Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
5:27:19 AM
வெள்ளி | 22 நவம்பர் 2024 | துல்ஹஜ் 1940, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5512:0815:3018:0019:14
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:13Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்---
மறைவு17:54மறைவு12:02
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5905:2505:51
உச்சி
12:04
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:1718:4219:08
Go to Homepage
எழுத்து மேடை
அனைத்து எழுத்து மேடை ஆக்கங்களையும் காண|எழுத்து மேடை வாசகர் கருத்துக்களை காண
எழுத்து மேடை ஆசிரியர்கள்
Previous ColumnNext Column
ஆக்கம் எண் (ID #) 84
#KOTWEM84
Increase Font Size Decrease Font Size
திங்கள், ஏப்ரல் 1, 2013
மண் வாசனை...!

இந்த பக்கம் 6352 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (4) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

சமீபத்தில் ஒரு நாள் எனது நண்பர் வீட்டிற்கு அவரை சந்திக்கச் சென்றிருந்தேன். அன்போடு வரவேற்ற அவர் தனது வீட்டின் மாடித்தோட்டத்தில் பயிரிடப்பட்ட பச்சைக்காய்கறிகளால் செய்த சுவையான சலாட் மற்றும் சிறிய மண் குவளையில் இளந்தயிரும் தந்து உபசரித்தார். மணமும் சுவையும் என் நாவை மட்டுமல்ல உள்ளத்தையும் குளிர்வித்தது. காலாகலமாக மனிதன் மண்ணோடு ஒன்றிவாழ்ந்த காலம் போய் மண் வாசனையே இல்லாத நவீன கண்டுபிடிப்பான இரசாயணக் கலவையால் உருவாக்கப்பட்ட ப்ளாஸ்டிக் பொருட்களை உபயோகிக்கத் துவங்கிவிட்டான். நாளடைவில் அதன் ஆதிக்கம் பல்வேறு வடிவங்களாகவும், உருவங்களாகவும் உருமாறி நம்மோடு ஒன்றிப்போயிற்று. உண்ணும் பாத்திரங்கள் முதல் உட்காரும் நாற்காலி வரை அதன் சாம்ராஜ்ஜியம் விரிவடைந்து நம்மை அடிமை படுத்தி விட்டது என்றே சொல்லலாம்.





கால் நூற்றண்டுகளுக்கு முன்பு வரை மண்பாண்டங்கள் புழக்கத்தில் இருந்து வந்ததை நம்மால் மறுக்க இயலாது. சிறுபிள்ளைகளுக்கு சேமிப்பு பழக்கத்தை ஊக்குவிக்க வீட்டில் வாங்கித்தரும் மண் உண்டியல், மண்சட்டிகளில் மணக்க மணக்க தாளித்து தளதளக்கும் மீன் குழம்பு, புளியாண சட்டிகள், ஆப்பச்சட்டிகள், கோடை வெப்பத்தை தணிக்க குடம் மற்றும் பானைகள், விருந்து வைபவங்களில் தண்ணீர் அருந்த வைத்திருக்கும் மண்கலயங்கள், கறி, கத்திரிக்காய் என கமகமக்கும் மண் சிட்டிகள், நோன்பு காலங்களில் கஞ்சி குடிப்பதற்காக பரத்தப்பட்டிருக்கும் மண் சிட்டிகள், இவைகள் யாவும் பக்க விளைவுகளோ பாசாணங்களோ இல்லாத பாரம்பரியமான மண் பாண்டங்கள். நம் மண்ணில் உருவாகும் இயற்கையின் இதமான அன்பளிப்பே அன்றி வேறேது?





பல வகை வேதிப்பொருட்களாலும் உலோகக் கலைகளாலும் உருவாக்கப்படும் பாத்திரங்கள் வித விதமான வடிவங்களில் அன்றாடம் நம் வாழ்வில் உணவுப் பொருட்களை வேக வைத்து உண்ணுவதற்கும், குளிர்வித்து பருகுவதற்கும் பயன்படுத்தி வருகின்றோம். இதனால் ஏற்படும் இரசாயண மற்றங்களால் வேண்டாத வேதியல் மாற்றங்கள் ஏற்படுவதுடன் நம் ஆரோக்கியமும் கேள்விக்குறியாகி நோய்வாய் பட்டு மருத்துவரை அணுகும் நிலை. அவசர காலத்தில் உழலும் மனிதன் தன் அவசியத்தை உடனே நிறைவேற்ற ஆவி பறக்கும் குக்கர்களைக் கையாண்டு அனைத்து ஊட்டச்சத்துக்களையும் உஸ்... எனும் ஓசை மூலம் வெளியாக்கி வெறும் சக்கையை மட்டுமே உண்பது விநோதமாகவே உள்ளது. உழவர் திருநாளில் சமைக்கும் பொங்கல் பானைகள் ஒரு போதும் உலோகத்தால் ஆனவை கிடையாது. மண்ணுடன் வாழ்ந்து வரும் ஒவ்வொரு விவசாயிகளும் பழைய சோற்றை மண் கலயங்களில் வைத்துதான் உண்டு வருகின்றனர். மண்பாண்டங்களில் சமைக்கும் உணவு வெகு சீக்கிரத்தில் கெட்டுப்போவதில்லை. மேலும் சமைக்கும் பதார்த்தங்கள் சுவை, மணம், ஆரோக்கியம் நிறைந்ததாகவே இருக்கும். இதில் சமைக்கும் உணவுகள் யாவும் நம் செரிமானத்திற்கு ஏற்றதகவும் எளிதில் வெந்துவிடக்கூடியதாகவும் இருக்கும். மீன் குழம்பு அல்லது புளியாணம் அலுமினிய சட்டிகளில் இருந்தாலே மறு நாளே பாத்திரங்களில் கரும்புள்ளிகள் விழுந்து அரித்து ஓட்டையாகி விடும்.





களி மண்ணால் செய்யப்படும் இந்த மண்பாண்டப் பொருட்கள் வெயிலில் காய வைக்கப்பட்டு சுள்ளைகளில் வைத்து சிகப்பு நிறம் வரும் வரை சுடவைத்து பின்னரே சந்தைக்கு விற்பனைக்கு மண்பாண்டப் பொருட்களாக வருகிறது. இன்று தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் அகழ்வாராய்ச்சியில் பூமிக்கடியிலிருந்து கிடைக்கும் பண்டைய காலப் பழக்கத்தில் இருந்து வந்த மண்பாண்ட பொருட்களும், பரண்கள், பானைகள் முதுமக்கள் தாழியும், மண்ணால் ஆன ஆயுதங்களும் கண்டெடுக்கப்படுகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது. இவ்வாறு கண்டெடுக்கப்பட்ட பல்வேறு மண் சார்ந்த பொருட்கள் அனைத்தையும் நமது அரசு பத்திரமாக பாதுகாத்தும் வருகின்றது. முன்னோர்கள் இயற்கையோடு இணைந்து வாழ்ந்த விதமும், பயன்படுத்திய பொருட்களும், உட் கொண்ட உணவுகளும் தான் அவர்கள் வயதை நூற்றண்டுகளுக்கு மேல் உயர்த்தியது என்பது மறுக்க இயலாத உண்மை. வேகமாக சுழழும் இவ்வுலகில் நாம் நமது நேரத்தை மிச்சம் பிடிப்பற்காக அரைவேற்காடான அதுவும் முற்கூட்டியே வேகவைத்து பாக்கெட்டுகளில் பதப்படுத்தப்பட்ட பல்வேறு துரித உணவுகளை ஃபாஸ் ஃபுட் எனும் பெயரில் பயன்படுத்தி வருகின்றோம். இது ஒரு புறமிருக்க மறு புறத்தில் சில நகர, கிராம பகுதிகளில் மண்பானை சமையல் என்று போர்டு போட்ட உணவகங்கள் செயல்பட்டும் வருகின்றன. மேலும் கேரள மாநில மக்கள் மண்பாண்ட சமையலையே விரும்பி சாப்பிடுகின்றாகள். இதனால்தான் இன்றளவும் அவர்களது ஆரோக்கியமும் ஆயுளும் பிற மாநிலத்தவர்களை விட உயர்வாகவும் உறுதியாகவும் இருந்து வருகின்றது. புகையிறின்றி, கரிக்கறையின்றி துரிதமாக சமைக்க நாம் பயன்படுத்தி வரும் உலோகத்தினாலான பாண்டங்கள் மற்றும் மண்ணோடு மக்காத மாபெரும் அசுரனான ப்ளாஸ்டிக் பொருட்கள் இவைகளின் வரவால் ஆயுள் குறைந்து அவதிப்படுவது மனித குலம் மட்டுமின்றி பறவைகள், கால்நடைகள் அக்கழிவுகளை உட்கொண்டு செத்து மடியும் காட்சியை நாள் தோறும் நாம் பார்த்து வருகின்றோம். காலத்தின் மாற்றத்திற்கேற்ப மண்பண்டங்கள் மெல்ல சாகும் நிலை அதிகரித்து வருவது கவலைக்குரியதே!





கோடை காலங்களில் மட்டும் தான் குளிர்ந்த நீருக்கவும் மோருக்கவும் பானைகள் வாங்குகின்றோம். இன்னும் மீன் சட்டி ஆப்பச் சட்டிகள் விரல் விட்டு எண்னக்கூடிய வீடுகளில் மட்டுமே காண முடிகின்றது. பூந்தொட்டிகள் கூட தற்போது மண்ணின் நிறத்தாலான ப்ளாஸ்டிக்கில் விற்பனை செய்து வருகின்றனர். மண்ணோடு ஒன்றி வாழ்ந்த நம் முன்னோர்கள் தம் இல்லங்களில் அன்றாடம் பயன்படுத்தி வந்த மண்பானைகளின் பெயர்பட்டியலைக் கேட்டால் நமக்கு வியப்பாகவும் வினோதமாகவும் இருக்கும், இதோ அவர்கள் கையாண்டு வந்த மண்பானைகளின் பெயர்கள் சில... அஃகப் பானை, அஃகுப் பானை, அகட்டுப் பானை, அடிசிற் பானை, அடுக்குப் பானை, அரசாணிப்பானை, உசும்பிய பானை, உறிப் பானை, எஃகுப் பானை, எழுத்துப் பானை, எழுப்புப் பானை, ஒறுவாயப் பானை, ஓதப் பானை, ஓர்மப் பானை, ஓரிப் பானை, ஓவியப் பானை, கஞ்சிப் பானை, கட்டப் பானை, கட்டுப் பானை, கதிர்ப் பானை, கரகப் பானை, கரிப்பானை, கருப்புப் பானை, கலசப் பானை, கழுநீர்ப் பானை, காடிப் பானை, காதுப் பானை, குண்டுப் பானை, குறைப் பானை, கூடைப் பானை, கூர்முனை பானை, கூர்ப் பானை, கூழ்ப் பானை, கோளப் பானை, சருவப் பானை, சவப்பானை, சவலைப் பானை, சன்னப் பானை, சாம்பல் பானை, சொண்டுப் பானை, சோற்றுப் பானை, சில்லுப் பானை, சின்ன பானை, தவலைப் பானை, திடமப் பானை, திம்மப் பானை, துந்திப் பானை, தொண்ணைப் பானை, தோரணப் பானை, தோள் பானை, நாற்கால் பானை, பச்சைப் பானை, படரப்பானை, பிணப் பானை, பொள்ளற் பானை, பொங்கல் பானை, மங்கலக் கூலப் பானை, மடைக்கலப் பானை, மிண்டப் பானை, மிறைப் பானை, முகந்தெழு பானை, முடலைப் பானை, முரகுப் பானை, மொங்கம் பானை, மொட்டைப் பானை, வடிநீர்ப் பானை, வழைப் பானை, வெள்ளாவிப் பானை, இவ்வாறு பல வடிவங்களில் மண் பானைகளையும் பாண்டபத்திரங்களையும் தன் பயன்பாட்டுக்கு உபயோகித்து வந்த காலம் மண்ணோடு மண்ணாகி மறைந்து போயிற்று எனலாம்.





பானையில் சோறு பொங்கி வாழையிலையில் பரிமாறி மண்சட்டியில் மீன் குழம்பும், கலையத்தில் தெளிமோரும், பந்தியில் அமர்ந்து சாப்பிடும் பாரம்பரிய வழக்கம் நம் தமிழர்களின் பழக்கம்! இனியேனும் இயன்ற வரை மண்பாண்டங்களைப் பயன்படுத்தி நம் வாழ்வாதாரங்களை வளப்படுத்தி உடல் நலத்தைப் பேணுவதோடு மண்ணின் பெருமையக் காப்பாற்றும் மண்ணின் மைந்தர்களாய் நாம் வாழ்வோமாக!



Previous ColumnNext Column
இவ்வாக்கம் குறித்த கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by: Vilack SMA (HCM) on 01 April 2013
IP: 14.*.*.* Vietnam | Comment Reference Number: 26599

கால் நூற்றாண்டு முன்புவரை நமதூரில் மண்பாண்ட உபயோகம் இருந்ததுதான் . என்றைக்கு நாம் அடுப்பங்கரைக்கு Tiles ம் Mosaic ம் போட்டு அழகு பார்த்தோமோ , அன்றோடு மண் பாண்டமும் போச்சு . நமது ஆயுளும் குறைந்து போச்சு .

வயல் வெளியில் வேலை செய்யும் விவசாயி இன்றைக்கும் மண்பாண்ட பொருட்களைத்தான் உபயோகிக்கிறான் , ஆரோக்கியமாகவும் இருக்கிறான் . அவன் வீட்டருகில் ஆலைகள் பல இருந்தும் , ஆரோக்கியமாகத்தான் இருக்கிறான் . நாமோ , அந்தஸ்து என்ற பெயரில் நவீன யுக்திகளை கையாண்டு , நமது ஆயுளை நாமே குறைத்து கொள்கிறோம் . படத்தில் காட்டப்பட்ட பனை ஓலை பொருட்கள் .... இன்று மியூசியத்தில் வைக்கப்படும் பொருட்கள் போல ஆகிவிட்டது . இவைகளை இன்னும் வைத்திருப்பவர்கள் ஏதோ பொருளாதாரத்தில் நலிந்தவர் போல எண்ணப்படுகிறார்கள் .

நமதூர் கல்யாண விருந்தில் , சிட்டி கறி , கலய தண்ணீர் பாரம்பரியமாக உபயோகப்பட்டு வந்தது . ( சற்று சுத்தத்தை பேணியிருந்தால் இன்றுவரை தொடர்ந்திருக்குமோ ? ) வெளியூர்காரர்கள் ஆச்சரியத்தோடு விசாரிப்பார்கள் . நாமும் நமது பாரம்பரியத்தை பற்றி பெருமையாக சொல்வோம் . சந்தோசமாக இருக்கும் . இன்று அதெல்லாம் போச்சு . இன்று யாராவது சிட்டி கறியும் , கலய தண்ணீரும் வைத்தால் , உண்ட சாப்பாடு செரிக்கும் முன்னரே அவருடைய அந்தஸ்தை பற்றி , தெருவில் பேசிக்கொண்டிருப்பார்கள் .

நோன்பு திறக்கும்போதுகூட இன்று பள்ளிகளில் Plastic Bowl கலாசாரம் .

இன்று பெரிய நகரங்களில் , மண் சட்டியில் செய்த சாப்பாடு என்று கிடைக்கிறது . 500 ரூபாய்க்கு குறையாமல் இருக்கும் . அழகழகான சிறிய பெரிய மண் சட்டிகளில் பதார்த்தங்களை பரிமாறுவார்கள் . அங்கே சென்று சாப்பிடுவதை அந்தஸ்தாக நினைக்கும் நாம் , அதே மண் சட்டியை வீட்டுக்குள் வைத்தால் மானம் போயிடும் என்ற நினைப்பு .

மண் பாண்டங்களை உபயோகிப்போம் , ஆயுளை கூட்டுவோம் .

Moderator: Comment edited!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...
posted by: குளம்.செ.ஹு.ஷேக் அப்துல் காதிர் (ரியாத் சவூதிஅரேபியா) on 01 April 2013
IP: 78.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 26600

அஸ்ஸலாமு அலைக்கும்.

இறையருள் நிறைக.

