Re:..தொய்வில்லாமல் நடக்கும் மார்க்க கல்வி நிறுவனம் . posted bymackie noohuthambi (kayalpatnam)[26 April 2013] IP: 117.*.*.* India | Comment Reference Number: 27080
நமதூரில் தொய்வில்லாமல் தோல்வி இல்லாமல் நடக்கும் மார்க்க கல்வி நிறுவனம் ஹாமிதிய்யா என்பதில் மாற்று கருத்து யாருக்கும் இருக்க முடியாது.
அதற்கு, அந்த நிறுவனம் பெற்றிருக்கும் இளைஞர் அணியும் தங்களுக்கு இட்ட பணியை அவரவர்கள் செம்மையாக நிறைவேற்ற வேண்டும் என்ற அர்பணிப்பு உணர்வுமே முழு முதல் காரணம்.
அடுத்து, நிகழ்சிகளை நெறிப்படுத்துவது, முற்கூட்டியே திட்டமிடுவது, வருபவர்களை உபசரிப்பது, அனுசரிப்பது, அவர்களை எப்படி அணுகுவது..பொருளாதாரத்துக்கக்காகவும் இன்னபிற தேவைக்காகவும் யாரை அணுகினால் எதை பெற முடியும் என்ற வியூகம் வகுக்கும் சமயோசிதமும் அந்த நிறுவனத்தில் பொறுப்பிலிருக்கும் நிர்வாகிகளுக்கு கை வந்த கலை.
யார் மனமும் புண்படாமல், எந்த பிரசினைகளுக்குள்ளும் தங்களை உள்படுதிக்கொள்ளாமலும் மிக நளினமாக தங்கள் மூன்று நாள் நிகழ்சிகளை கண கச்சிதமாக முடித்து ஊர் மக்களின் பாராட்டுக்களை பெற்று வருகிறார்கள். வருடம் தோறும் திருமறை செல்வர்களை உலகுக்கு அறிமுக படுத்தி பிற மாணவர்களையும் உற்சாகப் படுத்தி, சிறப்பாக செயல்பட்டு வருகிறவர்கள்.
ரஜப் மாதம் மட்டுமே மஜ்லிசுல் புகாரி ஷரீப் பூத்து குலுங்கும். பின்னர் அங்கு ஒரு பெரிய பூட்டு தொங்கும் என்ற நிலையை மாற்றி 365 நாளும் அதை உயிரோட்டம் உள்ள சபையாக மாற்றிய பெருமை ஹாமிதியாவுக்கு உண்டு. திருமண நிகழ்ச்சிகள், கொட்டுக்கும் குழலுக்கும் நாதஸ்வரதுக்கும் பின்னால் போய்க்கொண்டிருந்த ஒரு நிலையை மாற்றி அதை இனிய இஸ்லாமிய பாடல்கள் நிறைந்த மண விழாக்களாக மணம் வீச செய்த பெருமை இந்த இந்த நிறுவனத்துக்கு உண்டு.
இந்த மார்க்க கல்வி நிறுவனத்தில் பயிலும் மாணவர்கள் எல்லோரும் அதன் தாய் பள்ளியான முஹல்லா பள்ளியான குருவித்துறை பள்ளியில் ஐவேளையும் ஜமாத்துடன் தொழுக வந்தால் இந்த பள்ளி எவ்வளவு சிறப்பாக இருக்கும் அல்லாஹ்வுக்கும் அவனது ரசூலுக்கும் எவ்வளவு சந்தோஷமாக இருக்கும்,
எவ்வளவு அமரர்களின் ஆமீன் சத்தத்துடன் இந்த பள்ளி பெரும் பேறு பெற்றதாக அமையும் என்று நான் எண்ணி ஆசைப்படுகிறேன். இந்த நிறுவனத்தின் உயர்மிகு உலமாக்கள் அதற்கு வழி வகுத்து கொடுக்க வேண்டும் என இந்த நல்ல வேளையில் அவர்களை வேண்டிக் கொண்டு, இந்த விழாக்கள் சீரோடும் சிறப்போடும் நடை பெற்று முடிய எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் து ஆ செய்கிறோம். வாழ்த்துக்கள்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross