவானாக, ஆமீன்.
|
| |
ட்விட்டர் வழி கருத்துக்கள் |
|
|
Advertisement |
|
|
|
|