ஆசிரியரின் மண்வாசனை பற்றிய தனதுஆதங்கத்தை எண்ணற்ற விஷயங்களை மிக அருமையாக கலைநயத்தோடு விவரித்திருக்கிறார். மாஷா அல்லாஹ் பாராட்டுக்கள் இறைவன் மிகப்பெரியவன்.

சிலதினக்களுக்குமுன் எனது முகநூல் முகப்பில் நான் பதித்த ஒரு பதிப்பை இதோடு இணைத்துள்ளேன் பாருங்கள் அந்தப்பொருட்களுக்கு ஆங்கிலத்தில் பெயர்தெரிந்தவர்கள் தயவுசெய்து எனது மின்அஞ்ஜலுக்குதெரியத்தாருங்கள் இன்ஷா அல்லாஹ். இன்றைய உலகில் நாம் பயன்படுத்தும் தட்டுமுட்டுச்சாமான்கள் எவ்வளவு பாதிப்பை உடலுக்கும் உலகிற்கும் தருகிறதென்பதை ஆசிரியர் தெள்ளத்தெளிவாக விவரித்திருக்கிறார்.

மறைந்துவரும் மண்பாண்டங்கள்

***************************************************

காணாமல் போய்க்கொண்டிருக்கும்
கலைக்களஞ்சியங்கள் காட்சிப்பொருளாக
காண்கின்றன

காலத்தோடுகளவுபோகும் உபகரணங்கள்
கரணம் போட்டாலும்கிடைக்குமா?
மரணமாகுபவை

நறுமணமுடன் தரஉணவுதந்த இதயங்கள்
வருமானங்களால்ஆகும்அஸ்தமனங்கள்
மறுமணம்தருமா?

வளர்ச்சியெனும் மாற்றங்களால்
ஏற்படுகின்ற ஏமாற்றங்கள்,ஏற்ற
மறுமலர்ச்சிதருமா?

பொருளாதாரவளர்ச்சியால்
சுகாதாரங்கள்தடைபட
வாழ்வாதங்கள் விடைபெறலாமா?

குவளைக்கஞ்சிதந்த ஆதாரத்தை
குடைசரித்துகுயவனின்குடிசையில்தான்
கூத்தாடமேண்டுமா?

முற்போக்குமனிதனின்
பிற்போக்கு முயற்சிகள்
புகைப்போக்கியில்லா
பகைப்புகைவங்கிகள்.

ஷேக் அப்துல் காதிர்.

Photo: காணாமல் போய்க்கொண்டிருக்கும்
கலைக்களஞ்சியங்கள்
காட்சிப்பொருளாக காண்கின்றன
காலத்தோடுகளவுபோகும் உபகரணங்கள்
கரணம் போட்டாலும்கிடைக்குமா?
மரணமாகுபவை
நறுமணமுடன் தரஉணவுதந்த இதயங்கள்
வருமானங்களால்ஆகும்அஸ்தமனங்கள்
மறுமணம்தருமா?
வளர்ச்சியெனும் மாற்றங்களால்
ஏற்படுகின்ற ஏமாற்றங்கள்,
ஏற்ற மறுமலர்ச்சிதருமா?
பொருளாதாரவளர்ச்சியால்
சுகாதாரங்கள்தடைபட வாழ்வாதங்கள்
விடைபெறலாமா?
குவளைக்கஞ்சிதந்த ஆதாரத்தை
குடைசரித்துகுயவனின்குடிசையில்தான்
கூத்தாடமேண்டுமா?
முற்போக்குமனிதனின்
பிற்போக்கு முயற்சிகள்
புகைப்போக்கியில்லா
பகைப்புகைவங்கிகள்.

குளம்.செ.ஹு.ஷே அப்துல் காதிர்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...
posted by: abubacker (dammam) on 03 April 2013
IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 26631

யதார்த்த வாழ்க்கையை பற்றியும் சிந்திக்க கடமை பட்டுள்ளோம். பனைமர ஓலை தேனீர் போட அன்று உதவியது. கேஸ் வெளியேறி வெடித்து விடுமோ என்று அன்று அஞ்ச வேண்டிய அவசியம் இல்லை.

அம்மியில் அரைக்கும் துவையல் போய் மருதாணி அரைத்தோம் அதுவும் இன்று இல்லை. குக்கர் இல்ல வீடு இன்று இல்லை. மண் பானை நீர் அருந்த எனக்கும் ஆசைதான் ஆனால் நான் என் வீட்டில் வாங்கி வைக்க வில்லை. எழுதுவதற்கும் படிப்பதற்கும் அழகாக இருக்கும் விசயங்களை நாம் நம் வீடுகளில் கடை பிடிப்பதில்லை. இதுதான் யதார்த்தம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. சிலந்திக்கு பிடித்த கலயம்,,,,
posted by: NIZAR (KAYALPATNAM) on 17 April 2013
IP: 117.*.*.* India | Comment Reference Number: 26908

ஹிஜாஸ் மைந்தனே எப்படியா? இதல்லாம், எங்கு இருந்துயா இந்த மாதிரி தகவல் தருகிறீர்கள், ஊட்டசத்துக்களை உஸ் எனும் ஓசை மூலம் வெளியாக்கி சக்கையை தின்பது என்ற வரிகள் கட்டுரையை என்னோடு படித்த அனைவரையும் குப்பென்று சிரிக்க வைத்தது.

நண்பன் வீட்டில் சாலட் சாப்பிட்டது எல்லாம் சரிதான், ஆனால் அவர் செய்த ஒரு தவறு என்ன தெரியுமா? மண் குவளையில் இலந்தயிரை தந்ததுதான். அந்த ருசிதான் மண்பாண்டங்கள் பற்றி கட்டுரையை எழுத உசிப்பிவிட்டது என எண்ணுகிறேன்.

பானையே 68 சொல்லுகிறீரே, எங்காவது கிராமத்தில் மண்பாண்ட கடயில் வேலை செய்தீரா? படிச்சு முடியலப்பா? இரண்டு மூன்று பானை கேள்விப்பட்டுள்ளோம். இப்படியா? என வியக்க வைத்து விட்டீர்.

கட்டுரையில் கருவாக மண்பாண்டங்கள் புழக்கம் இல்லாததும், அழிந்து வருவதும், அதனால் ஏற்பட்ட ஆரோக்கியம் என அசத்தி உள்ளீர்.

உங்கள் கருத்துகளை வாழ்தாதவர் யாரும் இருக்க முடியாது. ஆனால் எதார்த்தம் என்ன? முதலில் உங்கள் வீட்டில் இருக்கிறதா?நம்மை விட அதிகம் புழங்கிய மாற்று மத சகோதரர்கள் வீட்டில் கூட இல்லையே? சம்பிரயத்துகாக பொங்கலுக்கு பானை வாங்குவதோடு சரி. நம் திருமண விருந்துகளில் இருந்த மன்சிட்டிகள், தண்ணீர் கலயங்கள் மாறுவதற்கு முக்கிய காரணம் சுகாதாரகேடுதான். ஒரு தடவை உபயோகித்த மண்சிட்டி, கலயங்களை துடைத்து மீண்டும் பள்ளியில் ஒரு ஸ்டோர் ரூமில் வைப்பார்கள்,

அதை சிலந்தியும், பூச்சிகளும்தான் தங்கள் இடமாக்கி கொள்ளும். மீண்டும் கல்யாணதிட்கு ரோட்டில் அடுக்கபட்டு சரிவரகூட கழுவாமல் மீண்டும் உபயோக படுத்தப்படும். வெளிநாடுகளில் இந்த மண்பாண்டங்கள் ஒரு தடவை தான் உபயோகிக்கபடுகிறது. ஏனனில் அதிலிருந்து தூசிகள் உதிர ஆரம்பித்துவிடும். சுவையும், ஆரோக்கியமும் இருந்தாலும் அதை கையாளும் ஒழுங்குமுறை நம்மிடம் இருப்பதில்லை.

பொதுவாக இது போன்ற மன்சிட்டிகள், கலயங்கள் ஒருமுறை மட்டும் பயன் படுத்துவதாக இருந்தால் சுகாதார கேடுகள் இல்லாமல், நல்ல ருசியையும் ஆரோக்கியத்தை தரும் மண்பாண்டங்களை உபயோகிக்கலாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இவ்வாக்கம் குறித்த கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்
காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Fathima JewellersAKM Jewellers
FaamsCathedral Road LKS Gold Paradise

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved