Re:... posted byசாளை பஷீர் (மண்ணடி , சென்னை)[01 May 2013] IP: 180.*.*.* India | Comment Reference Number: 27157
நானும் இச்செய்தியை பதிந்த நண்பர் ஸாலிஹும் ஒரு நாள் காலை உலாவின் போது ஒரு பொருள் கடற்கரை மண்ணில் புரண்டு கிடந்ததை பார்த்தோம்.
என்னவென்று கிட்ட போய் பார்த்தால் பெண்கள் பயன்படுத்தும் புது உள்ளாடைதான் அது. மிகவும் அதிர்ச்சியாக இருந்தது.
நமதூர் கடற்கரையானது நாளுக்கு நாள் இரவும் பகலும் சமூக விரோதிகள் கொட்டமடிக்கும் இடமாக மாறி வருகின்றது.
போதா குறைக்கு உள்ளூர் பண்பாட்டிற்கு எதிராக பெண்களின் குளியல் , இளம் ஆணும் பெண்ணும் கை கோர்த்து செல்லுதல் , கடற்கரைக்கு வரும் பெண்களை தீய பார்வை பார்த்தல் என பிரச்சினை பல்வேறு வடிவமெடுக்கின்றது.
இதற்கெல்லாம் காரணம் நமதூர் கடற்கரையை அழகு படுத்துகின்றேன் எனக்கூறி தேவையற்ற கட்டுமானங்களையும் விளையாட்டு சாதனங்களையும் நிறுவியதுதான்.
கட்டுமானங்களை நிறுவிய கையோடு இது ஓர் சுற்றுலாத் தலம் என நாளேடுகளில் விளம்பரம் வேறு. வானத்தில் போன சனியனை ஏணி வைத்து வீட்டுக்குள் இறக்கிய கதைதான் இது.
காற்று , நிலம் , நீர் , கடல் , மலை , நதி என அனைத்தும் அனைத்து உயிர்களுக்கும் பொதுதான்.
பொது என்பதற்காக அவை அமைந்திருக்கும் பகுதியில் உள்ள மக்களின் தேவைகள் ,சௌகரியங்கள் , உள்ளூர் நடைமுறைகள் , பழக்க வழக்கங்கள் , பண்பாடுகள் போன்றவற்றை மதிக்காமல் வருவோம் போவோம் என செயல்படுவது நல்லதல்ல.
நாளை இதுவே தீவிரமான சட்ட ஒழுங்கு பிரச்சினையாக மாறுவதற்கு எல்லா வாய்ப்புகளும் உண்டு.
கடற்கரை கட்டுமானங்களை அகற்ற வேண்டும். சிறு கடைகளை மணற் பரப்பை விட்டு அப்புறப்படுத்த வேண்டும்.
ஊரில் உள்ள கல் கட்டிடங்களின் வெப்பம் தாங்க முடியாமல்தான் கடற்கரைக்கு வருகின்றோம். அங்கேயும் போய் யாராவது போய் கட்டுமானம் செய்வார்களா ?
வானத்திற்கு வர்ணம் பூச முயன்றவனின் கதையைப் போல பொருத்தமற்ற செயல் இது .
எனது சிறு பருவத்தில் கடல் மணலானது தூய வெண்மையோடும் நீளமான வெண் சீப்பு போன்ற கணவா மீன் ஓடுகளுமாக அழகாக காட்சியளிக்கும்.
இன்று கஞ்சிக்கடைகளின் கரி அடுப்பின் கருந்துகள்கள் , கஞ்சி குடித்த குவளை , காலி குடி நீர் உறைகள் , போதா குறைக்கு மது குப்பிகள் என கடற்கரை ரத்தக் கண்ணீர் வடிக்கின்றது.
தாரங்கதார தொழிற் சாலை கடலை அழிக்கின்றது.
கடற்கரையை சீரழிக்கும் பொறுப்பை பொது மக்களாகிய நாம் எடுத்துக் கொண்டோம்.
கடற்கரையின் நிறமே மாறிப்போய் விட்டது. அழிந்து விட்டால் திரும்ப உண்டாக்குவதற்கு இயற்கை வளங்கள் ஒன்றும் தொழிறசாலைகளில் தயாரிக்கப்படுபவை அல்ல.
எங்களுக்கு மாசில்லாத பயமில்லாத எங்கள் கடற்கரை திரும்ப கிடைக்க வேண்டும்.
கடந்த கால நகர் மன்றம் செய்த இந்த தவற்றிற்கு தற்கால நகர்மன்றமும் மாவட்ட நிர்வாகமும் பரிகாரம் தேட வேண்டும்.
பண்பாட்டு ரீதியான பிரச்னைகளுக்கான தீர்வை கடற்கரை பயனாளிகள் சங்கத்திடம் ஆவலுடன் எதிர் பார்க்கின்றோம்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross