செய்தி: நகருக்கு நலத்திட்டங்கள் வழங்கிய தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவிக்கும் நகர்மன்ற சிறப்புக் கூட்டம்! காரசாரமான விவாதங்களுடன் ஏகமனதாக தீர்மானம் நிறைவேறியது!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
இன்னும் ஏற்றமிகு காலத்திற்காக ஏங்கும். posted byமுஹம்மது ஆதம் சுல்தான் (YANBU)[03 May 2013] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 27192
நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும் இனி நடப்பவை நல்லவையாக நடக்கட்டும் என்ற பெருந்தன்மை கலந்த பெருத்த எதிர்பார்ப்போடு என்னுடைய கருத்தை முந்திய செய்தியாக இந்த இணயதளத்தில்தான் பதிவு செய்தேன். ஆனால்........
நகராட்சியின் நிகழ்வு அசைவு (வீடியோ) வை பார்த்த நான் பெருத்த ஏமாற்றம் அடைந்தேன்!
பெரும்பாலான உறுபினர்களின் உணர்வுகள் ஒரு சதவீதம் கூட மாறாமல் இன்னும் அவர்களின் இயல்பான நிலையிலேயே நிலைத்திருக்கிறார்கள்! அல்லாஹ்தான் காப்பாற்ற வேண்டும் நம் ஊரை!
2 வது குடிநீர் திட்டமானது கலைஞர் ஆட்சியிலிருந்தே திட்டம் தீட்டப்பட்டு, அதற்குறிய தீர்க்கமான வேலைகளெல்லாம் முழு மூச்சாக நடைப்பெற்றது என்பது நடுநிலை காயலர்களுக்கு தெரிந்த உண்மையாகும்!
இத்திட்டம் நம்ஊருக்கு வரவேண்டும் என்று அரும்பாடுபட்ட சகோதரர்கள் S.I.காதர் அவர்கள், ஜைனுதீன் அவர்கள் காயல் மகபூபு அவர்கள் காயல் அமானுல்லா அவர்களோடு மற்றும் பல சகோதர்கள் இன்றுவரை நிலையான சாட்சிக்குறியவர்கள் ஆவார்கள்!
ஆகவே, இத் திட்டத்திற்கு நன்றி கூறும் தீர்மானத்தை தி.மு.க.வைத் தவிர்த்து நிறைவேற்ற நகராட்சி முன் வருமேயானால், இந்த நன்றி கெட்ட உணர்வை நாடறிய நகராட்சி தலைவி முதல் அனைத்து உறுப்பினர்களையும் எதிர்த்து முச்சந்தியில் மேடைபோட்டு முழு கண்டனத்தையும் மக்களுக்கு தெரிவிக்க தயங்க மாட்டோம்!
நகராட்சி மன்ற கூட்டத்தில் தலைவியைப் பார்த்து,
பேசியது: “போதும்,போதும் உட்காருங்கள், அவங்களை உட்க்காரச் சொல்லுங்கள், உட்டா ரொம்ப பேசிக்கொண்டே போகிறார்கள்” என்ற உரத்த குரலோடு கட்டளையிடும், "பாரட்டலா" பட்டம் சற்று பிசகிய 10ஆம் வார்டு உறுப்பினரின் கிண்டல் கலந்த கூத்தடிப்பை காண நேரத்து!
நகராட்சி தொடங்கிய 2 வது மாதத்திலேயே இவர் தலைவியைப் பார்த்து, எங்கள் கோரிக்கையை ஏற்க மறுத்தால், நீங்கள் வீட்டுக்கு செல்லுங்கள நாங்கள் துணைத் தலைவரை வைத்து தீர்மானத்தை நிறைவேற்றிகொள்வோம் என்று உயரிய யோசனை சொன்ன வெற்றிவேந்தன்,
அதனால்தான் என்னமோ
தேர்தலில் ஒரு அரசியல்வாதி தன் குடும்பத்தார்களோடு களம் இறங்கி, தன் ஆசானுடைய ஆட்காட்டி விரல் ஆணைக்கு அடியேன் சரணம் என்று "அரும்" பாடுபட்டு அந்த வார்டை வெற்றிபெற செய்திருக்கிறாரோ?
அல்லாஹ் அனைத்தும் அறிந்தவன்!
இன்னும் ஏற்றமிகு காலத்திற்காக ஏங்கும்,
முஹம்மது ஆதம் சுல்தான்!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross