நமது ஊருக்கு ஆண்கள் கல்லூரி ஒன்று தேவை. posted byV D SADAK THAMBY (Guangzhou, China)[21 April 2013] IP: 218.*.*.* China | Comment Reference Number: 27004
பொறியியல் பட்டம் பெற்ற எங்கள் H .M .காதர் காக்கா அவர்களின் மகன் மற்றும் நண்பர் சேம்சா வின் மக்களுக்கும் வாழ்த்துக்கள்.
ஒருகாலத்தில் வறண்ட மலை பகுதியாக காட்சியளித்த , யாருமே எளிதில் சேர விரும்பாத கல்லூரியாக இருந்த மேல்விஷாரம் அப்துல் ஹக்கீம் பொறியியல் கல்லூரி இன்று எவ்வளவு கம்பீரமாக தோற்றமளிக்கிறது பாருங்கள்.. எவ்வளவு முன்னேற்றம் !.மேல்விஷார தொழில் அதிபர்கள் அரும்பாடுபட்டு இந்த கல்லூரியை மேன்மை நிலைக்கு கொண்டு வந்திருக்கின்றனர். முஸ்லிம் சிறுபான்மையினர் நிர்வகிக்கும் தலைசிறந்த பொறியியல் கல்லூரிகளில் இப்போது இதுவும் ஒன்று.
நமது ஊரில் ஒரு ஆண்கள் கலை கல்லூரி துவங்குவதற்க்கே நாம் படாத பாடுபடுகிறோம். நம் ஊர் செல்வந்தர்கள் பலமுறை பெருமுயற்சி செய்தும் இன்னும் இதில் பெற்றிபெற முடியவில்லை. (குறிப்பிட்ட செல்வந்தரின் தனிப்பட்ட முயற்சியினால் நமதூரில் பெண்கள் கல்லூரி அமையப்பட்டது சற்று ஆறுதல் அளிக்கிறது. அல்ஹம்துலில்லாஹ்.) 1970களில் நமதூர் பெரியவர்களின் முதன் முயற்சியில் துவக்கப்பட்ட பாளையம்கோட்டை சதகத்துல்லா அப்பா கலை கல்லூரியிலும் , இப்போது நம் பிடி சிறிது சிறிதாக தளர்ந்துவருகிறது.
ஆண்கள் கலை கல்லூரி ஒன்று நம் ஊரில் துவக்கப்பட்டுவிட்டால், நம் ஊரின் குறைந்தபட்ச கல்வியாக பட்டப்படிப்பு மாறிவிடும். தற்போது பள்ளிப்படிப்புடன் கல்வியை நிறுத்துபவர்கள் எண்ணிக்கை வெகுவாக குறைந்து ,அவர்கள் பட்டப்படிப்பு வரை தொடர்ந்து விடுவதற்கான வாய்ப்பு உள்ளது. நம் ஊர் கல்வித்தகுதி மேம்படும். எனவே ஆண்கள் கலைகல்லூரி நமக்கு மிக மிக அவசியமான ஒன்று.
குறிப்பிட்டு சொல்வதென்றால், நம் ஊரிலும் அருகாமையிலும் மேனிலை பள்ளிகள் தேவைக்கு அதிகமாக இருக்கின்றன. இதன் விளைவு, மாணவர்களை சேர்ப்பதில் அப்பள்ளிகளுக்கிடையே போட்டி. இழுபறி. பள்ளிகள் கல்வித்தகுதியில் தன்னிறைவு பெற முடியாத நிலை. முழுமையான கட்டமைப்பு/ விளையாட்டு மைதானம் போன்ற வசதிகள் உள்ள ஒரு MATRICULATION பள்ளியில் போதிய மாணவர்கள் சேர்க்கை இல்லாமல், அது பொருளாதாரத்தில் தத்தளிக்கும் நிலை. நமது கலாச்சாரப்படி ஆண் பாலர், பெண்பாலர் என தனித்தனி வகுப்புகள். ஒரு வகுப்பிற்கு சராசரி குறைந்த மாணவ மாணவிகள். அதிக வகுப்புகள். அதிக ஆசிரியர்கள் தேவை. போதுமான தகுதியான ஆசிரியர்களை அமர்த்த முடியாத நிலை .விளைவு , கற்பிப்பதில் மந்த நிலை. இருக்கும் பள்ளிகளே இந்த நிலையில் தத்தளிக்கும்போது புதிது புதிதாக மேலும் மேலும் பள்ளிகள். இருக்கும் பள்ளிகளுக்கு நாம் வலு ஊட்டலாமே!
மேலும் மேலும் புதிது புதிதாக பள்ளிகள் துவக்குவதைவிட்டுவிட்டு , நாம் (ஆண்கள்) கல்லூரி துவக்கும் விஷயத்தில் அக்கறை காட்டலாமே! நம் செல்வந்தர்கள் இதில் முனைப்பு காட்ட வேண்டும்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross